ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...

மாணவியின் உயிரின் விலை ஒரு லட்சம் ரூபாய்

தமிழக முதல்வர் தாயுள்ளதோடு இந்த நிகழ்வு நடந்து நன்கு நாட்களுக்கு பிறகு அறிவித்து உள்ளார்கள். துயரத்தில் இருந்து மீள நான்கு நாட்கள் ஆனதோ?

 

தூத்துக்குடி: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ1 லட்சம்- முதல்வர் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மாணவி புனிதாவின் குடும்பத்துக்கு ரூ1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புனிதா குடும்பத்துக்கு…

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் என்பவரின் மகள் மாணவி புனிதா 20.12.2012 அன்று பாலியல் பலாத்கார முயற்சிக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

என்ன நடக்கிறது தமிழகத்தில்?

தமிழக முதல்வர் சமிபத்தில் அறிவித்துள்ள சட்ட திருத்தம் அவர் எவ்வளவு பெரிய அறிவாளி, மக்களின் மீது பற்று கொண்டுள்ளார் என்பதை உறுதி படுத்தி உள்ளது.

Continue reading…

சுப்பிரமணிய சாமி என்று ஒரு ‘ஜென்மம்’: துரைமுருகன் கடும் தாக்கு

இது 2011-ம் வருடம் பிப்ரவரி மாதம் ஒரு தி.மு.க அடிமை சுப்ரமணிய சுவாமி பற்றி திட்டி அனுப்பிய அறிக்கை.

இந்த நேர்மை அற்ற மனிதர்களுக்கே பதில் சொல்ல முடியாத நீர் எல்லாம் இந்த நாட்டை திருத்த வந்து விட்டீர். இது இந்த நாட்டுக்கு கிடைத்த சாபம்.

Source : http://tamil.oneindia.in/news/2011/02/08/durai-murugan-questiones-subramaniam-swami-aid0090.html

சென்னை: கருணாநிதியைப் பற்றி, 5 முறை தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த ஒரு மூத்த அரசியல்வாதியைப் பற்றி , சுப்பிரமணிய சாமி என்ற ஜென்மம் அநாகரிகமாக விமர்சித்திருப்பது, அவருக்கு அதிக அளவுக்கு கொழுப்பு’ ஏறிவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது என்று திமுக துணை பொதுச்செயலாளரும், சட்ட அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.

Continue reading…

சுப்ரமணிய சுவாமி – மக்களின் கருத்துகள்

காமெடி பீஸ் சுப்ரமணிய சுவாமி உளறுகிறார். அப்படி பார்த்தால் அந்த அமெரிக்க தரும் பலகலை கழக பேராசிரியர் வேலையை எதற்கு செய்கிறார். தரங்கெட்ட அரசியல் புரோக்கர் இந்த சுப்ரமணிய சுவாமி. கிருஸ்துவ மதத்து வெள்ளை காரியை மணந்து கொண்டு இந்துத்துவ வாதம் பேசி ஊரை ஏமாற்றும் பேர்வழி. அமெரிக்காவின் C I A அகண்டாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பு அமைப்புகளை பெற்றுக்கொண்டு தமிழருக்கு விரோதமாகவும் இந்தியாவுக்கு விரோதமாகவும் பேசும் சந்தர்ப்பவாதி இந்த சு சாமி.

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?id=427264

இலங்கைக்கு எதிரான தீர்மானம் : சுவாமி பகீர் கருத்து

நாக்பூர் : இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாது என்று ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி கூறியுள்ளார். நாக்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த சுவாமி கூறியதாவது, அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதன் மூலம், அமெரிக்கா செய்து வரும் அராஜக செயல்களுக்கு ஆதரவு அளித்தது போல் ஆகும். இது, இந்தியாவை, அமெரிக்காவிடம் மேலும் அடிமைப்படுத்தும் நிகழ்வாக மாறும். போர்க்குற்றம் புரிந்ததற்காக, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் போன்று, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் விமானத் தாக்குதல் நடத்தி, பல்லாயிரக்கணக்கானோரை பலி வாங்கி வரும் அமெரிக்காவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுப்ரமணிய சுவாமியும் அவரின் அயோக்கிய தனமும்

இரண்டாம் காந்தியாக அறியப்பட்ட ஜெயபிரகாஸ் நாராயண் அவர்களால் ஆரம்பிக்கபட்ட ஜனதா, இன்று ஒரு அரசியல் தரகர், தேசதுரோகியின் கையில்.

Continue reading…