சுப்பிரமணிய சாமி என்று ஒரு ‘ஜென்மம்’: துரைமுருகன் கடும் தாக்கு

இது 2011-ம் வருடம் பிப்ரவரி மாதம் ஒரு தி.மு.க அடிமை சுப்ரமணிய சுவாமி பற்றி திட்டி அனுப்பிய அறிக்கை.

இந்த நேர்மை அற்ற மனிதர்களுக்கே பதில் சொல்ல முடியாத நீர் எல்லாம் இந்த நாட்டை திருத்த வந்து விட்டீர். இது இந்த நாட்டுக்கு கிடைத்த சாபம்.

Source : http://tamil.oneindia.in/news/2011/02/08/durai-murugan-questiones-subramaniam-swami-aid0090.html

சென்னை: கருணாநிதியைப் பற்றி, 5 முறை தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த ஒரு மூத்த அரசியல்வாதியைப் பற்றி , சுப்பிரமணிய சாமி என்ற ஜென்மம் அநாகரிகமாக விமர்சித்திருப்பது, அவருக்கு அதிக அளவுக்கு கொழுப்பு’ ஏறிவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது என்று திமுக துணை பொதுச்செயலாளரும், சட்ட அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்பிரமணியம் சுவாமி என்பவர் யார், அவருடைய குணாதிசயங்கள் என்ன என்பதை இந்திய நாட்டு மக்கள் நன்கறிவார்கள். தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் எல்லாம் தான் ஏதோ மெத்தப் படித்த மேதாவி’ என்பதை போல காட்டிக்கொள்பவர். அரசியலில் கூடு விட்டு கூடு பாயும் பேர்வழி. நாடு விட்டு நாடு போய் நஞ்சை கொட்டிவிட்டு வரும் ஜென்மம்.

ஒரு கட்சியில் கூட நிலையாக நிற்காத அரசியல் நாடோடி. ஆதாயம் கிடைக்கிறது என்றால், யாருக்கும் பல்லக்கு தூக்கும் வாடகை மனிதர். விளம்பரம் கிடைக்கும் என்றால் மனிதக் கழிவையும் கூட தொடத் துணியும் அற்ப பேர்வழி.

பொதுவாக சொல்லப்போனால் இந்தியாவில் ஒரு முதிர்ந்த அரசியல் ஜோக்கர் என்று கூறலாம். ஆனால், அவருக்கு தான் ஒரு அறிவாளி மேதை என்கிற நினைப்பு. அதனால் எதிலும் மூக்கை நுழைக்கலாம் என்கின்ற அரிப்பு. அந்த அரிப்பின் விளைவுதான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு வழக்கைத் தொடுத்து அந்த வழக்கில் கருணாநிதியின் பெயரையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அவர் இப்படித்தான் அந்த அம்மையாரைப்பற்றி விமர்சனம் செய்தார். அதற்காக அவர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அதிமுகவின் மகளிர் அணியினர் அங்கே கூட அவருக்கு தகுந்த’ வரவேற்பு ஒன்றினை அளித்து, அப்போதே அது ஏடுகளில் எல்லாம் வெளி வந்தது. அது மாத்திரமல்ல, அந்த மனிதர் தமிழ்நாட்டிற்குள் எங்கே சென்றாலும் அடி விழும் என்ற அச்சம் ஏற்பட்டு, அவர் நமது கழகத் தோழர்களிடம் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

காவல் துறையினரின் பாதுகாப்பு அவருக்கு இன்றளவும் உள்ளது. அந்த பாதுகாப்பு மட்டும் இல்லாவிட்டால் அவர் ஈடுபடும் நடவடிக்கைகளுக்கு ஊருக்கு ஊர் தர்ம அடி விழும். சுப்பிரமணியம் சுவாமியை பொறுத்தவரை ஒரு பெண் மீது திராவகம் வீசி விட்டு, அந்த பழியை வேறு சிலர் மீது போட்டுவிட்டு தப்பித்துக் கொண்டவர்.

5.2.2011 அன்று சி.பி.ஐ. நீதிமன்றத்திலே ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலே நீதிபதியிடம் அதிலே வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கிறது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கூற, உடனே நீதிபதி வேறு சிலர் என்றால் யார் அவர்கள் என்று வினவ, உடனே இவர் முதல் அமைச்சர் கருணாநிதியின் பெயரை சொல்லியதோடு, அதே கருத்தை வெளியிலும் வந்து செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

சுப்பிரமணியம் சுவாமி சி.பி.ஐ. நீதிமன்றத்திலே கருணாநிதியின் பெயரை சொல்லியது மாத்திரமல்ல, வெளியே வந்து செய்தியாளர்களிடமும் அந்தக் கருத்தைச் சொல்லி, அந்தப் பேட்டி தொலைக்காட்சிகளிலே காட்டப்பட்டது மாத்திரமல்லாமல் ஏடுகளிலும் வெளிவந்துள்ளது. அதை வைத்துத்தான் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், முதல் அமைச்சர் கருணாநிதிக்காக சுப்பிரமணியம் சுவாமிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது வழக்கறிஞர். ஆனால், அதை கருணாநிதியே அனுப்பியது போல நினைத்துக் கொண்டு மீண்டும் பதில் சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்திற்குள் சொன்னதற்காக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட முடியாது, அது கூடத் தெரியாமல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டதாகவும், அது நீதிமன்றக் கண்டனம் என்றும் விஷயம் தெரியாமல் பதில் சொல்லி, அது சில ஏடுகளிலே வெளிவந்துள்ளது.

கருணாநிதியைப் பற்றி, 5 முறை தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த ஒரு மூத்த அரசியல்வாதியைப் பற்றி , இந்த ஜென்மம் அநாகரிகமாக விமர்சித்திருப்பது, அவருக்கு அதிக அளவுக்கு கொழுப்பு’ ஏறிவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது.

நீதிமன்றத்தில் இவர் எதை வேண்டுமென்றாலும் பேசட்டும், அதைப் பற்றி நாம் கருத்துக் கூற விரும்பவில்லை. ஏன் என்றால், நீதி மன்றத்தில் சொன்னதற்கு நோட்டீஸ் அனுப்ப முடியாது என்பது நமக்கும் தெரியும். ஆனால், நீதிமன்றத்தில் சொன்ன அதே கருத்தை இவர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறியதைப் பற்றித்தான் வழக்கறிஞர் ராமன் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். எனவே, அந்த நோட்டீசுக்கு இவர் பதில் கூற முன் வரட்டும்.

இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்