March 2011

எல்லாக் கட்சிகளும் உங்கள் ஏவல் கூவல்களா? – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

அன்பிற்கினிய சகோதரி… வணக்கம். வளர்க நலம்.

உங்களுக்கு இவ்வளவு விரைவில் இன்னொரு கடிதம் எழுத நேரிடும் என்று நான் எதிர்பார்க்க​வில்லை. நீங்கள் காலம் தந்த பாடத்தில் ஞானம் பெற்றிருப்பீர்கள் என்று நம்பினேன். உங்கள் அணுகு​முறையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று மக்களும் நம்பி மகிழ்ச்சிகொண்டனர். ஆனால், எந்த வகையிலும் நீங்கள் மாறவே இல்லை என்ற அதிர்ச்சி தரும் உண்மை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை நீங்கள் கையாளும் முறை கவலை தருகிறது. உங்கள் ஏவல் கூவல்களாகவும், எடுபிடிகளாகவும் எல்லாக் கட்சிகளும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
Continue reading…

To, விஜயகாந்த், FROM, தமிழருவிமணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்!

‘மக்களோடும் தெய்வத்தோடும் மட்டும்தான் எனக்குக் கூட்டணி’ என்றவர் நீங்கள். எந்த

அரசியல் கட்சியும் தேர்தல் களத்தில் தனித்து நிற்கத் தயங்கியபோது, மாநிலம் தழுவிய மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தனித்து நின்ற உங்கள் துணிச்சல் மனம் திறந்த பாராட்டுக்கு உரியது. கூட்டணி அரசியலில் அனைத்துக் கட்சிகளும் குளிர் காயும்போது, நீங்கள் மட்டும் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டே இருந்தால், கச்சேரி கேட்கும் ரசிகர் கூட்டம் காலப்போக்கில் குறைந்துவிடும் என்ற அச்சம் உங்களை அலைக்கழித்துவிட்டது.
கேப்டன்… எது சாத்தியமோ, அதை ஒழுங்காகச் செய்வதற்குப் பெயர்தான் அரசியல். ‘politics is the art of possible’ என்பதுதான் அரசியல் வகுப்பின் அரிச்சுவடி.
Continue reading…

மருத்துவர் ராமதாஸுக்கு ஒரு திறந்த மடல்! – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் எந்த அணியில் நீங்கள் இருப்பீர்கள் என்று இறுதி நேரம்

வரை அரசியல் கட்சித் தலைவர்களையும், வாக்காளர்களையும் ஒரு தெளிந்த முடிவுக்கு வர முடியாமல் திகைப்படையச் செய்வதில், உங்களுக்கு இணை சொல்ல இன்னொ​ருவர் இல்லை!
Continue reading…

ராகுல் காந்திக்கு ஒரு திறந்த மடல்… – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களுக்கு… வணக்​கம். வளர்க நலம்!

மூத்து முதிர்ந்து தளர்ந்த நிலையில் தள்ளாடும் காங்கிரஸுக்கு இளைய ரத்தம் பாய்ச்சத் துடிக்கும் உங்களுக்கு, நான் கடிதம் வரைவதற்கு ஒரு காரணம் உண்டு!

Continue reading…

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!

நன்றி: ஜூனியர் விகடன்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்.

உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும்
இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்! தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.
Continue reading…