March 2013

சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரி

234 சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏக்கள் இ.மெயில் முகவரியுடன் நியமன எம்.எல்.ஏவின் முகவரியும் சேர்த்தும் மொத்தம் 235 எம் எல் ஏக்களின் இ. மெயில் முகவரி கீழே கொடுக்கபட்டுள்ளது:

இந்த முகவரியில் உங்கள் தொகுதி எம்.எல்.ஏவிற்கு புகார் மனு அனுப்புங்கள். அதற்காக புகார் என்ற பெயரில் கண்டதையும் அனுப்பி வெறுப்பேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்…..
Continue reading…

பொருளாதார புறக்கணிப்பு :: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

ஈழ போராட்டத்தை அழித்ததின் பின்னணியில் ..ஏர்டெல் .. தயவு கூர்ந்து நேரம் ஒதுக்கி முழுமையாக படியுங்கள் …….

***************************************************…**********

பொருளாதார புறக்கணிப்பு :: ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்?

கடந்த வருடம் நடந்த இனப்படுகொலைக்கு பின்னனியில் இருந்த சதிகளை கண்டுபிடித்து மாறிவரும் உலகஒழுங்கை புரிந்து கொண்டு செயல்பட வெண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. போருக்கு பின்னனியில் செயல்பட்ட இந்திய காங்கிரஸ் அரசின் தனிப்பட்ட வெறுப்பு, அரசு அதிகாரிகளின் தமிழின எதிர்ப்புடன் சேர்ந்து மனிதநேயமற்ற முறையில் சந்தை லாபத்திற்காக இந்திய அரசு செயல்பட்டதும் அதன் துணையாக இந்தியாவின் நிறுவங்கள் வேலைசெய்ததையும்/செய்வதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த தமிழினப்படுகொலைக்கு துணையாய் நின்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதார காரணிகளை நாம் தொடர்ச்சியாக கண்டறிந்து அதை எதிர்த்து போராடுவது நமக்கு கட்டாயமாகிறது. இந்த வழியில் நமது எதிர்வினைகள் இந்திய-சிங்கள கூட்டு திட்டங்களை முறியடிக்க கூடியதாய் இருக்க வேண்டும். நமது ஆற்றலை ஒருங்கிணைப்பதற்கு நமது தொடர்ச்சியான போராட்டங்கள் உதவும். போர்முடிந்த பிறகு நடத்தப்படும் நமது போராட்டங்களை, புரிதல்களை, குறிக்கோள்களை இந்த அரசாங்ககளுக்கு தெளிவாக உணர்த்தவேண்டி உள்ளது. நமது புரிதல்கள் இனிவரும் காலங்களில் நம்மை, நமது போரட்டஙளை தற்காத்துக்கொள்ள பெரிதும் துணை புரியும். இதன் அடிபடையிலேயே இந்த ஏர்டெல்லிற்கு எதிரான நமது போரட்டம் அமைகிறது. இது நமக்கு வருங்காலத்தில் சரியான புரிதல்களோடு போராட்டம் நடத்தும் பயிற்சியை அளிக்கவும் செய்யும்.

தூத்துக்குடி to ஜப்பான் – கல்வியில் சாதனை சரித்திரம்

ஒரு பாத்திரக் கடை வியாபாரியின் மகன், மேடு பள்ளங்கள் நிறைந்த கல்விப் பாதையைக் கடந்துவந்து முன்னேறிய சாதனைச் சரித்திரம் இது! 

‘ஜப்பான் அறிவியல் மேம்பாட்டுக் கழகம்’ பன்னாட்டு அறிவியல் கருத்தரங்கை ஆண்டுதோறும் நடத்துகிறது. அதில் கலந்துகொள்ள ஆசிய நாடுகளில் இருந்து, முனைவர் பட்டம் முடித்த ஆய்வாளர்களை தேர்வுசெய்கிறது. அவர்​களுடன் நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள் கலந்துரை​யாடுவார்கள். இந்த வருடம் உயிரியல் துறையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற 120 பேரை கருத்தரங்குக்கு அழைத்​துள்ளது. அதில் இந்தியாவில் இருந்து எட்டு பேரைத் தேர்வு​செய்திருக்கிறது. அதில் தென் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர் ஒரே ஒருவர்தான்.

Continue reading…