இலங்கைக்கு ராணுவ உபகரணங்களை இந்தியா வழங்குவது எதற்காக என்பதை இந்த இன துரோகி சு.சுவாமியும் அவன் சார்ந்த பிஜேபியும் விளக்கவேண்டும்?.அவைகள் இன்னும் குற்றுயுரும் குலையுருமாக இருக்கும் சில தமிழர்களை அழிக்கவா? அல்லது தமிழக மீனவர்களை கொலை செய்யவா? அல்லது பாகிஸ்தானுக்கு இலங்கை காரன் விக்கவா? எதற்கடா இன்னும் கொடுத்து கொண்டு உள்ளீர். முட்டாள் மத்திய அரசே.
Continue reading…
October 2014
மெல்லத் தமிழன் இனி…10 – மதுவிலக்குப் போராட்டம்
டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஒன்றில் பொறுப்பில் இருக்கிறார் நண்பர் தனசேகரன். அவர் சொன்ன தகவல் மிகவும் அதிர்ச்சி தருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 2,500 டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துவிட்டார்கள். பெரும்பாலும் இயற்கையாக இல்லை. லாரி மோதி, கல்லீரல் வீங்கி, குடல் வெடித்து, தற்கொலை செய்துகொண்டு… இப்படி விதம்விதமாக. அச்சம் தருகிறது அகால மரணங்களின் பட்டியல்.
காரணம், மது அரக்கன். அவர்களுக்கெல்லாம் வயது 30 முதல் 40 வரை மட்டுமே. சாக வேண்டிய வயதா இது? இந்திய ஆண்களின் சராசரி வயதே 64தானே. அதில் பாதியைக்கூட வாழவில்லையே இந்த இளைஞர்கள். அநேகமாக, படித்த பட்டதாரி இளைஞர்கள். இவர்கள் ஒவ்வொருவரின் கதையையும் கேட்டால் கண்ணீர் வருகிறது.
Continue reading…