ரோம் நகரம் தீ பிடித்து எரிந்தபோது, பிடில் வாசித்தான் நீரோ மன்னன்’ என்கிற வரலாற்று வாசகம்… தற்போதைய, டெல்டா விவகாரத்துக்கு கனகச்சிதமாக பொருந்தும்! வரலாறு காணாத வறட்சியால்… கடன் வாங்கி, கண்ணீர்விட்டு வளர்த்த பயிர்கள் கருகுவதைக் காண சகிக்காமல், விரக்தியின் உச்சக்கட்டமாக உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் டெல்டா மற்றும் அதையட்டிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிலர். இத்தகையக் கொடுஞ்சூழலில்… டெல்டா பகுதியை, ஏதோ ரட்சகர் போல ஜெயலலிதா காப்பாற்றிவிட்டதாக பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வண்ண விளம்பரங்கள் பளபளப்பதை வேறு எப்படி சொல்ல முடியும்?
Continue reading…
ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...
50 சென்ட்… மாதம் 30 ஆயிரம்…
பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம்..!
த. ஜெயகுமார்,படங்கள்: பீரகா வெங்கடேஷ்
இயற்கை விவசாயத்தில் பட்டதாரி இளைஞர்கள்…
கூட்டுப் பண்ணையில் கீரைகள்…
விரைவில் இயற்கை விவசாயச் சந்தை…
விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து… பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்… பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்… ஆச்சர்யம்தானே!
Continue reading…
”அவ்வளவு பணம் கொடுக்க முடியாது… கல்லூரியை உங்கள் பெயருக்கு எழுதி வைக்கிறேன்”
மருத்துவமனைகள் அநியாயமாகப் பணம் பிடுங்குகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் இருந்தே ஊழ லுக்கான அஸ்திவாரங்கள் ஆரம்பம் ஆகின்றன என்பதைத்தான் சமீபத்திய சி.பி.ஐ. ரெய்டுகள் உணர்த்துகின்றன!
கடந்த சில மாதங்களாகவே சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு சி.பி.ஐ. போலீஸுக்கு சில ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. முக்கியமாக இரண்டு பேர் மீது. ஒருவர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன். அகில இந்தியப் பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர். எஸ்.ஆர்.எம். பல் மருத்துக் கல்லூரியின் டீன் (பொறுப்பு) ஆகவும் இருந்தவர். இன்னொருவர் அரசியல் ஆத ரவு பெற்ற சீனியர் டாக்டர். முருகேசனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஊதுகுழலாகச் செயல்படுகிறவர்.
‘அமைச்சருக்குப் பங்கு கொடுக்கணும்!’
நன்றி : ஜூனியர் விகடன்
பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மீது ஈரோட்டில் இருந்து ஒரு புகார்!
ஈரோடு மாவட்டம் ஊத்துக்குழி அருகே 433 ஏக்கரில் பாலதொழுவுக் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் பல ஆண்டுகளாக அகற்றப்படாத முள் அடிக்கட்டைகளையும் மரங்களையும் வெட்ட, பொதுப்பணித் துறை மூலம் டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டர் விவ காரத்தில்தான் அமைச்சரின் தலை உருள்கிறது.
என்று விடிவு தமிழுக்கு…
கடந்த 2-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சிவக்குமாருக்கும் வழக்கறிஞர் பாரிக்கும் இடையே நடந்த வாதப் பிரதிவாதம்தான் நீதிமன்றத்தில் தமிழுக்கான இடம் என்ன என்பதை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. அன்று நீதிமன்றத்தில் நடந்ததை அப்படியே தருகிறோம்.

Tamil books Online