ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...

தமிழக அரசுக்கு காந்திய மக்கள் இயக்கம் வேண்டுகோள் & எச்சரிக்கை

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே,

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில், மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்திற்கு முட்டை வாங்குவதில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற, இந்த ஆண்டும் திட்டமிடப்பட்டு கொண்டிருக்கின்ற ஊழலை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயர் சொல்லக்கூடிய ஒரு சில நல்ல திட்டங்களில் இதுவும் ஒன்று, இதிலும் ஊழல் செய்வோம் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் அப்படியே தொடரும் எனில், உங்களுடைய ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

அன்புடன்,

காந்திய மக்கள் இயக்கம்

இன்று அக்டோபர் 11, இரண்டாம் காந்தி ஜெயபிரகாஷ் நாராயணன் பிறந்த தினம்

இன்று அக்டோபர் 11, ஜெ.பி என்று அழைக்கப்பட்ட, ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் பிறந்த தினம்.இரண்டு முறை பிரதமர் பதவி தன்னை நோக்கி வந்தும், அதை துச்சமென மதித்து மக்கள் பணி செய்வது மட்டுமே தனது கடமையாகக் கொண்டு வாழ்ந்த வரலாற்று நாயகன், இரண்டாம் காந்தி ஜெயபிரகாஷ் நாராயணன்.

ஜேபி அவர்களைப் பற்றி காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் சொற்பொழிவு.

1906 #மகளிருக்கான முக்கியமான பதிவு

(வாட்ஸ்அப் மூலம் வந்த செய்தி)

#மகளிருக்கான முக்கியமான பதிவு


*1906-என்கிற எண்ணின் அத்தியாவசியம் பற்றி நம்மில் எத்தனை நபர்களுக்குத் தெரியும்*
 ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம் ஏற்பட்டது. நான் எரிவாயு சிலிண்டரை மாற்ற வேண்டியிருந்தது. 
 *புதிய சிலிண்டரை இணைத்து இயக்கிய போது, ​​நான் வாயு கசிவதை உணர்ந்தேன்.*
  நான் புதியதாக மாற்றிய எரிவாயு சிலிண்டரின் திறப்பானை Lock செய்து மூடிவிட்டேன்.
*உடனடியாக நான் ஒன்று அல்லது இரண்டு ஏரியா ஏஜென்சிகளை அழைத்தேன், ஆனால் அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர்கள் திங்களன்று ரிப்பேர் செய்ய ஆட்கள் வருவார்கள் என்று சொன்னார்கள்.*
 ஏதேனும் அவசர எண் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்பினேன், எனவே Google ஐ முயற்சித்தேன். கூகிள் *1906* என்ற என்னை அழைக்கச் சொல்லி காண்பித்தது. நான் *1906* என்ற எண்ணிற்கு முயற்சித்தேன். ஒரு பெண்மணி தொலைபேசியை எடுத்து பேசினார். என் பிரச்சினையை அவரிடம் விளக்கினேன். ஒரு மணி நேரத்திற்குள் ஒரு நபர் பணிக்கு வருவார் என்று அவர் கூறினார். வருகைக்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும், ஒரு வேளை *குழாய் (Tube) மோசமாகிவிட்டால் ஒழிய நான் அவருக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.*
*ஒரு இளம் வயது நபர் அரை மணி நேரத்திற்குள் வந்து, எரிவாயு சிலிண்டரை சரிபார்த்து சிலிண்டருக்கு ஒரு புதிய வாஷரை மாற்றினார்.* 
*இது ஒரு சிறிய வேலை என்றார். அவர் எந்த ஊதியத்தையும் ஏற்கவில்லை.*
 *இந்த சேவை மத்திய அரசிடமிருந்து எந்த நேரத்திலும் வழங்கப்படுகிறது.* 
 *அதே பெண்மணி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் போன் செய்து, வேலைக்கு வந்தாரா, தங்களுடைய பிரச்சினையை சரி செய்து தந்தாரா என்று சோதித்தார்*.
 *1906* என்கிற இந்த தொலைபேசி எண்ணை உங்களுக்கு தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 *இது 24×7 சேவையாகும்*