வெள்ளையனை எதிர்த்து வீர முழக்கமிட்டு , தன் சிம்மக்குரலால் வெள்ளை ஏகாதிபத்திய வெறியர்களை நடுநடுங்க வைத்த வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவினைப் போற்றி , என்றும் நம் தேச ஒற்றுமை காத்திடுவோம் !!
புத்தகங்கள்
வணக்கம்
1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்து வலம்புரி ஜான் நக்கீரன் இதழில் ஒரு தொடர் எழுதினார். அதுதான் வணக்கம்.
அரசியல் என்பது சாதாரணமில்லை. இருபக்கமும் கூரான கத்தி. ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களுக்கு லாவகமாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது. வீச வேண்டிய இடத்தில் வீசி மேலே வந்துவிட்டார்கள். கண்ணதாசனுக்கும் வலம்புரிஜானுக்கும் இன்னபிற அரசியல் தோல்வியாளர்களுக்கும் பயன்படுத்தத் தெரியவில்லை அல்லது பயன்படுத்த விரும்பவில்லை. அரசியல் வரலாற்றில் சரி தவறு என்றெல்லாம் எதுவுமேயில்லை. வெற்றி தோல்வி மட்டும்தான் கணக்கு. வென்றவர்கள் வரலாறு ஆகிறார்கள். வரலாற்றுப் புழுதியானது தோற்றவர்களை வேகமாகக் கீழே தள்ளி மண் மூடி புதைத்துவிடுகிறது.
IAS தேர்வும் அணுகுமுறையும்..
” இந்திய நிர்வாக அமைப்பில் மிக உயர்ந்த படிப்பாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ். படிக்க பலரும் விரும்புகின்றனர். சிறந்த நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்பெறும் இத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுவது மிகவும் கடினமானதாகக் கருதப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே எல்லோரும் பயனடையும் வகையில் “ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்” என்ற இந்நூலை வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதியுள்ளார். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு தேர்வுகளுக்கும் பயன்படத்தக்க நூல் இது. “
வெண்முரசு இசைக்கொண்டாட்டம்
மஹாபாரதத்தின் மறு ஆக்கம் – “வெண்முரசு” அற்புதமான தமிழ் நடையில். ஜெயமோகன் அவர்களின் “வெண்முரசு” நாவலைக் கொண்டாடும் விதமாக, அமெரிக்காவிலிருந்து இயங்கும் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் ஒரு நிகழ்ச்சியை
“வெண்முரசு இசைக்கொண்டாட்டம்” என்கிற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்தது…
கடந்த சனிக்கிழமை மாலை காணொலி மூலம் நடைபெற்ற இந்த நேரடி நிகழ்ச்சியில் – இந்த இசை, திரைப்பட இயக்குநர் மணிரத்னம் அவர்களால் வெளியிடப்பட்டது.


Tamil books Online