அரசியல்

மின்தட்டுப்பாடு வானத்தில் இருக்கலாம் தமிழகத்தில் இருக்காது: அமைச்சர் விஸ்வநாதன்

வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு மின் வீட்டு நீடித்தால் …

சேலம்: வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு வானத்தில் கூட மின்தட்டுப்பாடு இருக்கலாம், ஆனால், தமிழகத்தில் இருக்காது என மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.

சேலத்தில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,” தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்கிறது என்பது உண்மைதான். மின்சாரத்தை மட்டும் கொடுங்கள், ஓட்டுக்களை அள்ளிப்போடுகிறோம் என கூறுகிறார்கள். இது முதல்வருக்கும் தெரியும். தமிழகத்தை மின்தட்டுப்பாடே இல்லாத மாநிலமாக ஆக்குவேன் என ஜெயலலிதா கூறிவிட்டார்.

மின் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து, வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு இல்லாமல் போய் விடும். வானத்தில் கூட மின்தட்டுப்பாடு இருக்கலாம், ஆனால் தமிழகத்தில் இருக்காது. அதற்கான வேலைகள் புயல் வேகத்தில் நடந்து வருகிறது.

மேட்டூரில் இன்னும் 10 நாட்களில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிவிடும். அதே போல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின் உற்பத்திக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் மின் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும்” என்றார்.

‘வறுமை தெரியாத, பேருந்தில் பயணிக்காத கூட்டத்துக்கு கட்டண உயர்வின் சுமை புரியாதுதான்!’

சென்னை: திடீரென பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டதால், கையில் பணமின்றி மனைவி குழந்தைகளுடன் நடந்தே வீட்டுக்குப் போனார் ஒரு தொழிலாளி.
Continue reading…

மாற்றி மாற்றிப் பேசுவது ஏன்

முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் சிறுபான்மை இனத்தவர் என்பதால் பழிவாங்கப்படுகிறார்’ என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி முதல்வராக இருந்த போது நிழலாக இருந்தவர் ஜாபர் சேட். அவர் மீது தி.மு.க.வினரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கூறினர். அனைத்தையும் குப்பையில் போட்டது தி.மு.க. தலைமை. ‘ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, ஒரு அதிகாரி மீது எடுக்கப்படும் நடவடிக்கையை கருணாநிதி எதிர்ப்பது ஏன்?’ என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது.

இதற்கான விடையைக் கேட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் நெல்லை கண்ணன், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதும் திறந்த மடல் இதோ…
Continue reading…

ஈழம் – ஜெயலலிதா செய்ய வேண்டியது….

ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா

சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இவை செய்தி தாள்கள் கொடுத்துள்ள செய்தியுன் தலைப்பு மற்றும் செய்தி சுருக்கம்.
ஆனால் ஜெயலலிதா அவர்களின் பேட்டி இந்த கருத்தை பிரதிபலிக்க வில்லை என்பது வருத்தம் கலந்த உண்மை.

இதுதொடர்பாக ஜெயா தொலைக்காட்சிக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:
Continue reading…

நாற்காலி அரசியல் ராஜபக்ஷேவை வீழ்த்தாது! -தமிழருவி மணியன்

உலகத் தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ.நா. சபை அறிக்கையின் விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ஈழத்தில் தமிழினம் இரக்கமற்ற முறையில் கொன்று குவிக்கப்பட்டதற்காக, ராஜபக்ஷே அரசு சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நேரம் நெருங்கிவிட்டது. ‘ஆட்சி அதிகார நாற்காலியில் அமரப்போவது யார்?’ என்ற போட்டியில் கடுமையாக ஈடுபட்டுக் களைத்துப்போன நம் தலைவர்கள், தேர்தல் முடிவை எதிர்பார்த்து இளைப்பாறும் வேளையில், பொழுதுபோவதற்கு ஈழம் குறித்த லாவணிக் கச்சேரியில் இறங்கிவிட்டனர்!
Continue reading…