நண்பர்களே,
இதயம் முழுவதும் வலியுடன் எழுதுகிறேன்.
இந்த நிகழ்ச்சி நடந்து ஏறத்தாள ஒன்றரை மாதம் ஆகிறது, தமிழ் சமுதாயம் தூங்கி கொண்டுள்ளது. நம்மால் ஒரு உதவி கூட செய்ய இயலவில்லை. எந்த உதவியும் செய்யாத நாம் அனைவரும் வேஷதாரிகள் மற்றும் அயோக்கியர்கள். கொலைவெறி பாடலை கோடி முறை கேட்கும் நாம் இந்த சகோதிரியின் குரலை கேட்க மறந்தது ஏனோ?
இதை கேள்விபட்டவுடன் ஓடிப்போய் உதவியிருக்க வேண்டாமா? இன்னும் காலம் கடந்து விடவில்லை,
நம்மால் இயன்ற உதவிகளை இனிமேலாவது செய்வோம்.
நண்பர்களே, பிச்சை எடுத்தாவது ஒரு சிறு உதவியை இந்த சகோதரிக்கு அனுப்புங்கள். உங்களுக்காக இல்லாமல் வேறு ஒருவருக்காக பிச்சை எடுப்பது புனிதமானது.
இதுவரை உதவி செய்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி.
உங்கள் உதவிகளை வழங்க இங்கு செல்லவும் : http://www.helpvinodhini.com/#!english/mainPage

Tamil books Online