தமிழக பத்திரிகைகளும் அவைகளின் தரமும் யோக்கிதையும்

நண்பர்களே, காரைக்காலை சேர்ந்த சகோதிரி வினோதினி அவர்கள் மீது ஆசிட் விசப்பட்டது என்பது நமக்கு தெரிந்து இருக்கும்.

இது பற்றிய செய்திகள் தமிழகதின் பல பத்திரிக்கைகளில் வந்துள்ளது, அவற்றை உங்களின் முன்பு அப்படியே தருகின்றேன், நீங்களே அவர்களின் தரத்தையும் யோக்கிதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள், தவறுதலாக கூட இந்த பத்திரிக்கைகளை உங்கள் மகனையோ, மகளையோ படிக்க அனுமதிக்காதீர்.

நக்கீரன் – தமிழகத்தின் முன்னணி மஞ்சள் பத்திரிக்கை

வியாழக்கிழமை, 15, நவம்பர் 2012 (20:2 IST)

காதலிக்க மறுப்பு: பெண் என்ஜினீயர் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் வெறிச்செயல்
http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=86173

காரைக்கால் எம்.எம்.ஜி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் வினோதினி (வயது 23). பி.டெக். படித்த இவர், சென்னையில் தங்கி அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஜெயபாலனின் நண்பர் சுரேஷ்(27). காரைக்காலில் உள்ள கல்லூயில் வினோதினி படித்த போது ஜெயபாலனின் வீட்டுக்கு சுரேஷ் அடிக்கடி வருவது வாடிக்கை.

சுரேஷ், அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்தார். தனது காதலை அவர் வெளிப்படுத்திய போது வினோதினி சம்மதிக்க மறுத்து விட்டார். மேலும் இதுபற்றி தனது குடும்பத்தினரிடமும் தெரிவித்தார். எனவே ஜெயபாலனின் வீட்டுக்கு வர சுரேசுக்கு தடை விதிக்கப்பட்டது.

தீபாவளியையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு வினோதினி சென்னையில் இருந்து காரைக்காலுக்கு வந்தார். குடும்பத்தினருடன் சேர்ந்து பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடினார். பின்னர் 14.11.2012 இரவு, வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டார்.

வினோதினியை வழியனுப்புவதற்காக அவரது தந்தை ஜெயபாலனும், குடும்ப நண்பரான புதுவையை சேர்ந்த பத்மநாபனும் உடன் சென்றனர். 3 பேரும் அந்த பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

காதல் தோல்வியால் ஆத்திரத்தில் இருந்த சுரேஷ், வினோதினியின் வருகையை எதிர்பார்த்து அந்த பகுதியில் மறைந்திருந்தார். அவர் அருகே 3 பேரும் வந்தபோது அவர்களை சுரேஷ் வழிமறித்தார். தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை வினோதினியின் முகத்தில் வீசினார். இதில் வினோதினியின் முகம், கை மற்றும் உடல்பகுதி வெந்து அலறி துடித்தார்.

ஜெயபாலன் பத்மநாபன் ஆகியோர் மீதும் ஆசிட் பட்டதால் காயமடைந்தனர். அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியினர் ஓடிவந்தனர். படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்காலில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வினோதினி அனுப்பி வைக்கப்பட்டார். ஆசிட் வீசியதும் சுரேஷ் அங்கிருந்து ஓடிவிட்டார்.

புதன்கிழமை, 28, நவம்பர் 2012 (15:34 IST)
காதலிக்க மறுப்பு: பெண் என்ஜினீயர் மீது ஆசிட் வீச்சு: பறிபோனது கண் பார்வை
http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=87151

காரைக்காலை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் வினோதினி (23). என்ஜினீயரான இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி வேலைக்கு செல்கிறார்.

வினோதினியை கட்டிட தொழிலாளியான சுரேஷ் (29) என்பவர் ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை வினோதினி ஏற்கவில்லை என்றாலும் சுரேஷ் வினோதினி எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்தார்.

சில மாதங்களுக்கு முன்பு வினோதினி காரைக்காலுக்கு சென்ற போது சுரேஷ் வழி மறித்து ‘தன்னை காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசி கொன்று விடுவேன்’ என்று மிரட்டினார். இதனால் பயந்து போன வினோதினி சுரேஷின் கொலை மிரட்டல் பற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதையடுத்து வினோதினியின் தந்தை ஜெயபால் சுரேஷ் மீது போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சுரேஷை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரித்து அனுப்பினார். இதனால் சுரேஷ் வினோதினியை ஆசிட் வீசி கொல்ல திட்டமிட்டார்.

இந்நிலையில் வினோதினி தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான காரைக்காலுக்கு சென்றார். கடந்த 14-ந்தேதி அவர் தனது தோழியுடன் கடைக்கு சென்றபோது சுரேஷ் திடீரென்று அங்கு ஓடி வந்தார். வினோதினியை மறித்து ‘என்னை காதலிப்பாயா மாட்டாயா? என்று ஆவேசத்துடன் கேட்டார். அதற்கு வினோதினி ‘தயவு செய்து என்னை விட்டு விடு’ என்று கூறி வேகமாக நடந்து சென்றார். அப்போது சுரேஷ் தனது கையில் தயாராக வைத்திருந்த ஆசிட் பாட்டிலை திறந்து வினோதினியின் முகத்தில் வீசினார்.

இதில் அவரது முகம், மார்பு, கைகள், வயிறு போன்ற பகுதிகள் வெந்து போயின. உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக

அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர் ஜெயராமன் தலைமையிலான டாக்டர் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இந்நிலையில் வினோதினியின் கண்ணைச் சுற்றியுள்ள நரம்புகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதால் அவரது 2 கண்களிலும் பார்வை பறிபோனது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுபற்றி டாக்டர் ஜெயராமன் கூறும்போது:-

வினோதினிக்கு 40 சதவீத அளவுக்கு காயம் உள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றாலும் அவரது 2 கண்களிலும் பார்வை பறிபோய் விட்டது. அவரை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆபத்தான கட்டத்தை தாண்டியதும் முகத்தில் ஆபரேசன் செய்து காய தழும்புகள் சரி செய்யப்படும் என்றார்.

 

1. நவம்பர் 16 அன்று அவர் இரவு சென்னை செல்ல பேருந்து நிலையம் செல்லும் பொழுது இந்த நிகழ்வு நடந்தது என்று செய்தி வெளியிட்டு விட்டு, நவம்பர் 28 அன்று எதோ ஒரு புது கதை விட்டு உள்ளாய்.

2. சுரேஷின் வயது என்ன என்பது இங்கு முக்கியம் இல்லையா? சுரேஷின் பிறந்த நாள் 10-7-1981. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த நக்கீரனின் லட்சணத்தை.

தினமலர் – தமிழகத்தின் தினமலம்

“ஆசிட்’ வீச்சுக்கு ஆளான பெண்ணுக்கு செயற்கை கண்கள்
தினமலர் – வெ, 30 நவ., 2012

சென்னை:காதலிக்க மறுத்ததால், ஆசிட் வீச்சு ஆளான, பெண் பொறியாளரின் பார்வை பறிபோனது. காரைக்காலை சேர்ந்த பெண் பொறியாளர் வினோதினி, 27. சென்னையில் பணிபுரிந்துக் கொண்டிருந்த இவர், இம்மாதம், 10ம் தேதி, தீபாவளி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அப்போது, இவருக்கும், இவரை ஒருதலையாக காதலித்து வந்த சுரேஷிற்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுரேஷ், வினோதினியின் முகத்தில், ஆசிட் வீசினார். ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள், இரண்டு வாரங்களாக முயன்றும், வினோதினியின் பார்வையைகாப்பாற்ற முடியவில்லை.

இதுகுறித்து, இம்மருத்துவமனையின், தீக்காய சிகிச்சை நிபுணர் ஜெயராமன் கூறியதாவது:
உயிருக்கு ஆபத்தான நிலையை, வினோதினி கடந்துவிட்டார். ஆனால், ஆசிட் வீச்சில், அவரது, இரு கண்களின் கரு விழிகளும் கருகியதுடன், பார்வை நரம்புகளும் பாதிக்கப்பட்டதால், வினோதினியின் பார்வை பறிபோய்விட்டது. சில மாதங்கள் கழித்து, சேதமடைந்துள்ள அவரின் முகத்தை, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும், பெயரளவிற்கு செயற்கை கண்களை பொருத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு ஜெயராமன் கூறினார்.

மருத்துவ செலவுக்கு திண்டாடும் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட மாணவி

பதிவு செய்த நாள் : டிசம்பர் 19,2012,16:15 IST
மாற்றம் செய்த நாள் : டிசம்பர் 19,2012,16:17 IST

காரைக்கால்: காதலிக்க மறுத்ததற்காக முகத்தில் ஆசிட் வீசப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோதினி என்ற இளம் பெண், தற்போது மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி கஷ்டப்பட்டு வருகிறார். சென்னையில் சாப்ட்வேட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் காரைக்காலைச் சேர்ந்த வினோதினி (23). இவர் மீது ஒருதலையாக காதல் வயப்பட்ட இவரதுநண்பர் சுரேஷ் (24) என்பவர், தனது காதலை மறுத்த ஆத்திரத்தில், கடந்த நவம்பர் 14ம் தேதி, வினோதினி முகத்தில் ஆசிட் வீசினார். இதில் முகம், கழுத்து, கைகள் மற்றும் மார்பு பகுதி முழுவதும் கருகிய நிலையில், பார்வையை முற்றிலுமாக இழந்து தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் வினோதினி. பார்வை முற்றிலும் பறிபோன நிலையிலும், கண்ணில் அவருக்கு பல கட்ட பிளாஸ்டிக் சர்ஜரி ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. அவரது கால் பகுதியிலிருந்து தசை எடுக்கப்பட்டு, கண்ணில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, காரைக்காலில் பள்ளி ஒன்றில் காவலாளியாக பணிபுரியும் அவரது தந்தை, வினோதியின் மருத்துவ செலவிற்காக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். டாக்டர்கள் பல மாதங்கள் வினோதினி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என கூறியிருப்பதால், அவர் நல்ல மனம் படைத்தவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

ஆசிட் வீசியதால் பாதித்த பெண் இன்ஜினியருக்கு அமைச்சர் ஆறுதல்
தினமலர் – தி, 24 டிச., 2012

புதுச்சேரி:ஆசிட் வீச்சில் பார்வை பறிபோனகாரைக்கால் சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் வினோதினியை மத்திய அமைச்சர் நாராயணசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.
காரைக்கால் எம்.எம்.ஜி.,நகர் ஜெயபாலன் மகள் வினோதினி, 22; சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் சைதாப்பேட்டையில் தங்கி இருந்து கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவரை காரைக்காலை சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷ்ஒருதலையாக காதலித்தார். தனது

காதலை ஏற்க மறுத்ததால் தீபாவளிக்கு ஊருக்கு வந்த வினோதினி மீது ஆசிட் ஊற்றினார்.
இதில் வினோதினியின் முகம் மற்றும் உடலின் பல பகுதிகள் வெந்தது. முதலுதவி சிகிச்சைக்கு பின் கீழ் பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோதினியின் கண்கள் பறி போனது. வினோதியின் தந்தை ஜெயபாலன் காரைக்கால் தனியார் பள்ளியில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார்.சிகிச்சைக்கு பணத்தை திரட்ட முடியாமல் வினோதியின் குடும்பத்தினர் திண்டாடுகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வினோதினியை மத்தியமைச்சர் நாராயணசாமி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவரது பெற்றோரிடம் வினோதியின் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு தேவையான 6 லட்சம் ரூபாய் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து பெற்று தருவதாக உறுதியளித்தார்.தனிப்பட்ட முறையிலும் உதவிட வாக்குறுதி கொடுத்தார்.

1. அறிவு கேட்ட தினமலரே, சுரேஷின் வயதும் சரியில்லை மற்றும் சுரேஷ் யாருடைய நண்பர்  என்று எதுவுமே சரியில்லை.
2. வினோதினியின் வயது ஒவ்வொரு செய்தியுளும் ஒவ்வொன்று.

உண்மையின் உரைகல் இங்கே எங்கு உள்ளது என்று காட்ட முடியுமா?