இது அல்லவா ஜனநாயகம்

தாவூத்துக்காக ஆஜராகிய சிபல் தொலைத் தொடர்பு அமைச்சராக இருப்பது நாட்டுக்கு ஆபத்து-ஜெ.

தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது உறவினர்களுக்காக பல வழக்குகளில் வழக்கறிஞராக தற்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆஜராகி இருக்கிறார். கபில் சிபல் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவி வகிப்பது என்பது முரண்பாடுகள் நிறைந்தது. இந்தியாவிற்கு ஏற்பட்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு என்பது மட்டும் தற்போது கேள்வி அல்ல. இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமை தான் தற்போதைய முக்கியமான கேள்வி என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

நண்பர்களே, பாருங்கள் இந்த கபில் சிபல், இன்று நமது தொலைத்தொடர்பு அமைச்சர். இது அல்லவா ஜனநாயகம், இதை அறியாமல் இந்த அம்மையார் என்ன சொல்ல வருகிரார். இந்த நல்ல மனிதனின் ஜூனியர் விகடனுக்கு தந்த 2G உழல் பற்றிய விளக்கம்.

”பத்திரிகைகள் 2ஜி விவகாரம் குறித்து பக்கம் பக்கமாக எழுதக் காரணம் சி.ஏ.ஜி. கொடுத்த அறிக்கை. அது இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. முதலில் வருவோருக்கு முதல் முன்னுரிமை என்று கொடுத்தது தவறு. இந்த ஒதுக்கீடுகளைக் குறைந்த மதிப்பில் கொடுக்கப்பட்டதால், அரசுக்கு மிகப் பெரிய நஷ்டம். இவையே அந்த இரண்டு குற்றச்சாட்டுகள். அரசு சில கொள்கைகளை வைத்துள்ளது. பொதுமக்கள் அதிகபட்சமாகப் பலனடைய அதிக வருவாய் பெறும் நோக்கத்தோடு அரசாங்கம் செயல்பட முடியாது.

தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கத் தேவையான நிலங்களை இலவசமாகக் கொடுக்கிறோம். மின்சாரப் பற்றாக்குறையைத் தடுத்து, உற்பத்தியை அதிகரிக்க, நிலக்கரி குறைந்த விலைக்குக் கொடுக்கப்படுகிறது. அரிசி, கோதுமை விலையைக் குறைக்க, பொது விநியோகத்துக்கு மானியம் கொடுக்கிறது.  

2ஜி ஸ்பெக்ட்ரம் என்கிற அலைக்கற்றை உரிமத்தின் மதிப்பு தொலைத் தொடர்புக் கொள்கையின் அடிப்படையில் பல ஆண்டு​களாகப் பின்பற்றப்படுகிறது. அந்தத் துறையில் ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கி, சேவை அதிகரிக்கும் நோக்கத்தோடு இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது. இப்படி ஒதுக்கீட்டு முறையை மாற்றம் செய்தபோது விமர்சனங்கள் வந்தன. 40 ஆயிரம் கோடி நஷ்டம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் சாதாரணப்பட்டவர்களுக்கு (ஆம் ஆத்மி!) தொலைபேசிக் கட்டணம் குறைந்​தது. தொலைபேசிகளின் விற்பனை எண்ணிக்​கையும் உயர்ந்து, பொருளாதார வளர்ச்சியும் எற்பட்டது.

2007-ல் பிரதமருக்கு தொலைத் தொடர்புக் கொள்கைகள் குறித்து பல சிபாரிசுகள் மற்றும் ஆலோசனைகள் வந்தன. இவற்றை வைத்து பிரதமர் அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கு கடிதம் எழுதினார். ‘தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் செய்ய வேண்டும்’ என்று சொன்னார் பிரதமர். இதற்கு அமைச்சர் ஆ.ராசா, ‘டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டிகளை ஏற்படுத்த, ஏற்கெனவே உள்ள ஆபரேட்டர்களுக்கு (ஏர்டெல், வோடபோன், ஐடியா) கொடுத்த கட்டணத்தின்படியே புதிய ஆபரேட்டர்களுக்கும் உரிமக் கட்டணத்தைக் கொடுத்தால்தான், சம நிலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலமே வளர்ச்சியைக் காண முடியும். இதன்படி, ஏற்கெனவே உள்ள கொள்கைகளை 2ஜி ஒதுக்கீட்டில் பின்பற்ற வேண்டும்’ என்றார். இந்த முடிவு​களை பிரதமரும் ஏற்றுக்கொண்டார்.

‘இப்போது 3ஜி ஆக்ஷன் விடப்பட்டதைப் பார்த்துவிட்டு, 2ஜி-யை ஏன் ஆக்ஷன் விடவில்லை?’ என்று கேட்கின்றனர். இது சரியான வாதம் அல்ல. 3ஜி-யில் வீடியோ உட்பட கூடுதலான சர்வீஸ்கள் உண்டு. இது அதிகக் கட்டணங்களுக்கான சேவை. இதைவிட இந்த 3ஜி சர்வீஸ் முதன்முறையாக உரிமங்கள் வழங்கப்படுகின்றன என்பதால், ‘ஏற்கெனவே ஆபரேட்டர்கள் இல்லை. இதனால், லெவல் பிளேயிங் ஃபீல்டு இல்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி வசூலிக்கப்படுவது உண்டு. கிராமப்புறச் சாலைகளில் சுங்க வரி வசூலிக்கப்படுவது இல்லை. ஏன் அவர்களுக்கு மட்டும் வசூலிக்கவில்லை?’ என்று கேட்க முடியுமா? அது மாதிரிதான், சாதாரணப்பட்டவர்களுக்கு தொலைத் தொடர்பு வசதி கிடைக்க, குறைந்த விலையில் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டது. 1999-ல் மொபைல் போனில் ஒரு நிமிடத்துக்கு 17 இருந்த கட்டணம் 2004-ல் 3 ஆக வந்து, 2010-ல் 57 பைசாவாகவும் இப்போது 30 பைசா​வாகவும் குறைந்துள்ளது. இந்தக் கட்டணக் குறைவு மூலம் தொலை​பேசி உபயோகிப்பவர்கள் ஆண்டுக்கு எவ்வளவு பயன் அடைந்திருக்கிறார்கள் என்றால் 1,50,000 கோடி. இதை அரசாங்கத்தின் இழப்பீடு என்று சொல்ல முடியுமா?

2005-ல் ஒன்பது கோடி இருந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 74 கோடியாக அதிகரித்தது. சீனாவை இந்தியா முந்தியுள்ளது. டெலிகாம் ஆபரேட்டர்களிடம் இருந்து வருவாயில் பங்கு என்கிற முறையிலும் அரசுக்கு வருமானம் வருகிறது. சேவை வரியிலும் அரசுக்கு 30 சதவிகிதம் டெலிகாம் துறையில் இருந்தே கிடைக்கிறது. இதோடு தொலைபேசியில் முதலீடுகளும் தொழில் வளர்ச்சி பெருமளவில் அதிகரித்தும் உள்ளது. இதை எல்லாம் கணக்கில்கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது தவறு. ஆனால் இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முதலில் வருவோருக்கு முதல் முன்னுரிமை முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் சில விதிமுறை மீறல்கள் இருக்கலாம். அது குறித்த விசாரணை நடக்கிறது. அதை நாங்கள் அலட்சியப்படுத்தவில்லை. அதில் யார் குற்றம் செய்திருந்தாலும், யார் ஊழல்கள் செய்திருந்தாலும், அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்…” என்று பொரிந்து தள்ளி​னார்.

கபில் சிபல் வரம்பு மீறிப் பேசுவதாக எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டை நினைவுபடுத்திக் கேட்டபோது, ”நான் வரம்பை மீறி எதுவும் பேசவில்லை. கடமை, கண்ணியம் தவறி எந்த அமைப்பு மீதும் குற்றம் சாட்டவில்லை. எல்லோரும் எங்கள் மீது புழுதி வாரி வீசினார்கள். ஓர் அமைச்சர் என்கிற முறை​யில் இல்லை என்றாலும், ஒரு குடிமகன் என்கிற முறையில் நான் பதில் சொல்லக் கடமைப்பட்டவன். இப்போது சுப்ரீம் கோர்ட்டும் பொதுக் கணக்குக் குழுவும் ‘யாரும் இது குறித்து கருத்து சொல்லத் தேவை இல்லை’ என்று சொல்லி இருக்கிறது. இதை முன்பே சொல்லி இருக்க வேண்டாமா?” என்று கேட்கிறார் சிபல்.

வாருங்கள் நண்பர்களே, நாம் கபில் சிபல் என்கின்ற நல்ல மனிதரின் பின்னால் அணிவகுப்போம்.

இந்த நல்ல நேரத்தில், உங்களுக்கு எல்லாம் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அது வேறொன்றும் இல்லை, பினாயக் சென் அவர்களுக்கு ஆயுள் தண்டனை!!

யாரது   பினாயக் சென்னா, அவன் ஒரு முட்டாள், காசுக்கு வக்கில்லாத மக்களுக்கு குரல் கொடுத்தாராம்… இங்கு பாருங்கள் அந்த மனிதன் செய்த தவறுகளை அறிய.

இப்பொழுது புரிகிறதா, இது அல்லவா ஜனநாயகம்,  இந்தியா ஒரு ஜனநாயக நாடு தானே!