தமிழருவி மணியன்

நான் சாதாரணமாகக் கடந்துபோகின்ற மனிதன்

1986 கல்லூரி முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன்.

நான் அவினாசி காமராஜ் தேசிய மன்றத்தில் கேரம்போர்டு ஆடும் உறுப்பினர். அந்த ஆண்டு ஓர் கார்காலம்.

மாலை காந்திபுரம் தட்டுக்கடை மைதானம். ….. “ஏர் உழவனுங்க… ஏறி மகிழுங்க …என்ற பாட்டு.  கூட்டமோ குறைவு…. அன்பு சவுண்டு சிஸ்டம் கோவிந்த ராஜ்தான் காசு வாங்காமல் ஜனதா கட்சிக்கு பொதுக்கூட்டத்திற்காக ஒலி, ஒளி பொருத்தியிருந்தார்…. கூட்டத்திற்கு ஆப்சென்ட் ஆகி, திரையரங்கத்தில் சிவாஜி படம் போய் விடலாமா?  என்றுஎனது நண்பர் கூற வட்டாரத் தலைவர் KKS அவர்களை ஏமாற்ற மனமின்றி தராசு முள்போல் தடுமாறியது என் நெஞ்சம், வரவேற்பு முடிந்தது வட்டாரத் தலைவர் KKS பேசினார்,

நமது கூட்டத்தில்தான் நகைச்சுவை, திமுக போல் நையாண்டி எதுவும் இருக்காதே! கொட்டாவி வந்து சினிமா கொட்டகை நோக்கி அழைப்புவிடுத்தது…

ஒலிபெருக்கியின் இறுதி கூம்புவடிவ குழாயிற்குக் கீழ் கிளம்ப என் கால்கள் எத்தனித்தபொழுது….. அப்பொழுதுதான் “அன்பிற்கினிய நண்பர்களே! என்ற வாசகம்…

கடைசி ஓலிவாங்கியில் என்னை கை பிடித்து இழுத்துக்கொண்டுபோய் முதல் மடக்கு நாற்காலியில் முனிவனுக்கு முன்னால் சீடன் போல எனது கண். செவி, இதயம், நாடி, நரம்பு, உதிரம் எல்லாவற்றிலும் ஊடுருவி உயிர் முளைத்தது அன்றையதினம் 2 1/2 மணிநேரம் பொதுக்கூட்ட தனிச்சொற்பொழிவு முழுவதையும் கேட்டு அவர் மேடையைவிட்டு கீழே இறங்கி வட்டாரத் தலைவர் Kks, நடராஜன், அசோக்குமார் ஆகியோருடன் நடந்துகொண்டே மீண்டும் அரசியல் நிகழ்வுகளை மேடையில் சொல்லமுடியாததை வேறு விதமாக பேசி அது மைக் இல்லாமலேயே இன்றுவரை ரசித்து வருவேன்…

அந்த நாள் அறிமுகம் ஆன மனிதன் மணியன் அய்யா…அடுத்த நாளிலிருந்து அவர் யார்? என்பதில் துவங்கி… இன்றைய சிறுகதைகள் வரை இடறா தொடர்பில் இருந்து வருகிறேன். 

காலை பின்புறமும் மாலை முன்புறமும் மதியவேளையில் தன்னுள்ளும் தொடரும் நிழல்போல அவரின் பண்பு, படிப்பு, மொழி நடை, எழுத்து நடை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல வாழ்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் இன்றைய நாள்வரை தீரா தாகம் எனக்குள் தமிழருவி மணியன் என்ற ஓர் பெருமைமிகு மனிதன்தான் என்னை ஓர் கவிஞன். ஓர் ஆசிரியன் ஓர் தமிழ்மொழிபவன் ஓர் வழக்கறிஞர் ஓர் எழுதுபவன் என பல பரிணாமங்களை என்னிடம் இருந்து பிரசவிக்க ஆகுதியாக இருந்தவர். இருப்பவர் .

அவினாசி அப்பொதுக்கூட்டத்தில் கூட்டம் குறைவாக உள்ளதை உணர்ந்து “நான் பேசும் இடங்களிளெல்லாம் கூட்டம் இருப்பதைப் பார்த்து பரவசம் அடைந்திருக்கிறேன் ஆனால் இந்த அவினாசிக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை ஒருவேளை ஆரோக்கியமான அரசியலுக்குத் திரும்புவதே இல்லை என்று யாரிடமாவது சத்தியம் செய்து விட்டார்களோ என்னவோ, கூடியிருப்பவர்கள் குறைவாக இருந்தாலும் எடுத்து வைக்கின்ற அரசியல் பிரக்ஞைகளை மற்றவர் களுக்கும் பகிர்வீர்கள் என்ற நோக்கத்துடன் இப்பொதுக்கூட்டத்தை அலங்கரிக்க விரும்புகிறேன்.என்ற துவக்க உரை என்னை இரும்ப்பாக்கி வார்த்தைகள் காந்தமாகி கவர்ந்தன இன்று வரை நல்ல அரசியலுக்கு நகரவே இல்லை எங்கள் ஊர் “மேடையில் இரண்டு மனிதர்கள் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள் அதில் ஒருவர் மத்திய அமைச்சர்  ஒருவர்மாநில அமைச்சர் .

மேடைக்கு முன்பு உங்களைப் போல சிலர் அமர்ந்திருக்கிறார்கள் அதில் விவரம் தெரிந்தவன் ஒருவன் விவரம் தெரியாதவன் ஒருவன் இந்த விபரம் தெரியாதவன் விவரம் தெரிந்தவனைப் பார்த்து “மேடையில் இரண்டு அமைச்சர்கள் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களே அவர்களில் யார்? மத்திய அமைச்சர் யார்? மாநில அமைச்சர் என்று கேட்கிறான் இந்த விவரம் தெரிந்தவன் இருக்கிறானே நல்ல அரசியலை பின்பற்றி பார்த்துப் பார்த்து ரணமாகிப் போனவன் விவரம் தெரியாத அவனைப் பார்த்து கொள்ளைக்கூட்டத் தலைவன் போல்  இருக்கிறான் பார் அவன்தான் மத்திய அமைச்சர் ஜேப்படி அடிப்பது போல் இருக்கிறான்பார் அவன்தான் மாநில அமைச்சர் நாளைக்கு இந்த சமுதாயம் சிறுமைப்பட்டு சிந்தனைச் செல்விகளே வந்து நாற்காலியில்உட்கார்ந்தாலும் அவருக்கும் நெம்பர் 2வாக இருக்கக்கூடியஅந்தளவிற்கு சுயமரியாதையைச் சுடர் பரப்புகிற மனிதன் நெடுஞ்செழியன் 

“சத்துணவு திட்டத்தை விமர்சித்தால் சமுதாயம் நமக்கு எதிராகக் கிளம்பி விடும் என்பது தெரியும் கொடுப்பவன் அழுக்கறுப்பான் சுற்றம் உண்பதும் உடுப்பதும் இன்றிக் கெடும் என்ற வள்ளுவம் எனக்கு தெரியும் சோறு ஒரு மனிதனைப் படைத்து விடுவதில்லை எது ஒரு மனிதனைப் படைக்கிறது அவன் கொண்டிருக்கிற சுதந்திரம் எனக்கு பசி எடுக்கிறது நண்பர் அசோக்குமார் ஒரு துண்டு மீனை கொடுக்கிறார் அந்த வேலை பசி அடங்கி விடுகிறது ஆனால் அறிவார்ந்த மனிதனாக அசோக்குமார் இருப்பாரேயானால் எனக்கு ஒரு துண்டு மீனை கொடுப்பதைக் காட்டிலும் என்னை படகிலே அமர்த்தி ஆற்றிலே இறக்கி வலையை எவ்வாறு விரிக்க வேண்டும் மீனை எவ்வாறு பிடிக்க வேண்டும் என்ற கலையை கற்றுக் கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் சோறு போடுவதற்குச் சமம்  ஓர் அரசு நாட்டு மக்களுக்கு பல்பொடி கொடுத்து பார்த்து இருக்கிறீர்களா இது ஒரு புரட்சி திட்டம் என்று பேசிக்கொள்கிறார்கள்

சென்னையிலே இருப்பவன் எந்தெந்த பற்பசையையோ உபயோகிக்கிறான் அவன் வாய் துர்நாற்றம் அடிக்கிறது ஆனால் கிராமத்தில் ஆலும் வேலும் பல்லுக்குறுதி வேப்பங்குச்சியையே பிரஷ்ஷாக பயன்படுத்தி பற்களை வெண்மை துலங்க பாதுகாத்து வருபவன் கிராமத்தில் இருப்பவன் அந்த நிலையில் பல்பொடி கொடுத்து ஒரு அரசாங்கம் திட்டத்தை நிறைவேற்றுகிறது  “It is Social welfare keep இவைகளெல்லாம் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் ஆகும்  அணைகள் கட்டுவது ஆலைகளைப் பெருக்குவது இவையெல்லாம் Social development Programme கார்ட்டூன்கள் என்பது சிரிப்பதற்காக வரையப்படுபவை it is laughter at one என்று சொன்னவன் பக்கத்திலே இருக்கிற ராமகிருஷ்ண ஹெக்டே முதலில் சிரித்து பழகுங்கள் only VIMAL எவ்வளவு கவர்ச்சிகரமான வாசகங்கள் பாருங்கள் அவரைப் பற்றி நிறைய சொல்ல நிறைய எழுத என் தமிழ்க் கற்பனையும், சொற்க்குவியலும் கிடங்கில் இருக்க அவற்றையெல்லாம் தற்போது மட்டும் கிடப்பில் போடுகிறேன் நன்றி!….

எனது பெயர்.

A.V.ரமணி. B.A.(வரலாறு, M.A.(வரலாறு)B.Ed. (தமிழ். வரலாறு)B.L.(சட்டம்)

வழக்குரைஞர்.திருப்பூர் மற்றும் அவினாசி. 23.10.2021. Cell: 8610481241.

அய்யா வாழ்க!. வணக்கம்’…….4 | 156. தியாகி குமரன் வீதி கை காட்டிப்புதூர் (அநி) அவினாசி 641654 திருப்பூர் மாவட்டம்.