ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...

உலகப் பொதுமறை திருக்குறள்

தமிழர்களின் பெருமை உலகப் பொதுமறை திருக்குறள்

தினம் ஒரு குறளை கற்போம் அதன்படி வாழ்வோம் என்ற அடிப்படையில் நாளையிலிருந்து திருக்குறள் பயணம் தொடங்குகிறது.

திறவுகோல்

திறவுகோல் – செல்வம், மகிழ்ச்சி, வளமான வாழ்வு இவற்றினுடைய திறவுகோல் என்ன என்பதுதான் புரியாத புதிர்!!

அனைவருடைய வாழ்க்கையும் அந்த திறவுகோலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது

அர்த்தமுள்ள இந்து மதம்

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு.

நா தழும்ப நாட்டியம் பேசிவிட்டு கவிஞர் கண்ணதாசன் அமரகாவியம் அர்த்தமுள்ள இந்து மதம் ஒவ்வொரு வீட்டினுடைய புத்தக அலமாரியில் இருக்கவேண்டிய படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.

ரிலையன்ஸ் அம்பானி

ஒரு முழு நூறு ரூபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர். ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சிறுவனாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். தன் 21வது வயதில் வெறும் 300 ரூபாயே சம்பளமாகப் பெற்றவர். தன்னால் வானத்திலுள்ள நட்சத்திரங்களையே வளைத்துப் போட முடியும் என்கிறபோது ஏன் தரையிலுள்ள கூழாங்கற்களைப் பொறுக்கிக் கொண்டு இருக்கும் வேலையைச் செய்யவேண்டும் என்று நினைத்தவர். தன் திறமையால் 75,000 கோடி ரூபாய்க்கு அதிபதியானவர் ரிலையன்ஸ் அம்பானி. பின்புலம் இல்லை. வசதியான குடும்பத்திலிருந்து வரவில்லை என்றாலும் பிரம்மாண்டமான கனவுகளைக் கண்டவர். அந்தக் கனவுகள் அத்தனையையும் நனவாக்கியவர் ரிலையன்ஸ் அம்பானி. எப்படிச் சாதிப்பது? எதைச் சாதிப்பது? யாரைப் பின்பற்றுவது? எவரை முன் மாதிரியாகக் கொள்வது என்று தவித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு… தொழில் முனைவோருக்கு வழிகாட்டி அம்பானி பற்றிய இந்த நூல்.

அரசினுடைய சட்டங்களை எப்படி பணம் கொண்டு அம்பானி வாங்கினார் என்பதும் மறுக்க முடியாத உண்மை.


பெட்ரோல் அரசியல்

பெட்ரோல் அரசியல்:

பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து இருப்பதற்கு காரணம் மோடி தலைமையிலான ஒன்றிய அரசா அல்லது மாநில அரசுகளா அல்லது இரண்டுமா?

இதற்கு காரணம் இருவரும் தான்.

பெட்ரோல் டீசல் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருள் என்னுடைய விடை விலை கடந்த ஏழு ஆண்டுகளில் குறைந்திருக்கிறது அதனை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் வைத்து விலைவாசி ஏற்றத்தை தடுக்க வேண்டிய அரசுகள் கைகட்டி மௌன பார்வையாளர்களாக இல்லை இல்லை பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு வைத்து அதன் மூலம் அதிக அளவிலான வரி வருவாய் பெற்று அதில் ஊழல் செய்வதிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

திறன் அற்றவர்களை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்துவிட்டு நாம் பட்டிமன்றம் நடத்தி என்ன பயன?