ஆரோக்கியமான சமூக மாற்றத்தை நோக்கி...

விரும்பினால் எனக்கு அந்த பரிசுகளை மட்டும் தாருங்கள்.. துரை வைகோ வேண்டுகோள்

விரும்பினால் எனக்கு அந்த பரிசுகளை மட்டும் தாருங்கள்.. துரை வைகோ வேண்டுகோள்

Durai vaiko advice to Mdmk executives, Only give books for competitive exams

“சோத்துக்கே சிங்கி அடிக்கணும் சார்..”

Whatsapp forward

டைல்ஸ் ஒட்டுற ஜார்கண்ட் பையங்கிட்ட “ஏன்டா தம்பி டெய்லி எவ்ளோ சம்பளம்?” னு கேட்டேன். “மூனுவேளை சோறு போட்டு 700 ரூவா குடுப்பாங்க சார். என்னோட செலவு போவ 15 ஆயிரத்த வீட்டுக்கு அனுப்பிருவேன். எங்க குடும்பமே இப்ப சந்தோசமா இருக்காங்க சார்” ன்னான்…!!
“சரிடா தம்பி.. உங்கூர்ல உன்னோட வேலைக்கு எவ்ளோ குடுப்பானுவ?”
“120 ரூவா சம்பளம். சாப்பாடெல்லாம் போடமாட்டாங்க சார். டீய மட்டுமே குடுச்சுட்டு காலைல ஆறு மணியிலருந்து நைட்டு 8 மணிவரைக்கும் வேல பாக்கணும் சார்…”
“சரிடா தம்பி.. இந்தி கத்துருந்தா வடநாட்டுல நெறையா வேலை கிடைச்சுருக்கும், பெரிய ஆளா வந்துருப்போம்னு எங்க தமிழ்நாட்டுக்காரனுவ பேசிக்குறானுவ..  இந்தி கத்துக்கிட்டா அப்படி ஏதாவது பெரிய ஆளா வர வாய்ப்பிருக்கா?”
“சார்..எனக்கு வயசு 24. இதுவரை 6 ஸ்டேட்ல வேலை செஞ்சுருக்கேன். தமிழ்நாடு மாதிரி எங்கயுமே நிம்மதியா இருக்க முடியாது சார்!”
“அப்ப நாங்க இந்தி கத்துக்கிட்டா வடநாட்டுல நல்ல எதிர்காலம் இருக்கா? இல்லையா?”
“சோத்துக்கே சிங்கி அடிக்கணும் சார்..”