பொது

சாந்தன், முருகன், பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்- தங்கபாலு

சென்னை: ராஜீவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், இந்தியத் நாட்டின் பிரதமருமான தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை, அதன்வழி நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற 20 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் தடுக்கப்பட்ட நீதி இப்பொழுது செயல் வடிவம் பெறும் போது அதனை தடுப்பதற்கு புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது தகவல்கள் மற்றும் மனிதாபிமானம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்று பல்வேறு கோணங்களில் சில தலைவர்கள், சில கட்சிகள் மற்றும் சிலர் சில்லறை சில்லறையாய் ஆங்காங்கே அறிக்கை விடுவதும், அதற்காக போராடுவதாக அறிவிப்பதும் நாம் எங்கே போகிறோம் என்ற கேள்வி ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு கட்சியும், ஏன் அதன் தலைவர்களும், தொண்டர்களும் எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிது.
Continue reading…

சிரிக்க மற்றும் சிந்திக்க

அடேங்கப்பா…. எதையும் பிளான் பண்ணி செய்யனும் என்ற வடிவேலுவின் ‘பொன் மொழி’க்கு பொழிப்புரை என்றால் அது எஸ் ஏ சந்திரசேகரனின் சட்டப்படி குற்றம் ஆடியோ வெளியீட்டு விழாவைத்தான் சொல்ல வேண்டும்.
Continue reading…

ஈழ தமிழர் படுகொலைப் புத்தகம் பறிமுதல்: இலங்கை அரசுக்கு கண்டனம்

கரூர்: சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு அனுப்பப்பட்ட “என்ன செய்யலாம் இதற்காக? ” எனும் ஈழ இனப் படுகொலைப் புத்தகத்தை பறிமுதல் செய்த இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து நூலாசிரியர் ஜெ. பிரபாகரன் மற்றும் மதுரை பென்குயின் பதிப்பகம் சார்பில் அ.சரவணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கடந்த மே 9-ம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு “என்ன செய்யலாம் இதற்காக?” எனும் ஈழ இனப் படுகொலைப் புகைப்பட ஆவணத்தின் 1000 பிரதிகள் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த புத்தகங்களை இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தில் சட்டவிரோதமாக பறிமுதல் செய்துள்ளது. Continue reading…

முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு…

‘ஒன்றே செய்… நன்றே செய்… அதுவும் இன்றே செய்’ என்பது முன்னோர் வாக்கு!

மக்கள் தீர்ப்பின்படி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன? பல்வேறு துறைகளைச் சேர்ந்த மதிப்புக்குரியவர்கள் ‘விகடன்’ மூலமாக வழிகாட்டுகிறார்கள்!

விவசாயம்
‘காவிரி’ எஸ்.ரங்கநாதன்

”விவசாயிகள் பிரச்னைகளில், அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படத்தக்க வகையில், அரசு அரவணைத்துச் செயல்பட வேண்டும். ஏனெனில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதார நதிநீர்ப் பிரச்னைகள் பல அண்டை மாநிலங்களோடு பேசித் தீர்க்க வேண்டியவை. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், நிரந்தரக் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். காவிரி நீர்த் தடங்களை நவீன முறையில் சீரமைக்க வேண்டும்!”
Continue reading…