நேர்மை

மோகம் என்பது அதர்மம்

இந்திய அரசியல் தலைவர்களுக்கு பணத்தின் மீது மோகம், பதவியின் மீது மோகம், அது அதர்மம் என்பது அவர்களுக்கு புரியவில்லை காலம் புரிய வைக்கும்.

சாவர்க்கர் யார்?

பாஜக அவரை “வீர்” (வீரர்) சாவர்க்கர் என்று பாராட்டி, சிறந்த தேசபக்தர் என்று கொண்டாடுகிறது

ஆனால், சரித்திரம் என்ன சொல்கிறது….?

1911-ல் அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட சாவர்க்கர் அங்கே இருந்த ஒன்பது ஆண்டுகளில் ஐந்து மன்னிப்பு
கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதினார்.

1911, 1913, 1914, 1918 மற்றும் 1920 ஆகிய ஆண்டுகளில் அவை எழுதப்பட்டன. ஆறாவதாக ஒரு மன்னிப்பு கடிதம் அவரது
மனைவியால் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதப்பட்டது.

இதுவரை யாரும் சொல்லாத ஒரு புதிய விஷயத்தை – புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காரணம் ஒன்றை அண்மையில் மத்திய அமைச்சர் கூறி இருக்கிறார்

” காந்திஜி சொல்லித்தான் ” சாவர்க்கர் மன்னிப்பு கோரினாராம்