அரசியல்

தமிழகம் இருண்ட எதிர்காலத்தை நோக்கி ….

இது விகடன் இணையத்தில் வந்த ஒரு வாசகரின் கருத்து. என்னுடைய கருத்தும் இதேதான்.

நடிகர் ஒருவர், தனது படம் ஆளும்கட்சியால் கட்டம் கட்டப்பட்டதும் தன்னை காந்தி என்கிறார், எம்‌ஜிஆர் என்கிறார், அவமானப்படுத்தப்பட்டேன் என குமுறுகிறார். அடுத்து நாந்தான் என சூளுரைக்கிறார். நாமும் அத்தனையையும் காது குளிர கேட்டு மேனி சிலிர்க்கிறோம். உன்னுடைய படம் ஆளும் கட்சியால் நெருக்கடிக்குள்ளான ஒரு நிகழ்வு மட்டுமே தமிழகத்தை ஆளுவதற்கான தகுதியை உனக்கு தந்துவிட்டதா என ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை. ஏனென்றால் சினிமாக்காரர்களுக்கு நாட்டை தாரைவார்க்க நமது அடிமை மனம் எப்போதும் தயாராகவே உள்ளது.
Continue reading…

இது அல்லவா ஜனநாயகம்

தாவூத்துக்காக ஆஜராகிய சிபல் தொலைத் தொடர்பு அமைச்சராக இருப்பது நாட்டுக்கு ஆபத்து-ஜெ.

தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது உறவினர்களுக்காக பல வழக்குகளில் வழக்கறிஞராக தற்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆஜராகி இருக்கிறார். கபில் சிபல் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவி வகிப்பது என்பது முரண்பாடுகள் நிறைந்தது. இந்தியாவிற்கு ஏற்பட்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு என்பது மட்டும் தற்போது கேள்வி அல்ல. இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமை தான் தற்போதைய முக்கியமான கேள்வி என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

Continue reading…

தமிழா, இவனல்லவா மனிதன், தமிழன், தன்னலம் துறந்தவன், தலைவன்!!!

தமிழா, பார், இவனல்லவா மனிதன், தமிழன். நீயும் நானும் எந்த தலைவனுக்காக காத்துகொண்டு இருக்கிறோம், அவனுடைய சிந்தனையை பார்!. நான் மீண்டும் சொல்கிறேன், நாம் விரும்புகிற மாற்றம் இந்த மனிதனில் தான்,  தமிழருவி மணியன் மூலம் தான் தொடங்க வேண்டும்.  ஆம் அப்பொழுதுதான் அந்த மாற்றம் உண்மையானதாக, நிலையானதாகவும் இருக்கும். வாருங்கள் நண்பர்களே இவரின் பின்னால் அல்ல, இவருடன் இணைந்து மாற்றத்தை நோக்கி நடப்போம்.

Continue reading…

தெருவுக்கு வந்திருக்கும் தர்மபாலர்கள்! – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

‘நெருக்கடி நிலை நாயகர்’ சஞ்சய் காந்தி யின் முக்கியமான சீடர் அப்துல் ரகுமான் அந்துலே. 1980-களின் தொடக்கத்தில், மகாராஷ்டிர மாநில முதல்வராக மகுடம் சூட்டப்பட்டார். நவீன சுல்தானைப்போன்று நடந்துகொண்ட அந்துலே, ஊரை அடித்து உலையில் போட, ‘இந்திரா காந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ என்ற அறக்கட்டளையை அமைத்தார். அந்த அறக் கட்டளைக்கு அள்ளிக் கொடுத்த தொழில் அதிபர்களுக்கும், வணிகப் பிரமுகர்களுக்கும் அன்று கடும் தட்டுப்பாட்டில் இருந்த சிமென்ட், எரிசாராயம் போன்றவை எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்ததுடன், அவர்களுக்கு வருமான வரியில் இருந்தும் விலக்கு அளிக்க வழிவகுத்தார் அந்துலே. அவருடைய ஊழல் தாண்டவம் எல்லை மீறியதால், மக்கள் காங்கிரஸுக்கு எதிராக எழுந்தனர். கட்சியைக் காப்பாற்ற அந்துலேவை முதல்வர் பதவியில் இருந்து விலக்கும்படி இந்திரா காந்திக்கு நெருக்கமானவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ‘தன்னைப் பின்பற்றுபவரின் விசுவாசத்தைத் தக்கவைத்துக்கொள்ள, பிரச்னை வரும்போது தலைமை அவர்களோடு சேர்ந்து நிற்க வேண்டும்’ என்று அவர்களிடம் கீதோபதேசம் செய்தார் இந்திரா. (ஆதாரம்: ‘இந்திரா காந்தி’ நூல் – ஆசிரியர் இந்தர் மல்ஹோத்ரா) அன்று அந்து லேவுக்கு இந்திரா ஆதரவாக நின்றார். இன்று ஆ.ராசாவுக்கு அரணாக நம் முதல்வர் நிற்கிறார்!

Continue reading…

இந்திய சாதனைகள் 1992 முதல் 2010 வரை

சித்திரகுப்தன் என்ற நண்பரால் வினவு இணையத்தளத்தில் தரப்பட்ட ஒரு தகவல், என் இதயத்திற்கு அருகில் இருந்தால் தானே கோவம் வரும் என்று கருதி இங்கே சேகரித்து வைக்கிறேன்….

இந்தியாவில் இதுவரை ஊழல் 73 லட்சம் கோடியை (1992 முதல் 2010 வரை) தொட்டுவிட்டது – விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது இத்தனை படங்களுடன் விஜயகாந்த் (அவரின் அரசியலை அம்பலப்படுத்த)கட்டுரை வினவில் சிரமப்பட்டிருக்க வேண்டுமா என என் நட்பு தோழர்கள் கேட்டனர். பல சிறப்பான கட்டுரைகளை தொட்டுப் படித்து மறு மொழி எழுதுவதைக் காட்டிலும் இது போன்ற சினிமா பெயருடன் இருந்தால் பலர் படித்து மறுமொழிக்கு மெனக்கெடுகிறார்களே என்பதும் வருத்தமாக உள்ளது

Continue reading…