வாழ்த்துக்கள்

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்

  • காந்தியம் என்பது ஒரு வறட்டு சித்தாந்தம் இல்லை; அது ஓர் உயர்ந்த வாழ்க்கை முறை
  • கடையனுக்கும் கடைத்தேற்றம் தரும் சர்வோதய சமத்துவ சமுதாயமே அதன் ஒரே இலட்சியம்
  • வசதிகள் குவிந்த வாழ்க்கைத் தரத்தை விட அடிப்படைத் தேவைகளில் மனநிறைவு கொள்ளும் வாழ்வியல் தரமே காந்தியத்தின் ஜீவநாடி

– திரு தமிழருவி மணியன்

தூத்துக்குடி to ஜப்பான் – கல்வியில் சாதனை சரித்திரம்

ஒரு பாத்திரக் கடை வியாபாரியின் மகன், மேடு பள்ளங்கள் நிறைந்த கல்விப் பாதையைக் கடந்துவந்து முன்னேறிய சாதனைச் சரித்திரம் இது! 

‘ஜப்பான் அறிவியல் மேம்பாட்டுக் கழகம்’ பன்னாட்டு அறிவியல் கருத்தரங்கை ஆண்டுதோறும் நடத்துகிறது. அதில் கலந்துகொள்ள ஆசிய நாடுகளில் இருந்து, முனைவர் பட்டம் முடித்த ஆய்வாளர்களை தேர்வுசெய்கிறது. அவர்​களுடன் நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள் கலந்துரை​யாடுவார்கள். இந்த வருடம் உயிரியல் துறையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற 120 பேரை கருத்தரங்குக்கு அழைத்​துள்ளது. அதில் இந்தியாவில் இருந்து எட்டு பேரைத் தேர்வு​செய்திருக்கிறது. அதில் தென் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர் ஒரே ஒருவர்தான்.

Continue reading…

வருகிறது, வறட்சி… வாருங்கள், சமாளிப்போம்!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஒவ்வொரு ஐந்தாண்டுகளின் இடைவெளிகளிலும் ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்படுகின்றன. ஒவ்வொரு திட்டத்திலுமே… கிராமங்களை வளர்த்தெடுப்போம்… வறுமையை ஒழிப்போம்… என்கிற திட்டம் கட்டாயமாக இடம்பெறுகிறது. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும்… இன்னும் வளராமல்தான் இருக்கின்றன கிராமங்கள்”
Continue reading…

50 சென்ட்… மாதம் 30 ஆயிரம்…

பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம்..!
த. ஜெயகுமார்,படங்கள்: பீரகா வெங்கடேஷ்
இயற்கை விவசாயத்தில் பட்டதாரி இளைஞர்கள்…

கூட்டுப் பண்ணையில் கீரைகள்…

விரைவில் இயற்கை விவசாயச் சந்தை…

விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து… பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்… பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்… ஆச்சர்யம்தானே!
Continue reading…