அறிமுகம்

நண்பர்களே வணக்கம்!,

நான் ஒரு பத்திரிக்கையாளரோ எழுத்தாளரோ, பேச்சாளரோ,  அல்லது மிக பெரிய சாதனைகளுக்கு சொந்தகாரனோ அல்ல, இருந்தாலும் எழுத்தும், பேச்சும், செய்யும் செயல்களும் சமுக நலன் சார்ந்தவையாக இருக்க வேண்டும் என்றும் நம்பும் ஒரு சாதரணமானவன்.

என்னை அதிகம் பாதித்த இந்த சமுகம் அறிந்த சில பெரியவர்கள்.

  • சுவாமி விவேகானந்தர்
  • மகாகவி பாரதி
  • தந்தை பெரியார்
  • மகாத்மா காந்தி
  • தோழர் ஜீவா
  • பகத்சிங் & அவர் தோழர்கள்
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  • அண்ணல் அம்பேத்கர்
  • ஜெய் பிரகாஷ் நாராயணன்
  • பெருந்தலைவர் காமராசர்
  • சே குவேரா
  • வேலுப்பிள்ளை பிரபாகரன்

உங்களை போலவே இவர்கள் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. இருந்தாலும் ஒரு மனிதனை பார்க்கிற போது இந்த மனிதனிடத்தில் எவற்றை எல்லாம் பெற்றால் இந்த சமுகம் பயன்பெரும் என்ற புரிதல் எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்.

என்னை மிகவும் பாதித்த மற்றும் சிந்திக்க வைத்த வரிகள்…

அறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், தேச நலனில் நாட்டமுள்ளவர்களும், தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.

தியாகம், தன்னல மறுப்பு சேவை மனப்பான்மை, எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய உகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் பண்புகளாய் போற்றப்பட்டன.

தம்மிடம் இருப்பதை இழப்பதற்காகவே அன்று அரசியல் உலகில் ஒவ்வொருவரும் அடியெடுத்து வைத்தனர்.  இன்று சகல தளங்களிலும் சமூகத்தைச் சுரண்டிக் கொழுப்பதற்காகவே பல பேர் அரசியல் வேடம் புனைந்து பொய் முகத்துடன் போலித் தலைவர்களாக வலர் வருகின்றனர்.

எல்லா அழுக்குகளையும், அகற்றுவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட அரசியல் அமைப்பே இன்று சுத்தப்படுத்த முடியாதபடி அடர்த்தியாய் அழுக்கேறிக் கிடக்கிறது.  சமூக பிரக்ஞை உள்ள இளைஞர்கள் இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருப்பது நம் நாட்டிற்கு நல்லதல்ல.  அடிமை இந்தியாவில் ஆயுதம் தேவைப்படிருக்கலாம்.  சுதந்திர இந்தியாவில் காந்தியவழியில் அறப்போர் மூலம் ஆயிரம் மாற்றங்களை நாம் நினைத்தால் அரங்கேற்ற முடியும்.

இந்த வரிகள் “மறக்க முடியாத மனிதர்கள்” என்ற புத்தகத்தின் ஆசிரியருரையுள் தமிழருவி மணியன் அவர்களால் சொல்லப்பட்டது,

என்னை பொறுத்தவரை இந்த வரிகள் நூறு சதவிதம் உண்மை.

நண்பர்களே சிறிது சிந்தித்து பாருங்கள், இந்த அவலநிலைக்கு காரணம் யார்? முதற்காரணம் நானும் நீங்களும் தான்.

பணம் தேடும் தேடலில் நமது தேசத்தை, சமுகத்தை மறந்தோம், நான், எனது, எனது குடும்பம், எனது வாழ்க்கை என்று சுருங்கிபோனோம். நல்லவர்களுக்கு துணை நிற்பது இல்லை என்று சபதம் செய்து விட்டு இருக்கின்ற ஒரு பாவப்பட்ட சமுதாயத்தில் வாழ்ந்து வருகிறோம்.

நண்பர்களே, நாடு ஒன்று இருந்தால் தானே மற்றவை எல்லாம் சாத்தியம்.

இந்த அவலநிலை மாறவேண்டும் என்றால், நானும் நீங்களும்

  • நல்லவர்களின் பின்னால் அவர்கள் விழுந்து விடாமல் துணை இருக்க வேண்டும்
  • முடிந்தவரை அரசியல் என்ற சாக்கடையுனுள் இறங்க வேண்டும், அதன் காரணமாக அந்த சாக்கடையுனுள் உள்ள அசுத்தமானவர்கள் வெளியேற வேண்டும்
  • நல்லவர்கள் அரசியலுக்கு வர உதவவேண்டும்
  • அரசியல் மற்றும் சமுகம் சார்ந்த செய்திகளை விவாதித்து தெளிவு பெறவேண்டும்இவை அனைத்துக்கும் மேலாக, நல்லவர்கள் அனைவரும் ஓரணியுள் திரள,  சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட ஊக்கபடுத்துதல்.

இந்த இணையம் நல்லவர்களை அடையாளம் காட்டவும், அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கவும்  உதவும் என்று நம்புகிறேன்.

நண்பர்களே,  என்னுடைய கருத்துக்களில்/புரிதலில் தவறு இருக்குமெனில் சுட்டிக்காட்டுங்கள் திருத்தி கொள்கிறேன். நான் சொல்வதில் உண்மையிருக்கும் பட்சத்தில்,  தங்களின் மேலான ஆதரவை தாருங்கள்.

என்றும் அன்புடன்,
வேலு.சாந்தமூர்த்தி