இன்று… ஒன்று… நன்று…!

”விகடன் வாசகர்களுக்கு,

 தமிழருவி மணியனின் இதயம் நிறைந்த வணக்கங்கள்! ஊருக்கு நல்லது சொன்ன நான், இப்போது உங்களுடன் தனிப்பட்ட முறையில் சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

எதைச் செய்கிறோமோ, அதுவாகவே மாறுவது எப்படி? ஒரு ஜென் கதை உங்களுக்குப் புரியவைக்கும். சந்நிதியில் கடவுளைக் கண் திறந்து வணங்க வேண்டுமா… இல்லை, கண்களை மூடித் தியானிக்க வேண்டுமா? அதற்கு விடை சொல்கிறேன். கூடுதலாக கடவுளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களையும் விளக்குகிறேன்.

உலக இன்பங்களைத் தேடுவது ஒரு துருவம். உலக இன்பங்களைத் துறப்பது மற்றொரு துருவம். இந்த இரண்டு துருவங்களில் எதில் உண்மையான வாழ்வின் இன்பம் இருக்கிறது? வாருங் கள்… வழிகாட்டுகிறேன்! புத்தன் ‘நடுப் பாதையில் நட!’ என்று ஏன் சொன்னான்? தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது வளர்ச்சிக்கு உதவுமா? அப்படிப் பார்ப்பது சரியா? இறைவன் படைப்பில் மனித இனத்துக்கு மட்டுமே சிரிக்கத் தெரிந்தது ஏன்? சிரிக்கத் தெரிந்த அதே மனிதன் அழுவது ஏன்? சிரிக்கவே தெரியாத பறவை இனம் அழாமல் இருப் பதன் ரகசியம் என்ன? இயற்கையிடம் இருந்து நான் படித்த பாடம் சொல்கிறேன். மனிதப் படைப்பு தேங்குவதற்காக அல்ல; இயங்குவதற்காக என்பது தெரியும். ஏன் இயங்க வேண்டும்? எப்படி இயங்க வேண்டும்? இயங்குவதிலும் ஓர் ஒழுங்கைக் கட்டமைத்துக் கொள்வது எப்படி? இத்தனை கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது.

வாருங்கள்… நல்லன எல்லாம் கேளுங்கள். 12.04.12-ம் தேதியில் இருந்து 18.04.12-ம் தேதி வரை 044-66808034 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் காது களையும் மனதையும் திறந்து வையுங் கள். நல்லதை நல்ல விதமாகப் பகிர்ந்து கொள்வோம்!”

நன்றியுடன்,
தமிழருவி மணியன்.