சென்னை: திடீரென பஸ் கட்டணம் உயர்ந்துவிட்டதால், கையில் பணமின்றி மனைவி குழந்தைகளுடன் நடந்தே வீட்டுக்குப் போனார் ஒரு தொழிலாளி.
அந்தத் தொழிலாளியின் பெயர் செந்தில். திருவண்ணாமலை காரப்பட்டு கிராமத்திலிருந்து சென்னை வந்து கட்டட வேலை செய்பவர். மனைவி மற்றும் இரு குழந்தைகள் இவருக்கு உள்ளனர்.
துரைப்பாக்கத்தில் தங்கி கட்டட கூலியாக வேலை பார்த்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் ஊருக்குப் போன அவர் நேற்று சென்னை திரும்பினார். பஸ்ஸில் ஏறியபிறகுதான் டிக்கெட் கட்டணம் ஏற்றப்பட்ட விவரம் தெரிந்திருக்கிறது.
வழக்கமாக ரூ 100 கொடுத்தால் தாம்பரத்துக்கு இருவர் வந்துவிட முடியும். ஆனால் இப்போது தாறுமாறாக கட்டணம் ஏற்றப்பட்டுள்ளதால், அவர் ஊர் திரும்ப ரூ 200-க்கு மேல் ஆகிவிட்டதாம்.
வைத்திருந்த மொத்த பணத்தையும் கொடுத்து தாம்பரம் வரை டிக்கெட் எடுத்த செந்தில், தாம்பரத்தில் இறங்கியதும் தான் குடியிருக்கும் துரைப்பாக்கம் செல்ல போதிய பணமில்லாததைக் கண்டார்.
கொண்டு வந்திருந்த மூட்டையை தலையில் சுமந்து கொண்டு மனைவி- குழந்தைகள் இருவருடன் நடந்தே செல்ல ஆரம்பித்துவிட்டார்.
நடந்து கொண்டே, இந்த அம்மா வந்தா நம்மை காப்பாற்றுவார், வருமானத்துக்கு வழி பிறக்கும்னு பாத்தா, இருக்கிறதையும் பிடுங்கிட்டு தெருவில் அல்லாட விட்டுட்டாங்களே!, என்று வேதனையுடன் புலம்பியபடி சென்றார்.
இதைக் கவனித்த சில லோக்கல் நிருபர்கள் அவரை நிறுத்தி விஷயத்தைக் கேட்க, அவர் திருவண்ணாமலையிலிருந்து தான் புறப்பட்டு வந்த கதையைச் சொல்லிவிட்டு, நடையைத் தொடர்ந்தார்!
இன்னும் எத்தனைப் பேர் இப்படி நடைப்பயணத்தை மேற்கொண்டார்களோ என்ற கேள்வியுடன் திரும்பினர் நிருபர்கள்.
விலைவாசியை ஜெயலலிதா உயர்த்தியதற்கு பாராட்டு தெரிவிக்கும் பசியறியா, நடையறியா, பேருந்துப் பயணம் அறியா, வியாதிக்காக மட்டுமே நடந்து பழகிய சொகுசு வர்க்கத்துக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது!
Nandri: Thats tamil.com

Tamil books Online