August 2011

நமது சுதந்திர தின உறுதி மொழி

நண்பர்களே,

காந்தி என்றால் சோனியாவும் ராகுலும் என்று ஆகிவிட்ட காங்கிரஸ் கட்சியால் இன்று நட்டு மக்களுக்கு தெரிவிக்கபடுவது யாதேனில், அன்னா ஹசாரே ஒரு உழல்வாதி.

நிற்க, சபை நாகரிகம் கருதி என்னால் இங்கே என்னால் நினைப்பதை எல்லாம் சொல்ல முடியாது. இருந்தாலும் சுருக்கமாக சொல்கிறேன். காங்கிரஸ் இயக்கமாக இருந்து கட்சியாகி, இன்று சாக்கடை ஆகி விட்டது. அதை சுத்தம் செய்ய வேண்டியது நமது கடமை. நண்பர்களே, வாருங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு இடமும் பெறமுடியாத படி செய்வோம். முடிந்தால் அதனை இந்திய முழுவதும் வேரறுப்போம்.

தமிழகத்தில் சாதி, மத பேதம் இன்றி தமிழருவி மணியன் அவர்களின் காந்திய மக்கள் இயக்கத்தில் இணைவோம். நமது சக்தியை ஒருங்கினைப்போம். இந்த தேசத்தையும், காங்கிரஸ் கட்சியையும் வென்றடுப்போம்.

இது இந்த தேசத்தின் விடுதலைக்காக தங்களின் உடமை மற்றும் உயிரை தியாகம் செய்த நமது முன்னோர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய முதல் கடமை.

இதனை இந்த சுதந்திர தின உறுதி மொழியாக அனைவரும் கொள்வோமாக.

இல்லையெனில் நமது குழந்தைகள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.

மாற்றி மாற்றிப் பேசுவது ஏன்

முன்னாள் உளவுத்துறை அதிகாரி ஜாபர் சேட் சிறுபான்மை இனத்தவர் என்பதால் பழிவாங்கப்படுகிறார்’ என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி முதல்வராக இருந்த போது நிழலாக இருந்தவர் ஜாபர் சேட். அவர் மீது தி.மு.க.வினரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கூறினர். அனைத்தையும் குப்பையில் போட்டது தி.மு.க. தலைமை. ‘ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, ஒரு அதிகாரி மீது எடுக்கப்படும் நடவடிக்கையை கருணாநிதி எதிர்ப்பது ஏன்?’ என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது.

இதற்கான விடையைக் கேட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் நெல்லை கண்ணன், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதும் திறந்த மடல் இதோ…
Continue reading…

சிரிக்க மற்றும் சிந்திக்க

அடேங்கப்பா…. எதையும் பிளான் பண்ணி செய்யனும் என்ற வடிவேலுவின் ‘பொன் மொழி’க்கு பொழிப்புரை என்றால் அது எஸ் ஏ சந்திரசேகரனின் சட்டப்படி குற்றம் ஆடியோ வெளியீட்டு விழாவைத்தான் சொல்ல வேண்டும்.
Continue reading…

10-ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்கள் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வரும் 10-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வினியோகிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்விக் குறித்த வழக்கு, நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் முன்பாக விசாரணைக்கு வந்தது.
Continue reading…