திருமாவளவன் மற்றும் ராமதாஸ் அவர்களுக்கு

சரவணன் என்கின்ற நண்பர் வரைந்துள்ள கடிதங்கள் …. நன்றி சரவணன்

சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு

நீங்கள் தமீழீழ மக்களுக்காக குரல் கொடுத்த

தலைவர்களில் தாங்களும் ஓருவர்

தங்களின் வேகத்தை நானும் சந்தோஷ பட்டேன்

ஆனால் நீங்கள் மக்களவை தேர்தலில்

பதவிக்கு ஆசை பட்டு நீங்கள் தமீழீழ மக்களுக்கு துரோகம் செய்த

காங் திமுக அணியுடன் கூட்டணி வைத்திர்கள்

காங் தயவில் எம் பி யும் ஆனிர்கள்…

ஆனால் அந்த எம் பி பதவி வைத்து ஈழ தமிழர்களுக்கு

என்ன செய்திர்கள் ஒன்றுமே இல்லை

ஈழத்து தமிழர்களை கொன்ற ராஜபக்சே

அவர்களை பார்த்து விருந்து உண்டிர்கள்

அவரோ உங்களை கிண்டலடித்தார்

அப்போதும் உணர்ச்சி வசப்பட்டு

காங் அணியில் இருந்து தாங்கள் வெளியேறவில்லை

பிரபாகரன் அவர்கள் தாயர் உடல் நல குறைபட்டு

தமிழகத்திற்கு சிகிச்சைக்கு வரும்போது

வாயதானவர் பெண் என்றும் பாராமல்

மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்ப பட்ட போதும் நீங்கள்

உணர்ச்சி வசப்பட்டு கங் ஓட்டில் வந்த எம் பி பதலி ரஜினாமா செய்கிறேன் என்றோ அல்லது

காங் இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டேன் என்றோ வெளியே வரவில்லை

பிரபாகரன் தாயர் இறந்த போது

நீங்கள் மத்திய ஆளும் கூட்டணி எம் பி

என்றும் உங்களை பாராமல் உங்களை

திருப்பி அனுப்பி விட்டார்கள்

அப்போது கூட நீங்கள் உணர்ச்சி வசபட்டு

அந்த அணியை விட்டு வெளியேறவில்லை

காரணம் தங்களின் தமிழிழ மக்களின் பற்றை விட

பதவி ஆசையே அதிகம் இருந்தது

மாநில தேர்தலிம் அதே அணியோடு கூட்டணி தொடர்ந்திர்ள்

தமிழிழ மக்களுக்கு எதிராக செயல்பட்ட சோனியாவோடு

உங்களால் எப்படி ஓரே மேடையில் இருக்க முடிந்தது

அதனால் தமிழக மக்கள் தங்களுக்கு முழு தோல்வி தங்களுக்கு அளித்தார்கள்

இனியாவது துரோக கூட்டணி விட்டு வெளியேறி

உண்னமயான நியாயமான போராட்டத்தை தொடருங்கள்…
—————————————————————————-

ராமதாஸ் ஐயா (எனது மனம்)

அணிக்கு அணி இடம் மாறுபவர் தாங்கள் என்று

பலர் கூறினாலும் தங்களின்

சில போராட்டங்கள் என்னை கவர்ந்தது

மது விலக்கு போராட்டம்

மற்றும் புகையிலை எதிர்ப்பு போராட்டம்

மற்றும் தீவிர தமிழீழ மக்களுக்கான போராட்டம்

என்னை கவர்ந்தது மற்றும்

சின்னத்திரை சேனல் களில் தங்கள் சேனல்

மிகவும் வித்தியாசம்

சினிமா கலக்காத

முற்றிலும் தமிழ் எனக்கு மிகவும் பிடித்திருந்தது..

2009 மக்களவை தேர்தலில் தங்கள் மகனின்

கூட்டணி எதிர்ப்பை மீறி அதிமுவுடன் கூட்டணி வைத்திர்கள்

திமுகவையும் காங் அரசையும் கடுமையாக எதிர்த்திர்கள்

கலைஞர் உண்ணாவிரத்தை நாடகம் என்று தைரியமாக சொன்னிர்கள்

உங்கள் தொலைகாட்சியும்

தமிழிழ படுகொலை களை ஒளி பரப்பினிர்கள்

என் இதயமும் அழுதது

ஆனால் அந்த தேர்தலில் பண பலத்தால்

உங்கள் தொகுதிகளை இழந்திர்கள் கொஞ்ச காலம் பொறுத்திருப்போம்

என்ற எண்ணம் இல்லாமல்

மீண்டும் திமுக அணிக்கு சென்றிர்கள்

காரணம் தங்கள் மகனின் எம் பி பதவி மற்றும் அமைச்சர் பதவி

தற்போது

மாநில தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்திர்கள்

காரணம்

அதிக சீட் மற்றும் பதவிகளே காரணம்

நீங்கள் மக்களவை தேர்தலில்

திமுக காங் கூட்டணி பற்றி சொன்னது பொய்யா…?

அல்லது தாங்கள் மறந்து விட்டிர்களா…?

நீங்களும் பதவிக்கு ஆசை பட்டு அணி மாறியதால்

நீங்களும் தமிழக மக்களால் நிராகரிக்க பட்டிர்கள்

நீங்கள் திமுக அணிக்கு 0 மதிப்பெண் கொடுத்திர்கள்

நீங்கள் மறந்து இருக்கலாம்

ஆனால் தமிழக மக்கள் மறக்கவில்லை

திமுக அணி 0 என்றே தீர்பளித்திருக்கிறார்கள்…

இனி வரும் புதிய அரசுக்கு

நன்மைகள் செய்தால் நியாயமாக பராட்டியும்

தீமைகள் செய்தால் தைரியமாக எதிர்த்தும் அரசியல் செய்யுங்கள்

அப்படி செய்தால்

அடுத்த தேர்தலில் மக்கள் தங்களை விரும்புவார்கள்…