விஜயகாந்த்

To, விஜயகாந்த், FROM, தமிழருவிமணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்!

‘மக்களோடும் தெய்வத்தோடும் மட்டும்தான் எனக்குக் கூட்டணி’ என்றவர் நீங்கள். எந்த

அரசியல் கட்சியும் தேர்தல் களத்தில் தனித்து நிற்கத் தயங்கியபோது, மாநிலம் தழுவிய மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தனித்து நின்ற உங்கள் துணிச்சல் மனம் திறந்த பாராட்டுக்கு உரியது. கூட்டணி அரசியலில் அனைத்துக் கட்சிகளும் குளிர் காயும்போது, நீங்கள் மட்டும் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டே இருந்தால், கச்சேரி கேட்கும் ரசிகர் கூட்டம் காலப்போக்கில் குறைந்துவிடும் என்ற அச்சம் உங்களை அலைக்கழித்துவிட்டது.
கேப்டன்… எது சாத்தியமோ, அதை ஒழுங்காகச் செய்வதற்குப் பெயர்தான் அரசியல். ‘politics is the art of possible’ என்பதுதான் அரசியல் வகுப்பின் அரிச்சுவடி.
Continue reading…

தமிழகம் இருண்ட எதிர்காலத்தை நோக்கி ….

இது விகடன் இணையத்தில் வந்த ஒரு வாசகரின் கருத்து. என்னுடைய கருத்தும் இதேதான்.

நடிகர் ஒருவர், தனது படம் ஆளும்கட்சியால் கட்டம் கட்டப்பட்டதும் தன்னை காந்தி என்கிறார், எம்‌ஜிஆர் என்கிறார், அவமானப்படுத்தப்பட்டேன் என குமுறுகிறார். அடுத்து நாந்தான் என சூளுரைக்கிறார். நாமும் அத்தனையையும் காது குளிர கேட்டு மேனி சிலிர்க்கிறோம். உன்னுடைய படம் ஆளும் கட்சியால் நெருக்கடிக்குள்ளான ஒரு நிகழ்வு மட்டுமே தமிழகத்தை ஆளுவதற்கான தகுதியை உனக்கு தந்துவிட்டதா என ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை. ஏனென்றால் சினிமாக்காரர்களுக்கு நாட்டை தாரைவார்க்க நமது அடிமை மனம் எப்போதும் தயாராகவே உள்ளது.
Continue reading…

இந்திய, தமிழக அரசியல் மாற்றம் உங்கள் கைகளில்…..

நண்பர்களே வணக்கம்,

ஆம் நண்பர்களே, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், நாம் நினைத்தால் நாம் கனவு காண்கின்ற ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடுயும். முழு மாற்றம் இல்லை என்றாலும், மக்கள் நல்லவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். நல்லவர்களை கட்சிகள் தான் ஆதரிப்பது இல்லை என்கின்ற ஒரு செய்தி உறுதி செய்யப்படும்.

Continue reading…