மோடி
நமது சிந்தனைக்கு
ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் சாப்பிட்டு முடித்தவுடன் பாக்கெட்டை தடவிய போது, அங்கு பர்ஸை காணவில்லை. யாரோ பிக்பாக்கெட் அடித்து இருந்தார்கள்.
ஹோட்டல் முதலாளி இரக்கமே இல்லாத மனிதர். பணம் இல்லாவிட்டால் ஆடைகளை அவிழ்த்துப் போடு என்கிறார்.
சுற்றிலும் கூடிய ஆட்கள் மத்தியில் அவமானப்பட்ட அந்த நபர் ஆடைகளை ஒவ்வொன்றாக கழட்டினார். இறுதியில் உள்ளாடை மட்டுமே எஞ்சியிருந்தது. அதையும் அவிழ்க்குமாறு ஹோட்டல் முதலாளி கூற, இறுதியில் வேறு வழியின்றி அதையும் அந்த மனிதர் கழற்ற தொடங்கிய போது பார்வையாளர்களில் ஒருவர் அவரை தடுத்து சாப்பிட்ட உணவுக்கான பணத்தை முதலாளியிடம் கொடுத்து விட்டு அந்த நபரை வெளியே அழைத்துச் சென்றார்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தை அடைந்ததும், அவர் தன்னிடமிருந்த பத்துக்கும் மேற்பட்ட பர்ஸ்களை வெளியே எடுத்து, “இவற்றில் எது உன்னுடைய பர்ஸ்” என்று கேட்டார்.
தனது பர்ஸ் திரும்ப கிடைத்த போது பாதிக்கப்பட்ட நபருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பிக்பாக்கெட்காரன் மீது கடவுளுக்கு ஒப்பான நேசம் ஏற்பட்டது.
இடைத் தேர்தல்களில் செருப்படி விழுந்ததும் பெட்ரோல், டீசல் முதலான எரிபொருள் விலையை குறைத்ததற்காக மோடிக்கு நன்றி சொல்லும் அனைவருக்கும் இந்த கதை சமர்ப்பணம்!
மு.அ நேசன்
மோடி அரசின் இயலாமை , ஊழல்கள், மாயை
எனது கல்லூரி நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மோடி அரசினுடைய இயலாமை மோடி என்கின்ற மாயையை பற்றிவரும் காலங்களில் எழுதலாம் என்று நினைக்கிறேன்
அதனுடைய தொடக்கமாக மோடி அரசால் தாரை வார்க்கப்பட்ட டிஎச்எப்எல் பற்றி முதலில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
அதன் பிறகு மோடி அரசுசெய்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி என்று நினைக்கிறேன்.






Tamil books Online