பொது

காமராஜர் – கக்கன் முதல் சந்திப்பு

25-01-1970 ஆனந்த விகடனில் வெளிவந்த, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த கட்டுரை. கக்கன் மற்றும் காமராஜ் அவர்களின் முதல் சந்திப்பு பற்றியது, கக்கன் அவர்களால் எழுதப்பட்டது.

நன்றி : ஆனந்த விகடன்.

”மதுரையில் ராணி மங்கம்மாள் சத்திரத்தின் முன்பாகத்தான் நான் முதன்முதலில் பெரியவரைப் பார்த்தேன்.

திரு.வெங்கடாசலபதி என்பவரைப் பார்ப்பதற்காக, நானும் எனது நண்பரும் அந்தப் பக்கமாக நடந்து போய்க்கொண்டு இருந்தபோது, எதிரில் சற்றுத் தள்ளி, பெரியவரும் அவரோடு இரண்டு மூன்று பேரும் வந்துகொண்டு இருந்தார்கள்.

Continue reading…

இந்தியக் குடியரசு நாள் தோன்றிய வரலாறு

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்!!

இந்த பதிவில் இடம் பெற்றுள்ள கேள்வி மற்றும் பதில்கள் ஆல்பர்ட், அமெரிக்கா அவர்களின்  இந்தியக் குடியரசு தினம் என்ற கட்டுரையில் இருந்து (http://www.muthukamalam.com/muthukamalam_katturai9.htm) பெறப்பட்டது. அவருக்கு எனது நன்றிகள்.

Continue reading…

நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து!

போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் தவணையாக ஜனவரி 23-ம் தேதியும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி 27-ம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்.