பொது

கவிழக் காரணம் கருணாநிதியே!

கருணாநிதி கவிழப்போகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். தலை குப்புறக் கவிழ்வார் என்பதை ஜெயலலிதா உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை!

எதிர்க் கட்சி என்ற பிரதான பாத்திரத்தைக்கூட இழந்து, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது தி.மு.க. எந்த எதிர் பார்ப்புகளும் அற்ற லட்சக்கணக்கான தொண்டர்களையும்… மாநிலத்தை ஆளும் மகத்தான பொறுப்பினையும் அண்ணா தூக்கிக் கொடுத்துவிட்டுப் போனார். மே 13-ம் தேதி தமிழக சட்டசபைக்கான முடிவுகள் வரும்போது, அறிவாலயத்து வாசலில் நின்ற அண்ணா, வெறும் கட்டாந்தரையைத்தான் பார்க்க முடிந்தது. ராணுவத்தின் துப்பாக்கி மிரட்டல்களுக்கு மத்தியில் – எமர்ஜென்ஸி நேரத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டபோதுகூட கூடினான் தொண்டன். ஆனால், மே 13 அவனே தலைமையையும் தலைமைக் கழகத்தையும் புறக்கணித்தான். அறிவாலய வளாகத்துக்கு உள்ளேயே நின்று சிலர், கருணாநிதியின் மகள் கனிமொழியையும் ஆ.ராசாவையும் விமர்சித்தனர்! அறிவாலயத்துக்கே வர முடியாமல் கோபாலபுரத்தில் முடங்கிப்போய் இருந்தார் கருணாநிதி. ”எனக்கு நல்ல ஓய்வு கொடுத்து இருக்கிறார்கள்!” – இந்த ஒற்றை வரியை மட்டுமே கருணாநிதியால் உச்சரிக்க முடிந்தது. இந்தத் தோல்வியை அவர் முன் கூட்டியே உணர்ந்து இருப்பார். உணராத வராக இருந்தால், இத்தனை ஆண்டு அரசியல் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி இருக்கும். இளமைக் காலம் முதலே கருணா நிதியைப் பார்த்து வரும் பேராசிரியர் அன்பழகன் வந்தார், ”என்ன பேராசிரியரே! சந்தேகமா இருக்குன்னு நான் சொன்னேன்… பார்த்தீங்கள்ல… அதுதான் நடந்திருக்கு!” என்று கருணாநிதி சொன்னார். இத்தனை ஆண்டுகளாகப் பேசாத அன்பழகன், அன்றும் பேசவில்லை. தொழிற்சங்கத் தலைவர் செ.குப்புசாமி உள்பட, பலரும் வாய்விட்டுக் கதறி அழுதனர். கருணாநிதியும் மனசுக்குள் அழுதிருப்பார். இந்தத் தோல்வி முழுக்க முழுக்க அவரால்தான் வந்தது!

Continue reading…

இவர்கள் எல்லாம் என்ன காந்தியா அல்லது சிதம்பரம் பிள்ளையா?

இன்றும் அனைவராலும் வருத்ததுடன் பார்கப்படும் செய்தி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ராம் ஜெத்மலானி ஆஜராவது.

Continue reading…

மறக்க முடியுமா – ஆனந்த விகடன் தலையங்கம்

நன்றி : ஆனந்த விகடன்

கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், ஈட்டி முனையாகப் பாய்ந்து வந்த பல கேள்விகளுக்கு, முதல்வர் கருணாநிதி பதில் சொல்ல முடியாமல் பரிதவித்து நின்றதற்குப் பல காரணங்கள்! அதற்கான வேரைத் தேடினால், திசை மாறிப்போன ஒரு பரிதாபப் பயணத்தின் கதைதான் கிடைக்கும்!
Continue reading…

பெரியாரைப் பேசுதல் பாவம்!

நன்றி: ஜூனியர் விகடன்

‘ஆரியர் – திராவிடர் யுத்தம் ஆரம்பம் ஆகிவிட்டது!’ என்ற கருணாநிதியின் போர்ப் பிரகடனத்தைப் படிக்கும்போதே புல்லரிக்கிறது!
”நான் பாப்பாத்தி” என்றும், ”ராமர் பிறந்த அயோத்தியில் கோயிலைக் கட்டாமல், வேறு எந்த இடத்தில் கோயில் கட்ட முடியும்?” என்றும் கேட்ட ஜெயலலிதா…. ஆரியர் படைக்குத் தலைமை தாங்க முழுத் தகுதி படைத்தவர் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், திராவிடர் படைக்குத் தலைமை தாங்க கருணாநிதிக்கு இருக்கும் தகுதியை ஏற்பதற்கு இல்லை!
Continue reading…

வரலாற்று ஆசிரியர் கலைஞர்

கலைஞரை எழுத்தாளர், பேச்சாளர், தமிழக முதல்வர், திரை கதாசிரியர் என்று தமிழகம் அறியும்.
அந்த வகையுள் அவரின் புதிய அவதாரம் வரலாற்று ஆசிரியர்.

சமிபத்திய வரலாற்று பதிவு, அவரும் தோழர் ஜீவாவும் நெருங்கிய நண்பர்களாம்.

கலைஞர் அவர்களே, எதைவைத்து இதை சொல்கிறீர்கள், பராசக்தி திரைபடத்தின் உண்மையான கதைக்கு சொந்தக்காரர் தோழர் ஜீவா என்கின்ற உண்மையின் வெளிப்பாடா? அல்லது வேறு எதாவது காரணமா?
தமிழனுக்கு வரலாறு எங்கே தெரியப்போகிறது என்கின்ற சர்வாதிகார சிந்தனையின் வெளிப்பாடு என்பது தான் எனது கருத்து.

இது பற்றி தினமணி வெளியுட்டுள்ள கட்டுரை. இந்த கட்டுரையில் உள்ள பல கருத்துகள் தவறானவை, இருந்த பொழுதும் ஜீவா என்கின்ற மனிதனை பற்றி நாம் சிந்திக்க இது உதவும். அந்த வகையில் தவறுகள் மன்னிக்க பட வேண்டியவை

நன்றி: தினமணி

பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும்!
Continue reading…