பொது

தேடி வந்த பெருநோய்கள்…

மறந்து போன சிறுதானியங்கள்..!
உணவே மருந்து… மருந்தே உணவு…
காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி
 
விவசாயிகளுக்கு அதிக விலை…
உண்பவர்களுக்கு உபாதை இல்லை…
நோய்களை விரட்டும் சிறுதானியங்கள்…
 
கம்பங்கூழ், வரகரிசிச் சோறு, கம்பு தோசை, தேன் கலந்த தினைமாவு… இவையெல்லாம்தான் ஒரு காலத்தில் தமிழர்களின் உணவு. ஒரு கட்டத்துக்குப் பிறகு, இளக்காரமாகப் பார்க்கப்பட்ட இந்த தானியங்கள்… ஏழைகளின் உணவாக மாறி, தனது மரியாதையை இழக்க ஆரம்பித்தன. பிறகு, கடந்த 30, 40 ஆண்டுகளில்… அதாவது பசுமைப் புரட்சிக்குப் பிறகு, ஏழைகளின் உணவுப் பட்டியலில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டது. ஆனால், இன்றைக்கு மேட்டுக்குடி மக்களின் முக்கிய உணவாக இந்த சிறுதானிய உணவுகள் மாறி இருப்பதுதான்… காலத்தின் கோலம்! அரிசியை விட, அதிகமான விலை கொடுத்துதான் இவற்றுக்கு மூலப்பொருளான சிறுதானியங்களை வாங்க வேண்டியிருக்கிறது. இதைவிடக் கொடுமை… ‘கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு, நெய்க்கு அலைவதைப் போல’ சிறுதானியங்களை விட்டுவிட்டு, அவற்றில் தயாரிக்கப்பட்டு வெவ்வேறு பெயர்களில் விற்கப்படும் சத்துமாவுகளை,
பானங்களை பலமடங்கு விலை கொடுத்து வாங்குவதுதான்.

என்று விடிவு தமிழுக்கு…

நன்றி : ஜூனியர் விகடன்
 
 
”தமிழில் வாதாடக் கூடாது!”
 
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் எல்லாம் அர சியல்வாதிகளின் வெற்றுக் கூச்சல். அந்தக் கூச்சல்கள் எல்லாம் நீதிமன்றத்தில் செல்லாது’ என்று சொல்லாமல் சொல்லி​விட்டது சென்னை உயர் நீதி மன்றம். 

கடந்த 2-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சிவக்குமாருக்கும் வழக்கறிஞர் பாரிக்கும் இடையே நடந்த வாதப் பிரதிவாதம்தான் நீதிமன்றத்தில் தமிழுக்கான இடம் என்ன என்பதை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. அன்று நீதிமன்றத்தில் நடந்ததை அப்படியே தருகிறோம்.

Continue reading…

‘டைம்’ பத்திரிக்கைக்குப் பதில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வைக் கிழித்த காங்கிரஸார்!

இது நடந்தது கடந்த ஜூலை 2012.

பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம் நடத்தி அனைவர் முன்பும் பெரும் கேலிப் பொருளாகினர்.

Source : Thatstamil.com

பூலான் தேவி…..

ஒரு பெண் தலித் என்பதற்காக அவளை ஒரு ஜாதி தீவிரவாதி அவளின் பெற்றோர் முன்னாலையே கற்பழிப்பான், ஆனால் அந்த பெண்ணின் பெற்றோர்களை போலிஸ் கைது செய்து…விட்டு கொள்ளைக்காரி என்று சொல்லி அந்த பெண்ணையும் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து பத்து பேர் கற்பழிப்பார்கள், காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தால் மறுபடியும் ஊருக்கு நடுவே வைத்து பாலியல் பலத்காரம் செய்வார்கள், பதினைந்து வயது சிறுமிக்கு நடந்த கொடுமைகளை தட்டிகேட்க எவனுக்கும் இங்கே துணிவில்லாமல் போனது,