திறந்த மடல்

கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் – பழ. நெடுமாறன்

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

“எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே’ என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
“பொடா’ சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய “தொல்காப்பியப் பூங்கா’ நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.
Continue reading…

திருமாவளவன் மற்றும் ராமதாஸ் அவர்களுக்கு

சரவணன் என்கின்ற நண்பர் வரைந்துள்ள கடிதங்கள் …. நன்றி சரவணன்

சகோதரர் திருமாவளவன் அவர்களுக்கு

நீங்கள் தமீழீழ மக்களுக்காக குரல் கொடுத்த

தலைவர்களில் தாங்களும் ஓருவர்

தங்களின் வேகத்தை நானும் சந்தோஷ பட்டேன்

ஆனால் நீங்கள் மக்களவை தேர்தலில் Continue reading…

கலைஞருக்கு திமுகவை நேசித்த முன்னாள் திமுக தொண்டன் வரையும் மடல்

இந்த மடலை வரைந்தது நான் அல்ல, சரவணன் என்ற நண்பர் வரைந்தது. அவருக்கு நன்றிகள் பல…

கலைஞர் அவர்களுக்கு,

தற்போது தேர்தலில் தாங்கள் அடைந்த தோல்வி கண்டிப்பாக தங்கள் கழகத்திற்கு கிடைக்க வேண்டிய தோல்விதான் இன்னும் சொல்ல போனால் தங்களுக்கு கிடைத்த 23 இடங்களே மிக மிக அதிகம் காரணம் நீங்கள் திமுக விற்கும் தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் செய்த தூரோகங்கள் மிக மிக அதிகம் உங்களுக்காக உழைத்து உங்கள் கட்சி வளர்வதற்காக மதுரையில் அரும்பாடு பட்ட தா. கிருட்டிணன் அமைச்சர் அவர்களை தங்கள் மகனின் ஆட்களால் படுகொலை செய்ய பட்டார். Continue reading…

என்ன செய்ய வேண்டும் ? – சவுக்கு

நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சவுக்கின் கருத்துக்களை நூறு சதவிதம் நாம் வழி மொழிகிறேன்.

Source: http://savukku.net/home/715-2011-04-12-09-57-37.html

வாசகர்கள் பல்வேறு பேர், பின்னூட்டங்களிலும், நேரிலும், தொலைபேசியிலும், யாருக்கு வாக்களிப்பது, என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

Continue reading…

To, விஜயகாந்த், FROM, தமிழருவிமணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்!

‘மக்களோடும் தெய்வத்தோடும் மட்டும்தான் எனக்குக் கூட்டணி’ என்றவர் நீங்கள். எந்த

அரசியல் கட்சியும் தேர்தல் களத்தில் தனித்து நிற்கத் தயங்கியபோது, மாநிலம் தழுவிய மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தனித்து நின்ற உங்கள் துணிச்சல் மனம் திறந்த பாராட்டுக்கு உரியது. கூட்டணி அரசியலில் அனைத்துக் கட்சிகளும் குளிர் காயும்போது, நீங்கள் மட்டும் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டே இருந்தால், கச்சேரி கேட்கும் ரசிகர் கூட்டம் காலப்போக்கில் குறைந்துவிடும் என்ற அச்சம் உங்களை அலைக்கழித்துவிட்டது.
கேப்டன்… எது சாத்தியமோ, அதை ஒழுங்காகச் செய்வதற்குப் பெயர்தான் அரசியல். ‘politics is the art of possible’ என்பதுதான் அரசியல் வகுப்பின் அரிச்சுவடி.
Continue reading…