ஊழல்

இவர்கள் ஏன் பாராட்டுகிறார்கள்?

திரை உலகினருக்குப் பொதுவாக சலுகைகள் வழங்கியது மட்டுமல்ல, சில திரை உலக பிரபலங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளையும் தீர்த்துக் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதனால், விஜய்சேதுபதி, வடிவேலு, சத்தியராஜ், விஷால், பாக்கியராஜ் போன்ற திரை பிரபலங்கள் தி.மு.க. ஆட்சியையும் முதல்வர் ஸ்டாலினையும் பாராட்டி வருகின்றனர்.

தமிழக அரசுக்கு காந்திய மக்கள் இயக்கம் வேண்டுகோள் & எச்சரிக்கை

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே,

வருமுன் காப்போம் என்ற அடிப்படையில், மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்திற்கு முட்டை வாங்குவதில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற, இந்த ஆண்டும் திட்டமிடப்பட்டு கொண்டிருக்கின்ற ஊழலை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயர் சொல்லக்கூடிய ஒரு சில நல்ல திட்டங்களில் இதுவும் ஒன்று, இதிலும் ஊழல் செய்வோம் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் உங்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் அப்படியே தொடரும் எனில், உங்களுடைய ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

அன்புடன்,

காந்திய மக்கள் இயக்கம்

முட்டை கொள்முதலில் அரசுக்கு இழப்பு இல்லை, 29 காசு லாபம்தான்: பா.வளர்மதி

ஒரு முட்டைக்கு தோரயமாக ரூபாய் 1.25 அதிகம் கொடுத்து வாங்கி விட்டு, 29 காசு லாபம்தான் என்று சொல்ல தில்லு வேண்டும்.

necc_egg_price_june_2014_dec_2014

Continue reading…

”அவ்வளவு பணம் கொடுக்க முடியாது… கல்லூரியை உங்கள் பெயருக்கு எழுதி வைக்கிறேன்”

ருத்துவமனைகள் அநியாயமாகப் பணம் பிடுங்குகின்றன என்​பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் இருந்தே ஊழ லுக்கான அஸ்திவாரங்கள் ஆரம்பம் ஆகின்றன என்பதைத்தான் சமீபத்திய சி.பி.ஐ. ரெய்டுகள் உணர்த்துகின்றன! 

கடந்த சில மாதங்களாகவே சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு சி.பி.ஐ. போலீஸுக்கு சில ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. முக்கியமாக இரண்டு பேர் மீது. ஒருவர் சென்னையைச் சேர்ந்த டாக்டர் முருகேசன். அகில இந்தியப் பல் மருத்துவக் கவுன்சில் உறுப்பினர். எஸ்.ஆர்.எம். பல் மருத்துக் கல்லூரியின் டீன் (பொறுப்பு) ஆகவும் இருந்தவர். இன்னொருவர் அரசியல் ஆத ரவு பெற்ற சீனியர் டாக்டர். முருகேசனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஊதுகுழலாகச் செயல்படுகிறவர்.  

Continue reading…