அரசியல்

திறவுகோல்

திறவுகோல் – செல்வம், மகிழ்ச்சி, வளமான வாழ்வு இவற்றினுடைய திறவுகோல் என்ன என்பதுதான் புரியாத புதிர்!!

அனைவருடைய வாழ்க்கையும் அந்த திறவுகோலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது

பெட்ரோல் அரசியல்

பெட்ரோல் அரசியல்:

பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து இருப்பதற்கு காரணம் மோடி தலைமையிலான ஒன்றிய அரசா அல்லது மாநில அரசுகளா அல்லது இரண்டுமா?

இதற்கு காரணம் இருவரும் தான்.

பெட்ரோல் டீசல் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருள் என்னுடைய விடை விலை கடந்த ஏழு ஆண்டுகளில் குறைந்திருக்கிறது அதனை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் வைத்து விலைவாசி ஏற்றத்தை தடுக்க வேண்டிய அரசுகள் கைகட்டி மௌன பார்வையாளர்களாக இல்லை இல்லை பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு வைத்து அதன் மூலம் அதிக அளவிலான வரி வருவாய் பெற்று அதில் ஊழல் செய்வதிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

திறன் அற்றவர்களை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்துவிட்டு நாம் பட்டிமன்றம் நடத்தி என்ன பயன?

ஊராட்சி

ஊராட்சி – சமீபத்தில் 9 மாவட்டங்களில் தமிழகத்தில் நடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்கள் அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தரப்பட்டிருக்கின்றன உரிமைகளை அறிந்து முழுமையாக அவற்றைப் பயன்படுத்தி தங்கள் தங்கள் ஊராட்சியை நல்ல முறையில் நிர்வகிக்க வேண்டும்.

அதிமுக

அதிமுக – இந்தியா முழுவதும் பரவி இருக்கின்ற சீமைக்கருவேல மரம் போன்று இது மக்களுக்கு நன்மை செய்யும் என்று ஒரு காலத்தில் தொடங்கப்பட்டு இன்று தமிழகத்தினுடைய துர்பாக்கியங்களில் ஒன்றாக மாறிவிட்ட ஒரு அரசியல் கட்சி.

வணக்கம்

1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்து வலம்புரி ஜான் நக்கீரன் இதழில் ஒரு தொடர் எழுதினார். அதுதான் வணக்கம்.

அரசியல் என்பது சாதாரணமில்லை. இருபக்கமும் கூரான கத்தி. ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களுக்கு லாவகமாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது. வீச வேண்டிய இடத்தில் வீசி மேலே வந்துவிட்டார்கள். கண்ணதாசனுக்கும் வலம்புரிஜானுக்கும் இன்னபிற அரசியல் தோல்வியாளர்களுக்கும் பயன்படுத்தத் தெரியவில்லை அல்லது பயன்படுத்த விரும்பவில்லை.  அரசியல் வரலாற்றில் சரி தவறு என்றெல்லாம் எதுவுமேயில்லை. வெற்றி தோல்வி மட்டும்தான் கணக்கு. வென்றவர்கள் வரலாறு ஆகிறார்கள். வரலாற்றுப் புழுதியானது தோற்றவர்களை வேகமாகக் கீழே தள்ளி மண் மூடி புதைத்துவிடுகிறது.