அரசியல் மாற்றம்

ஆம் ஆத்மி தலைவர்களே செய்வீர்களா?

டெல்லி வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் இந்தியா முழுவதற்கும் தந்திருக்கும் செய்தி, இந்த தேசம் மீதும் அதன் வருங்காலம் மீதும் நம்பிக்கையை தருகின்றது.

இமாலய வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களே.

தாங்கள் தங்கள் கட்சியை கட்சி இரண்டாக பிரித்து ஒன்றை ஆளும் கட்சியாகவும் ஒன்றை எதிர்கட்சியாகவும் வைத்து எப்படி ஆளும் கட்சியும் , எதிர்கட்சியும் செயல்படவேண்டும் என்பது டெல்லி வாக்காளர்களின் விருப்பம்.

ஆம் ஆத்மி தலைவர்களே செய்வீர்களா?

10377371_1033450700002253_8438342840212499050_n

வினவும், சவுகுக்கும், நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்ன?

வினவும், சவுகுக்கும் உண்மையுலேயே இந்த சமுகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறதா?

இந்த கேள்வி வரக் காரணம்,  அவர்களின் பதிவுகளும், செயல் திட்டங்களும் தான் நண்பர்களே,

அவர்களின் சமிபத்திய பதிவுகள்

இந்தியக் கடற்படையே, தமிழகத்தை விட்டு வெளியேறு

ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!

Continue reading…

தமிழா, இவனல்லவா மனிதன், தமிழன், தன்னலம் துறந்தவன், தலைவன்!!!

தமிழா, பார், இவனல்லவா மனிதன், தமிழன். நீயும் நானும் எந்த தலைவனுக்காக காத்துகொண்டு இருக்கிறோம், அவனுடைய சிந்தனையை பார்!. நான் மீண்டும் சொல்கிறேன், நாம் விரும்புகிற மாற்றம் இந்த மனிதனில் தான்,  தமிழருவி மணியன் மூலம் தான் தொடங்க வேண்டும்.  ஆம் அப்பொழுதுதான் அந்த மாற்றம் உண்மையானதாக, நிலையானதாகவும் இருக்கும். வாருங்கள் நண்பர்களே இவரின் பின்னால் அல்ல, இவருடன் இணைந்து மாற்றத்தை நோக்கி நடப்போம்.

Continue reading…

தெருவுக்கு வந்திருக்கும் தர்மபாலர்கள்! – தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

‘நெருக்கடி நிலை நாயகர்’ சஞ்சய் காந்தி யின் முக்கியமான சீடர் அப்துல் ரகுமான் அந்துலே. 1980-களின் தொடக்கத்தில், மகாராஷ்டிர மாநில முதல்வராக மகுடம் சூட்டப்பட்டார். நவீன சுல்தானைப்போன்று நடந்துகொண்ட அந்துலே, ஊரை அடித்து உலையில் போட, ‘இந்திரா காந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ என்ற அறக்கட்டளையை அமைத்தார். அந்த அறக் கட்டளைக்கு அள்ளிக் கொடுத்த தொழில் அதிபர்களுக்கும், வணிகப் பிரமுகர்களுக்கும் அன்று கடும் தட்டுப்பாட்டில் இருந்த சிமென்ட், எரிசாராயம் போன்றவை எளிதில் கிடைக்க ஏற்பாடு செய்ததுடன், அவர்களுக்கு வருமான வரியில் இருந்தும் விலக்கு அளிக்க வழிவகுத்தார் அந்துலே. அவருடைய ஊழல் தாண்டவம் எல்லை மீறியதால், மக்கள் காங்கிரஸுக்கு எதிராக எழுந்தனர். கட்சியைக் காப்பாற்ற அந்துலேவை முதல்வர் பதவியில் இருந்து விலக்கும்படி இந்திரா காந்திக்கு நெருக்கமானவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், ‘தன்னைப் பின்பற்றுபவரின் விசுவாசத்தைத் தக்கவைத்துக்கொள்ள, பிரச்னை வரும்போது தலைமை அவர்களோடு சேர்ந்து நிற்க வேண்டும்’ என்று அவர்களிடம் கீதோபதேசம் செய்தார் இந்திரா. (ஆதாரம்: ‘இந்திரா காந்தி’ நூல் – ஆசிரியர் இந்தர் மல்ஹோத்ரா) அன்று அந்து லேவுக்கு இந்திரா ஆதரவாக நின்றார். இன்று ஆ.ராசாவுக்கு அரணாக நம் முதல்வர் நிற்கிறார்!

Continue reading…