அயோக்கியர்கள்

மன்னிப்பு கேட்கமாட்டேன் – அண்ணாமலை

” மின்சாரத்துறை தொடர்பாக நான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன். அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு தொடர்ந்தால் அதனை சட்டப்படி சந்திப்பேன். தமிழகம் 1.59 லட்சம் கோடி கடனில் இருக்கிறது. இதற்கு தமிழக மின்வாரியத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதே காரணம். தனியாரிடம் மின் கொள்முதல் செய்யப்பட்டது துவங்கி பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளது.

மரியாதைக்குரிய பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்களே – ஊழல் நடந்திருப்பது உண்மை. அந்த ஊழல் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நடந்தது என்பதும் உண்மை.

ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற ஊழல் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை ஊழல் கட்சி என்று சொல்வது எந்த வகையில் தர்மமாகும்.

ஊழலுக்கு துணை போகின்ற பாரதிய ஜனதா கட்சி அதைச் செய்கின்றன அந்த இரண்டு கட்சிகளை விட மிக மோசமானது.

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நிச்சயம் வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்

யார் நடவடிக்கை எடுத்துள்ளார் அது என்ன நடவடிக்கை என்று கேட்பதற்கு அங்கேயே பத்திரிக்கையாளர்களுக்கு தெரியவில்லை என்பதனால் இந்த அம்மையார் தன் வாய்க்கு வருவது எல்லாம் பேசி பொழுதைக் கழித்துக் கொண்டு உள்ளார்.

மனித மூத்திரம் எரிபொருள் ஆக

அதற்குள் மூத்திரத்தை எப்படி எரிபொருளாகப் பயன்படுத்துவது என்று ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்படும்