அதிமுக இதற்கு பதில் சொல்லுமா?

அம்மா உங்களின் அறிவே அறிவு.  உங்களை எவன் வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

சென்னை, டிச.- 15 – அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில், மதிமுக​வில் பணியாற்றி வரும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 250 பேர் கழகத்தில் இணைந்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும, தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் தலைமைக் கழகத்தில் நேற்று (14.12.2012 வெள்ளிக் கிழமை), மதிமுக​வில் பணியாற்றி வரும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 250 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், மதிமுக​வைச் சேர்ந்த பொறியாளர் அணி துணைச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட அவைத் தலைவருமான லட்சுமணன், திருநெல்வேலி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் தூத்துக்குடி வசந்தம் சரவணன், சட்டத் துறை துணைச் செயலாளர் மதுரை ஆசைத்தம்பி, சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ரைஸ்மில் பாலசுப்பிரமணியம், மாநில சட்டத் துறை துணைச் செயலாளரும், வடுகபட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவை சி.ஜெ. பிலிப்சன், மாணவர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பொன்னியின் செல்வன், சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியச் செயலாளர் திரு. புதுவயல் சுப்பிரமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் காரைக்கால் சக்திவேல் உடையார், தென் சென்னை மாவட்ட அவைத் தலைவர் ஹைடெக் மனோகரன், மாவட்டப் பொருளாளர் ஈகை செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 125 நிர்வாகிகள் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், மதிமுக​வைச் சேர்ந்த தென் சென்னை மாவட்டம், அண்ணாநகர் பகுதிச் செயலாளர் என்.எஸ். விஜயன், திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் பார்த்தசாரதி, சட்டத் துறை துணைச் செயலாளர் திருவள்ளூர் சிவ. சண்முகம், சட்டத் துறை துணைச் செயலாளரும், ராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளருமான கே.வி. சுரேஷ், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியச் செயலாளர் முத்து சுப்பிரமணியன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளரும், நாகர்கோவில் நகர மன்ற 1​ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.வி. உதயகுமார், மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு. அய்யங்காளை, பெரியகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், கோவை 4​ஆவது பகுதிச் செயலாளர் பிட்டா ரங்கநாதன், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரச் செயலாளர் பசும்பொன் மனோகரன், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியச் செயலாளர் கண்ணபிரான், தலைமைக் கழக சொற்பொழிவாளர் பழனி குமணன், தென் சென்னை மாவட்டம், பொதுக்குழு உறுப்பினர் அன்னை டேவிட் உள்ளிட்ட 125 நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்.
ஆக மொத்தம் மதிமுக​வைச் சேர்ந்த 250 நிர்வாகிகள் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வுகளின் போது, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் உடன் இருந்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, மதிமுக​வில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்கான கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, ம.தி.மு.க.வில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசுகையில், இன்று அன்பு சகோதரர், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் ஏற்பாட்டின்படி, ம.தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைய வந்துள்ள உங்கள் அனைவரையும், கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் அன்புடன் வருக! வருக! என வரவேற்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவு. நீnullங்கள் வந்த இடம் நல்ல இடம். எத்தகைய நம்பிக்கையுடன் இன்று கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கை வீண்போகாது என்பதை தெரிவித்து, நம்முடைய லட்சியம் கல்லாமை, இல்லாமை இல்லாத ஒரு தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும். மக்களுக்காகவே இயங்குகின்ற ஒரு இயக்கம் அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை நாம் போராடிப் பெற வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நீnullங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, உங்கள் அனைவருக்கும் மிக ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம் என்று உரையாற்றினார்.
கருணை உள்ளத்தோடு தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக,
கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
அ.தி.மு.க.பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக, தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உள்ளிட்டோர் பெருந்திரளாகத் திரண்டிருந்ததோடு, சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், வரவேற்புப் பதாகைகளும் அழகுற அமைக்கப்பட்டு, கழக உடன்பிறப்புகள் கழகக் கொடிகளை தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் ஆங்காங்கே திரண்டிருந்து மகத்தான வரவேற்பு அளித்தனர்.

Source : http://www.thinaboomi.com/2012/12/14/17678.html

 

அதிமுக.வில் இணைந்த மதிமுக நிர்வாகிகள்

மதிமுக பொறியாளர் அணி துணைச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட அவைத் தலைவருமான லட்சுமணன், திருநெல்வேலி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் தூத்துக்குடி வசந்தம் சரவணன், சட்டத்துறை துணைச் செயலாளர் மதுரை ஆசைத் தம்பி.

சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ரைஸ்மில் பாலசுப்பிரமணியம், மாநில சட்டத்துறை துணை செயலாளரும், வடுகபட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவை சி.ஜெ.பிலிப்சன், மாணவர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பொன்னியின் செல்வன்.

சிவகங்கை மாவட்ட, சாக்கோட்டை ஒன்றியச் செயலாளர் புதுவயல் சுப்பிரமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் காரைக்கால் சக்திவேல் உடையார், தென்சென்னை மாவட்ட அவை தலைவர் ஹைடெக் மனோகரன், மாவட்ட பொருளாளர் ஈகை செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 250 நிர்வாகிகள் தங்களை அதிமுக அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

Source: http://news.vikatan.com/index.php?nid=11627
mdmk-1