பூரண மதுவிலக்கு

மெல்லத் தமிழன் இனி…10 – மதுவிலக்குப் போராட்டம்

டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஒன்றில் பொறுப்பில் இருக்கிறார் நண்பர் தனசேகரன். அவர் சொன்ன தகவல் மிகவும் அதிர்ச்சி தருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 2,500 டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துவிட்டார்கள். பெரும்பாலும் இயற்கையாக இல்லை. லாரி மோதி, கல்லீரல் வீங்கி, குடல் வெடித்து, தற்கொலை செய்துகொண்டு… இப்படி விதம்விதமாக. அச்சம் தருகிறது அகால மரணங்களின் பட்டியல்.

காரணம், மது அரக்கன். அவர்களுக்கெல்லாம் வயது 30 முதல் 40 வரை மட்டுமே. சாக வேண்டிய வயதா இது? இந்திய ஆண்களின் சராசரி வயதே 64தானே. அதில் பாதியைக்கூட வாழவில்லையே இந்த இளைஞர்கள். அநேகமாக, படித்த பட்டதாரி இளைஞர்கள். இவர்கள் ஒவ்வொருவரின் கதையையும் கேட்டால் கண்ணீர் வருகிறது.
Continue reading…

மதுவை ஏன் தடை செய்ய வேண்டும்?

“மதுவை ஏன் தடை செய்ய வேண்டும் என தமிழருவி மணியன், வைகோ,  ராமதாஸ், அய்யா சரவணா பெருமாள் போன்றோர் கூறும் காரணம் இதோ ,அரசே தமிழக பெண்களையும் குடிகாரி ஆக்கிவிட்டு தலைமுறையை சீரளித்தபின் உங்கள் நோக்கம் மான இலவசத்தை வாங்க குடிகாரர்கள் தான் இருப்பார்கள் நாட்டில் ”

Continue reading…

மண்ணைத் தின்னும் குழந்தையை ‘அம்மா’ தான் தடுக்க வேண்டும்! நத்தம் விஸ்வநாதனுக்கு தம்ழருவி மணியன் பதில்

ஜூனியர் விகடன் 17 08 2014

”பூரண மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டுவந்தாலும் பயன் இல்லை. அண்டை மாநிலங்களுக்கு மதுவுக்காகச் செல்லத் தொடங்குவார்கள். மதுக்கடத்தல் பெருகும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது” எனச் சொல்லியிருக்கிறார் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியனிடம் இதுகுறித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.
Continue reading…

குடி கெடுக்கும் குடியை ஒழித்திட, நாளை (16 08 14) நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வாருங்கள்.

குடி கெடுக்கும் குடியை ஒழித்திட, நாளை (16 08 14) நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வாருங்கள்.
10543575_596255280492166_1267191291055528146_o