பூரண மதுவிலக்கு

மதுவிலக்கு சத்தியாகிரகம்

மதுவிலக்கு சத்தியாகிரகம்

Thanga Vel: பூரண மதுவிலக்கு கோரி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சென்னை ராமதாஸ் 50 நாட்கள் ,50முறை கைது செய்யப்பட்டு ,11-2-15அன்று மதுவிலக்கு கோரி முதலவர் ஓபன்னீர்செலவத்துக்கு கறுப்பு கொடி காட்டி கைது செய்ய பட்டு புழல் சிறையில் 15ரிமாண்ட் செய்யபட்டு உள்ளார். இது முடிவல்ல ஆரம்பம.
Continue reading…

மதுக் கடைகளை மூடக் கோரி கண்களைக் கட்டிக் கொண்டு பெண்கள் போராட்டம்!

சென்னை: தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கை அமல்பபடுத்தக் கோரி சென்னையில் இன்று பெண்கள் சங்கத்தினர் நடத்திய நூதனப் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மதுக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. தெருவில், சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. குடிகார்ரகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.சாலையில் ஆங்காங்கே யாராவது குடிகாரர்கள் விழுந்து கிடப்பது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மது விலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மதுக் கடைகளை இழுத்த மூட வேண்டும் என்று மதிமுக, பாமக ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. போராடியும் வருகின்றன. பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராடியவண்ணம் உள்ளன.
Continue reading…

மெல்லத் தமிழன் இனி…10 – மதுவிலக்குப் போராட்டம்

டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஒன்றில் பொறுப்பில் இருக்கிறார் நண்பர் தனசேகரன். அவர் சொன்ன தகவல் மிகவும் அதிர்ச்சி தருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 2,500 டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துவிட்டார்கள். பெரும்பாலும் இயற்கையாக இல்லை. லாரி மோதி, கல்லீரல் வீங்கி, குடல் வெடித்து, தற்கொலை செய்துகொண்டு… இப்படி விதம்விதமாக. அச்சம் தருகிறது அகால மரணங்களின் பட்டியல்.

காரணம், மது அரக்கன். அவர்களுக்கெல்லாம் வயது 30 முதல் 40 வரை மட்டுமே. சாக வேண்டிய வயதா இது? இந்திய ஆண்களின் சராசரி வயதே 64தானே. அதில் பாதியைக்கூட வாழவில்லையே இந்த இளைஞர்கள். அநேகமாக, படித்த பட்டதாரி இளைஞர்கள். இவர்கள் ஒவ்வொருவரின் கதையையும் கேட்டால் கண்ணீர் வருகிறது.
Continue reading…

மதுவை ஏன் தடை செய்ய வேண்டும்?

“மதுவை ஏன் தடை செய்ய வேண்டும் என தமிழருவி மணியன், வைகோ,  ராமதாஸ், அய்யா சரவணா பெருமாள் போன்றோர் கூறும் காரணம் இதோ ,அரசே தமிழக பெண்களையும் குடிகாரி ஆக்கிவிட்டு தலைமுறையை சீரளித்தபின் உங்கள் நோக்கம் மான இலவசத்தை வாங்க குடிகாரர்கள் தான் இருப்பார்கள் நாட்டில் ”

Continue reading…