காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 03.11.2021 அன்று (மாலை 6.45-7.45)

வணக்கம்,காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 03.11.2021 அன்று (மாலை 6.45-7.45)
பேசுபவர்:  எழுத்தாளர் அ.மார்க்ஸ்
புத்தகம்: “சத்திய ஒளி மகாத்மா:காந்தியைப் பற்றிய விமர்சனங்களும் உண்மைகளும்”
 (குறிப்பு: இந்நிகழ்வு GoogleMeet வழியே நேரலையில் (லிங்க்:https://meet.google.com/qwy-pozz-oei) நிகழும். நிகழ்ச்சி நடைபெறும் நாளன்றும் லிங்க் WhatsApp வழி வழங்கப்படும்)

பேச்சாளர் பற்றி:தமிழில் தீவிர வாசிப்புப் பழக்கம் உள்ள எவரும் திரு.அ.மார்க்ஸ் அவர்களை அறியாமல் இருக்க முடியாது. கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.அ.மார்க்ஸ் அவர்கள் எழுத்தாளர், செயல்பாட்டாளர் மற்றும் அரசியல் விமர்சகர், என பன்முகம் கொண்டவர். பெண்கள், தலித் மற்றும் சிறுபான்மையினர் போன்றோர் முன்னேற்றம் தொடர்பாக தொடர்ந்து எழுத்து, பேச்சு மற்றும் களப்பணி ஆகியவற்றின் மூலமாக செயலாற்றி வருபவர்.


 நூல் பற்றி: நூலின் தலைப்பே அதன் உள்ளடக்கத்தை சொல்லிவிடுகிறது. ஒருவர் காந்தியைப் பற்றி அறிய முற்படும்போதே அவரைப் பற்றிய விமர்சனங்களும் உடன் சேர்ந்து வந்துவிடுகின்றன. காந்தி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல, அதே சமயம் அவ்விமர்சனங்களுக்கு பின்னால் உள்ள உண்மை என்ன என்று பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இருக்கு. அவ்வகையில், இந்நூலில், காந்தியைப் பற்றி பொது வெளியில் இருக்கும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலும், காந்தியத்தின் கொள்கைகளுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கிலும் எட்டு காந்திய அறிஞர்கள் எழுதிய 11 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சத்திய ஒளி பதிப்பகத்தார் வெளியிட்ட இந்நூலை, தன்னறம் பதிப்பகத்தார் அச்சிட்டு விநியோகம் செய்கின்றனர்.           

தொடர்புக்கு:      காந்தி கல்வி நிலையம்,தக்கர் பாபா வித்யாலயா வளாகம்,58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர்,சென்னை – 600017

தொடர்புக்கு:  9790740886 (ம) 9952952686