கலைஞருக்கு திமுகவை நேசித்த முன்னாள் திமுக தொண்டன் வரையும் மடல்

இந்த மடலை வரைந்தது நான் அல்ல, சரவணன் என்ற நண்பர் வரைந்தது. அவருக்கு நன்றிகள் பல…

கலைஞர் அவர்களுக்கு,

தற்போது தேர்தலில் தாங்கள் அடைந்த தோல்வி கண்டிப்பாக தங்கள் கழகத்திற்கு கிடைக்க வேண்டிய தோல்விதான் இன்னும் சொல்ல போனால் தங்களுக்கு கிடைத்த 23 இடங்களே மிக மிக அதிகம் காரணம் நீங்கள் திமுக விற்கும் தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் செய்த தூரோகங்கள் மிக மிக அதிகம் உங்களுக்காக உழைத்து உங்கள் கட்சி வளர்வதற்காக மதுரையில் அரும்பாடு பட்ட தா. கிருட்டிணன் அமைச்சர் அவர்களை தங்கள் மகனின் ஆட்களால் படுகொலை செய்ய பட்டார்.

அந்த குற்றவாளிகளுக்கு தாங்கள் தண்டனை வாங்கி தரவில்லை மாறாக விடுதலை அளிக்கப்பட்டு பதவி உயர்வும் அளிக்க பட்டது. தா கிருட்டிணன் மரணத்திற்கு தாங்கள் கூறிய காரணம் மிகவும் மோசம் கிருட்டிணனை உட்கட்சி தேர்தலில் தலையிடாதே என்று கூறினேன் என்று சொன்னிர்கள்…

தலையிட்டதால் கொன்று விடுவிர்களா…?

அல்லது நீங்கள் விரும்பும் ஆட்களே உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமா…?

உட்கட்சி தேர்தலில் கொலை நடப்பதும் சாதாரணம் சொன்னிர்கள்…

அந்த இடத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர் இறந்தால்

அந்த வார்த்தை சொல்லி இருப்பிர்களா…?

தினகரன் பத்திரிக்கை எரிப்பில் அப்பாவியான 3 பேரை உயிரோடு எரித்து கொன்றார் உங்கள் மகன். இதை நான் சொல்லவில்லை உங்கள் பேரனும் அவர் தொலைகாட்சியும் பத்திரிக்கையும் தான் சொன்னது

அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்திர்கள்…?

உங்கள் குடும்பம் இனணந்தபோது கண்கள் பனித்தது இதயம் இனித்தது என்றிர்கள். அந்த 3 பேர் உங்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் உங்கள் கண்கள் பனிக்குமா அல்லது இதயம் தான் இனிக்குமா…?

நீங்கள் கேட்ட பதவி தரவில்லை என்றதும் மற்றும் 63 தொகுதிகள் காங் கேட்கிறார்கள் என்றதும் மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று கூறிய நீங்கள் ஈழத்தில் அனைத்து தமிழர்கள் கொல்ல பட்டபோதும் பதவி விலகுவோம் கூறவில்லை காரணம் பதவி வெறி சுய நலம்…

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ராஜா கைது செய்ய பட்ட போது ராஜா தலித் ஆதிக்க சக்தியால் பலி வாங்க படுகிறார் என்றீர்கள் ஆனால் தங்கள் மகள் ஜாமின் மனுவுக்கு மிகவும் உயர்ந்த உயர் வகுப்பு வக்கீல் ராம்ஜெத்மலானி வைத்து வாதாடுகிறீர்கள்

இது எந்த விதத்தில் நியாயம்…?

ராஜாவை பலியாடாக்குகின்றீர்கள் இது சரியா…?

தமிழகத்தில் விலைவாசி உயர்வு மற்றும் மின் வெட்டு கவனிக்காம் அனைத்து துறைகளையும் தங்கள்

கையகப்படுத்துவதிலேயே குறியாய் இருந்திர்கள்….

பத்திரிக்கை துறை கேபிள் துறை சினிமா துறை அரசியல் அனைத்திலும் உங்கள்

குடும்பத்தினரின் ஆதிக்கமே இருந்தது

இதனால் தான் மக்கள் உங்கள் அணிக்கு தோல்வி பரிசளித்து விட்டனர்….

தங்கள் கூறிமது போல் அண்ணா வளர்த்த

திமுக வை உண்மையான திமுக தொண்டர்களிடம்

ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுங்கள் கலைஞர் அவர்களே

இப்படிக்கு
திமுகவை நேசித்த
முன்னாள் திமுக தொண்டன்..