50 சென்ட்… மாதம் 30 ஆயிரம்…

பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம்..!
த. ஜெயகுமார்,படங்கள்: பீரகா வெங்கடேஷ்
இயற்கை விவசாயத்தில் பட்டதாரி இளைஞர்கள்…

கூட்டுப் பண்ணையில் கீரைகள்…

விரைவில் இயற்கை விவசாயச் சந்தை…

விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து… பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்… பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்… ஆச்சர்யம்தானே!

சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், விஞ்ஞானி, கல்லூரிப் பேராசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொறியாளர்கள் என பல துறையைச் சேர்ந்த இவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது, இயற்கை விவசாயம். ‘நல்ல கீரை’ என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி, பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்… ஜெகன்னாதன், கௌதம், ராதாகிருஷ்ணன், சலோமிஏசுதாஸ், ராமு, விசு, திருமலை, புனிதா, ஷாம், சிவகுமார், ராஜமுருகன், அறிவரசன் ஆகிய 12 பட்டதாரி இளைஞர்கள்!

திருநின்றவூர்-பெரியப்பாளையம் பிரதான சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு இந்த அமைப்பினர், இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்து… சென்னையில் நேரடியாக சந்தைப்படுத்தி வருகிறார்கள்.

பண்ணைக்குத் தேடிச் சென்ற நம்மிடம், முதலில் பேச ஆரம்பித்த ஜெகன்னாதன், ”கிராமப் பொருளாதாரத்தப் பத்தி அடிக்கடி நான் சிந்திப்பேன். அதோட தொடர்ச்சியா, கிராம மக்கள்கிட்ட சர்வே பண்ணினேன். 240 குடும்பங்கள்கிட்ட ஆய்வு பண்ணினதுல… செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மதுபானங்கள், புகையிலைனு வருஷத்துக்கு 1 கோடியே

60 லட்ச ரூபாயைச் செலவு செய்றாங்கனு தெரிஞ்சுது. படாதபாடுபட்டு இந்தக் குடும்பங்கள் சம்பாதிக்கற பணம்… சம்பந்தமில்லாத யாருக்கோ போறத நினைக்கறப்ப… ரொம்ப வருத்தமா இருந்துச்சு.

இந்தச் செலவைக் குறைக்கறதுக்கும், இவங்கள இதுல இருந்து மீட்டெடுக்கறதுக்கும் என்ன வழி?னு யோசிச்சப்பதான்… இயற்கை விவசாயத்தால உரம், பூச்சிக்கொல்லிச் செலவை சுத்தமா ஒளிச்சுடலாம்னு தோணுச்சு. இதுக்காகவே நம்மாழ்வார் அய்யா நடத்துன பல கூட்டங்கள்ல கலந்துகிட்டேன். இயற்கை விவசாயிகள் பலரையும் சந்திச்சேன். அவங்ளோட தங்கி, அவங்க செய்ற விவசாயத்தப் பாத்து, தொழில்முறையா எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுகிட்டேன்.

இணைத்த இயற்கை!

அப்போ பன்னாட்டு கம்பெனியில வியாபார மேம்பாட்டாளரா நான் இருந்தேன். அங்க நண்பர்களோட பேசினதுல… நிறைய பேருக்கு இதுல ஆர்வம் இருக்கறது தெரிஞ்சது. அவங்களையெல்லாம் இணைச்சு… இந்த அமைப்பைத் தொடங்கினோம். முதல் கட்டமா, சென்னை மக்களுக்கு ரசாயனம் தெளிக்காத கீரையை உற்பத்தி செஞ்சு கொடுக்கலாம்னு முடிவு செஞ்சோம். அதுக்காக, இந்த 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கீரை சாகுபடியைத் தொடங்கியிருக்கோம். விளையற கீரையை சென்னையில வாடிக்கையாளர்களுக்கு நேரடியா விற்பனை செய்றோம்.

மொத்தமிருக்கற 12 உறுப்பினர்கள்ல… நாலு பேர் முழுநேரமா செயல்படுறோம். இதுக்காகவே… ஏற்கெனவே நாங்க பார்த்திட்டிருந்த வேலையை விட்டுட்டோம் (ஜெகந்நாத், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் மருத்துவ நிறுவன அதிகாரிகளாகவும்… கௌதம், மின்சாதனங்கள் தயாரிக்கும் நிறுவன நிதி ஆலோசகராகவும், சலோமி ஏசுதாஸ் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் டெக்கான் டெவலப்மென்ட் சொஸைட்டி தொண்டு நிறுவன திட்ட அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்). மத்த உறுப்பினர்கள்.. வாரம் ஒரு முறை வருவாங்க. மாசம் ஒரு முறை கூட்டம் நடத்துவோம். அவங்கவங்க ஆலோசனைகளைப் பரிமாறிக்குவோம்.

இயற்கை உரத் தேவைக்காகவே நாட்டு மாடுகளை வளர்க்கிறோம். இப்போதைக்கு எட்டு மாடுகள் இருக்குது. இயற்கை முறையில விளைஞ்ச பொருட்களை விக்கிறதுக்காக… ‘நல்ல சந்தை’னு ஒரு அமைப்பையும் தொடங்கப் போறோம். இயற்கை விவசாயிகள், அத்தனைப் பேருமே பயன்படுற வகையில லாபநோக்கம் இல்லாம இதை நடத்தப் போறோம்” என்றார் ஜெகன்னாதன்!

”கீரையில சின்னச்சின்ன ஓட்டைகள் இருந்தாகூட… பூச்சிக் கீரைனு சொல்லி வாங்க மாட்டேங்கறாங்க சிலர். இயற்கை முறையில விளைவிக்கறப்ப… சில நேரங்கள்ல கீரைகள் இப்படித்தான் இருக்கும். அதோட, பூச்சிகள் சாப்பிடற கீரைகளை சாப்பிடறதால எந்த பாதிப்பும் இல்லைங்கறதுதான் உண்மை. பூச்சிங்க சாப்பிட்டிருந்தா… அது இயற்கையில விளைஞ்ச கீரைனு நம்பி வாங்கலாம். ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கற வயல்கள்ல இருந்து வர்ற கீரைகள்தான், பெரும்பாலும் ஓட்டைஇல்லாத கீரையா இருக்கும்.

பொதுவா… காய்கறி, கீரை, பழம்னு எல்லாத்துக்குமே சீசன் இருக்கு. அந்தந்த சீஸன்லதான்… அதெல்லாம் நல்லா விளையும். அப்படிப்பட்ட காய்கறிகளை, இயற்கை முறையில எளிதா விளையவெக்க முடியும். ஒவ்வொரு சீஸன்லயும், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் என்ªன்ன தேவைப்படும்னு இயற்கையே செய்திருக்கற ஏற்பாடுதான் இது. அதனால, அந்தந்த சீஸன்ல விளையறதை மட்டும் வாங்கிச் சாப்பிடறதுதான் நல்லது. இந்த உண்மை புரியாம, பலரும் சீஸன் இல்லாத சமயங்கள்லகூட அந்தக் காய்கள்தான் வேணும்னு வற்புறுத்திக் கேக்கறாங்க” என்று தங்களது சிக்கலைச் சொன்னார், முழுநேர ஊழியர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணன்.

விதவிதமா இருக்குது, கீரை!

”முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, சுக்கான், சக்கரவர்த்தினி, பசலைக் கீரை, அரைக் கீரை, சிறு கீரை, கொத்துமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, சிகப்புப் பொன்னாங்கன்னி, கோங்கூரானு சொல்லற சீமைக் காசினி, கொம்புக் காசினி, அகத்தி, முருங்கை, வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், வெந்தயக் கீரை, கல் இளக்கி, காசினி, கறிவேப்பிலை, மணத்தக்காளி, தண்டுக் கீரை, பருப்புக் கீரை, தவசிக் கீரை, சிலோன் கீரை, திருநீற்றுக் கீரை… இப்படி முப்பதுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை சாகுபடி செய்றோம்” என்று பட்டியலிட்ட முழு நேர ஊழியர் கௌதம், கீரை சாகுபடி செய்யும் முறைகள் குறித்து பாடம் சொன்னார்.

நிறைவாகப் பேசிய கௌதம், ” ஒரு பாத்தி அமைக்க, 200 ரூபாய் செலவாகும். முதல் கட்டமா, நாங்க மொத்தம் 50 சென்ட் நிலத்துல 300 பாத்திகள அமைச்சுருக்கோம். இதை ஒரு முறை அமைச்சா… மூணு, நாலு தடவை சாகுபடி பண்ணலாம். ஒரு பாத்தியில அதிகபட்சம், 100 கட்டு கீரை பறிக்க முடியும். ஒரு கட்டுக்கு 5 ரூபாய்க்கு குறையாம விலை கிடைக்கும். பாத்திகளோட இடைவெளியில அகத்தி, வல்லாரை, தூதுவளை, பிரண்டை மாதிரியான பயிர்களைப் போட்டிருக்கோம். வேலைக்கு 2 பேர் இருந்தா போதும். 300 பாத்தியிலிருந்தும் மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபா வரை வருமானம் கிடைச்சுட்டுருக்கு.

ஒரு பானை சோத்துக்கு, ஒரு சோறு பதம் போல, 50 சென்ட் நிலத்துல பல விஷயங்களைக் கத்துக்கிட்டோம். இந்த அனுபவத்தை வெச்சே… கீரை சாகுபடியை விரிவுப்படுத்தப் போறோம். அதேபோல, வேறு சில பயிர்களையும் கையில எடுக்கப் போறோம். இதன் மூலமா மொத்தமா இருக்கற

5 ஏக்கர்ல இருந்தும், ஒவ்வொரு மாசமுமே… பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். முறையா திட்டம் போட்டு உழைச்சா, விவசாயமும், மத்த தொழில் மாதிரி லாபம் கொட்டும். ஏற்கெனவே நாங்க பார்த்துட்டிருந்த வேலையில கிடைச்ச சம்பளத்தைவிட, இன்னும் கூடுதலா விவசாயத்தின் மூலமே லாபம் பார்க்க முடியும்கிறத நிரூபிச்சே தீருவோம்” என்று சூளுரைத்து விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,

ஜெகன்னாதன், செல்போன்: 99626-11767
கௌதம், செல்போன்: 98406-14128
ராதாகிருஷ்ணன், செல்போன்: 97898-40630

——————————————————————————–

தெளிப்புப் பாசனம்தான் நல்லது !

கீரை சாகுபடிக்கு கௌதம் சொல்லும் சாகுபடி முறை !

‘கீரை சாகுபடிக்கு மேட்டுப்பாத்தி முறைதான் சிறந்தது. சாகுபடிக்குத் தயார் செய்த நிலத்தில், 30 சதுர அடிக்கு ஒரு பாத்தி என்கிற அளவில் அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கு இடையிலும் நடந்து செல்ல வசதியாக, இடைவெளிவிட வேண்டும். பாத்தியைச் சுற்றி செங்கல் அல்லது ஓடுகள் மூலமாக அரண் அமைத்துக் கொண்டால், இடும் தொழுவுரம் கீழே சரியாது.

பாத்திக்குள் நன்றாகக் கொத்திவிட்டு, அரையடி உயரத்துக்கு மேடாக்கி, ஒரு கூடை எருவை விதையோடு சேர்த்துத் தூவ வேண்டும். ஒரு பாத்தியில் தூவிய ரகத்தை அடுத்தப் பாத்தியில் தூவக் கூடாது. ஒரே ரகத்தைப் போட்டால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், முதலில் தூவிய ரகத்தை மூன்று பாத்திகள் தள்ளித்தான் தூவ வேண்டும். கீரை தூவிய உடனே பாசனம் செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தியில் கீரை உற்பத்தி செய்ய… தெளிப்பு நீர்ப் பாசனம்தான் சிறந்தது. இம்முறையில் சீக்கிரம் விதை முளைக்கத் தொடங்கும்.

——————————————————————————–

அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை !

வெந்தயக்கீரை 15 நாட்களிலும், சிறுகீரை, பருப்புக்கீரை ஆகியவை 20 நாட்களிலும், முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை 30 நாட்களிலும், கொத்தமல்லி

40 நாட்களிலும், வல்லாரை, பொன்னாங்கன்னி ஆகியவை 60 நாட்களிலும் அறுவடைக்கு வரும்.

பசலை, சுக்கான், காசினி, புளிச்சக்கீரை, மணத்தக்காளி, முருங்கை, கறிவேப்பிலை ஆகியவை 6 மாதத்தில் அறுவடைக்கு வரும்.

கீரைகளைப் பெரும்பாலும் நோய்கள் தாக்காது. ஆனால், பூச்சித்தாக்குதல் இருக்கும். கீரைப் பாத்திகளுக்கு அருகில் சாமந்தி, ஆமணக்குச் செடிகளை நட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அதையும் மீறி பூச்சித்தொல்லை இருந்தால்… மஞ்சள் நிற டப்பாக்களில் கிரீஸ் தடவி, பாத்திகளின் அருகில் போட்டு விட்டால் போதும். பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும். கீரைகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக அமுதக்கரைசல், பஞ்சகவ்யா ஆகியவற்றை தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’

——————————————————————————–

தெளிப்புப் பாசனம்தான் நல்லது !

கீரை சாகுபடிக்கு கௌதம் சொல்லும் சாகுபடி முறை!

This entry was posted in பேட்டி, வாழ்த்துக்கள்.
Press Ctrl+g to toggle between English and Tamil

12 Responses to 50 சென்ட்… மாதம் 30 ஆயிரம்…

 1. Muruga dhas says:

  அருமை

 2. hari says:

  வீட்டில் சின்னதாக ஒரு தோட்டம் போட யோசனை
  மாடி வீடு அல்லது அப்பார்மென்ட் மாதிரியான வீடுகளில், இருக்கும் கொஞ்ச இடத்திலும் நம் சமையல் அறையில் இருப்பதை வைத்தே, கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியாக செடிகளை வளர வைக்கமுடியும். கொஞ்சம் பொறுமையும், அதிகமான விருப்பமும் இருந்தாலே போதும் வீட்டை சுற்றி பசுமை சூழ செய்து விடலாம்.

  வீட்டில் மண்தரையில் செடிகள் போட இடம் இல்லாதவர்கள் கவலை பட வேண்டாம். மண் தொட்டி, சிமென்ட் தொட்டி இல்லை என்றாலும் பரவாயில்லை, நல்ல நிலையில் உள்ள பிளாஸ்டிக் சாக்கே போதுமானது. தொட்டிகளை வாங்கியதும் அதில் தண்ணீர் தெளித்து ஓர் நாள் முழுவதும் ஊற விடுங்கள். சாக்கை வெளி பக்கமாக நன்கு சுருட்டி அல்லது மடித்து பாதி சாக் அளவு ரெடி பண்ணி வைத்து கொள்ளுங்கள்.

  செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைப்பது இல்லை. ஆகவே நீங்கள் எடுக்ககூடிய மண்ணையும் வளபடுத்த சில முறைகளை கையாண்டால் போதும். முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கள், குச்சிகளை எடுத்து போட்டு விட்டு அதனுடன் காய்ந்த சாணம் (இல்லை என்றாலும் பரவாயில்லை ) கிடைத்தால் தூள் செய்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.

  வேப்பமரம் வீட்டின் அருகில் இருந்தால் அதன் இலைகளை (காய்ந்த அல்லது பச்சை) முடிந்தவரை சேகரித்து தொட்டி , சாக்கில் பாதி அளவு போடுங்கள் அதன்பின் மண்ணை
  போட்டு நிரப்புங்கள். இலை அப்படியே மக்கி உரமாகி விடும் மற்ற இலைகளும் போடலாம் ஆனால் வேப்பிலை மிக மிக சிறந்தது. இதன் கொட்டைகளை சேகரித்து உடைத்து தூளாக்கி போடலாம், வேறு வேதி உரங்கள் ஏதும் தேவை இல்லை. செடிகளும் நன்கு செழித்து வளரும்.

  இப்போது நமக்கு மிகவும் அவசியமான செடிகளை பற்றி மட்டும் பாப்போம். தக்காளி, கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும் தனியாக தேடி போக வேண்டாம் என்பது ஒரு வசதி.

  புதினா, கீரை ———- நாம் உபயோகித்தது போல் மீதம் இருக்கும் அந்த தண்டுகளை மட்டும் சேகரித்து நல்லதாக பார்த்து எடுத்து அதை அப்படியே மண்ணில் ஊன்றி வைக்க வேண்டும் .கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும் , பின் தண்ணீர் தெளித்து விடுங்கள். பொன்னாங்கண்ணி கீரையையும் இந்த முறை படி வளர்க்கலாம்.

  கொத்தமல்லி– வாங்கும் மல்லி வேருடன் இருந்தால் மீண்டும் தளிர்க்க வைக்க முடியும் , கட் பண்ணி எடுத்தது போக இருக்கும் வேர் பகுதியை அப்படியே மண்ணில் புதைத்து வைத்து விடுங்கள். பின் தண்ணீர் விடுங்கள். தண்டு கீரையை வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் மறுபடி வளர்க்க முடியும்.

  தக்காளி,கத்தரி,பாகை ——— கடையில் காய்கறி வாங்கும் போதே இரண்டு அல்லது மூன்றை நன்கு பழுத்ததாக வேண்டும் என்று கேட்டு வாங்கி கொள்ளுங்கள். பின் அதன் தோலை எடுத்து விட்டு விதைகளை மட்டும் ஒரு பேப்பரில் போட்டு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். சாணி கிடைத்தால் அதை தண்ணீரில் கரைத்து அதில் விதைகளை ஒரு நாள் ஊற வைத்தால் நல்லது, இல்லைஎன்றாலும் பரவாயில்லை.

  பிறகு தக்காளி, கத்தரி விதைகளை கொஞ்சம் எடுத்து அப்படியே தொட்டியில் விதைத்து விடுங்கள். கொஞ்சம் வளர்ந்த பின்னர் தனியாக கன்றுகளை எடுத்து சாக்கு, தொட்டியில் நட்டு விடுங்கள், தண்ணீர் விடுங்கள் . அவ்வளவுதான்.

  பச்சை மிளகாய்க்கு, மிளகாய் வற்றலில் இருந்து விதைகளை எடுத்து கொள்ளுங்கள்.

  இப்போது மழை காலமாக இருப்பதால் செடிகளை நட இதுவே உகந்த நேரம். வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறி விடுங்கள்.

  அக்கறையும், கவனமும் இருந்தால் வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும்.
  இப்படிக்கு உங்கள் :
  ஹரி கிருஷ்ணன்

 3. hari krishnan says:

  வீட்டுக் காய்கறி தோட்டம்
  காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த நபர், சீரான திட்ட உணவிற்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும். ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஒரு நபர் ஒரு நாளுக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது.

  வீட்டுக்காய்கறித் தோட்டம்
  மேற்கண்ட கருத்துக்களை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்கு தேவையான காய்கறிகளை வீட்டுக் காய்கறி தோட்டத்தில், நம்மிடம் உள்ள சுத்தமான தண்ணீர், சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன் மூலம், உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், இதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும், சுற்றுச் சூழல் மாசுபாட்டையும் தடுக்க முடிகிறது. பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ளமுடிகிறது. மிகக் குறைவான இடத்தில் சாகுபடி செய்யப்படுவதால், மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ள முடிகிறது. மேலும் பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை செடிகளில் இருந்து அகற்றினால் போதுமானதாகும். இதனால் காய்கறிகளில் நச்சு இரசாயணங்கள் படிவதை தவிர்க்க முடிகிறது.

  வீட்டுக்காய்கறி தோட்டத்திற்கான இடம் தேர்வு செய்தல்
  வீட்டின் பின்புறத்தில் அல்லது முன்புறத்தில் இருக்கும் காலி இடத்தை தேர்வு செய்யலாம். ஏனெனில் குடும்ப நபர்களை கொண்டு முறையாக பராமரிக்கவும், வீட்டின் சமயலறை மற்றும் குளியலறை கழிவு நீரை பயன்படுத்திக் கொள்ளவும் இது சுலபமாக இருக்கும். காலியாக இருக்கும் இடத்தைப் பொறுத்தும், எத்தனை நபருக்கு காய்கறி தேவைப்படும் என்பதை பொறுத்தும் காய்கறி தோட்டத்தின் அளவு நிர்ணயம் செய்ய வேண்டும். காய்கறித் தோட்டத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் முடிந்தவரை சதுரவடிவத்தைவிட செவ்வக வடிவ வீட்டுக்காய்கறி தோட்டத்தை தேர்வு செய்யலாம். ஊடுபயிர் சாகுபடி மற்றும் தொடர் சாகுபடி முறையை மேற்கொள்ள வேண்டும். நான்கு அல்லது ஐந்து நபர்கள் உள்ள ஒரு சராசரி குடும்பத்திற்கு தேவைப்படும் காய்கறியை உற்பத்தி செய்ய 5 சென்ட் இடம் இருந்தால் போதுமானதாகும்.
  நிலம் தயார் செய்தல்
  நிலத்தை 30-40 செமீ ஆழத்திற்கு மண்வெட்டி கொண்டு கிளறிவிட வேண்டும். கற்கள், புதர்கள், களைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு எருவை இட்டு நன்கு கலக்கி விட வேண்டும். தேவைக்கேற்ப 45 செமீ ஜ் 60 செமீ என்ற இடைவெளியில் பார்சால் அமைக்க வேண்டும். தேவைப்பட்டால் படுக்கை முறையிலும் சாகுபடி செய்யலாம்.

  விதைத்தல் மற்றும் நடவு செய்தல்

  நேரடி விதைப்பு பயிர்களான வெண்டை, கொத்தவரை மற்றும் தட்டைப்பயறு போன்றவற்றை பாரின் ஒரு புறத்தில் 30 செமீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். முழு செடியாக பிடுங்கப்படும் அல்லது அறுவடை செய்யப்படும் தண்டுக்கீரை, சிறுகீரை ஆகியவற்றை, 1 பகுதி விதை 20 பகுதி மணல் என்ற விகிதத்தில் கலந்து கை விதைப்பு செய்யவேண்டும். சின்ன வெங்காயம், புதினா, கொத்தமல்லி போன்றவற்றை வரப்பின் ஓரத்தில் நட வேண்டும்.
  நாற்று நடவு செய்யும் பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றை நாற்றங்கால் படுக்கைகளில் அல்லது தொட்டிகளில் ஒரு மாதத்திற்கு முன்பே விதைக்க வேண்டும். விதைப்பு முடிந்து மண்ணை மூடியவுடன், எறும்பு வருவதை தடுக்க 250 கிராம் வேப்பம்புண்ணாக்கை தூவவேண்டும். விதைத்து 30 நாட்கள் கழித்து தக்காளியையும், 40-45 நாட்கள் கழித்து கத்தரி, மிளகாய், சிறு வெங்காயம் ஆகியவற்றையும் நாற்றங்களில் இருந்து எடுத்து நடவு செய்ய வேண்டும். தக்காளி, கத்தரி, மிளகாய் ஆகியவற்றிற்கு 30-45 செமீ என்ற இடைவெளியில் பாரின் ஒரு பக்கத்திலும், சின்ன வெங்காயத்திற்கு 10 செமீ இடைவெளியில் பாரின் இரு பக்கமும் நட வேண்டும்.

  நடவு செய்தவுடன் முதல் தண்ணீரும் நட்ட மூன்றாம் நாள் மறுதண்ணீரும் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளுக்கு இளம் பருவங்களில் இரு நாட்களுக்கு ஒரு முறையும், பிற்பருவங்களில் நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் நீர் பாய்ச்ச வேண்டும்.

  ஒரு வருடத்திற்கு, வீட்டுச்செலவுக்கு தேவைப்படும் காய்கறிகளை தொடர்ச்சியாக உற்பத்தி செய்வதே வீட்டு காய்கறி தோட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சில முக்கிய வழிமுறைகளை கையாண்டு இந்த நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

  பல பருவ தாவரங்களை மற்ற பயிர்களில் நிழல் படியாதவாறும், ஊட்டச்சத்திற்கு போட்டி ஏற்படாதவாறும் தோட்டத்தின் மூலையில் நடவேண்டும்.

  தோட்டத்தின் நடுவில் உள்ள நடைபாதை மற்றும் ஏனைய நடைபாதையின் அருகிலும் குறுகிய கால பயிர்களான கொத்தமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, பாலக் போன்றவற்றை நட வேண்டும்.

  ஊடுபயிராக தண்டுகீரை, சிறுகீரை பயிர் செய்யவும்.

  பலவருட பயிர்கள்
  முருங்கை, வாழை, பப்பாளி, கப்பக்கிழங்கு, கருவேற்பிலை, அகத்தி.
  பயிரிடும் திட்டம்
  இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி வீட்டுக் காய்கறி தோட்டத்திற்கான பயிரிடும் திட்டமுறை (மலை பகுதி தவிர)
  பாத்தி எண் காய்கறியின் பெயர் பருவம்
  01. தக்காளி மற்றும் வெங்காயம் ஜுன் – செப்டம்பர்
  முள்ளங்கி அக்டோபர் – நவம்பர்
  பீன்ஸ் டிசம்பர் – பிப்ரவரி
  வெண்டைக்காய் மார்ச் – மே
  02. கத்தரி ஜுன் – செப்டம்பர்
  பீன்ஸ் அக்டோபர் – நவம்பர்
  தக்காளி ஜுன் – செப்டம்பர்
  தண்டுகீரை, சிறுகீரை மே
  03. மிளகாய் மற்றும் முள்ளங்கி ஜுன் – செப்டம்பர்
  தட்டவரை / காராமணி டிசம்பர் – பிப்ரவரி
  பெல்லாரி வெங்காயம் மார்ச் – மே
  04. வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி ஜுன் – ஆகஸ்டு
  முட்டைக்கோஸ் செப்டம்பர் – டிசம்பர்
  கொத்தவரை ஜனவரி – மார்ச்
  05. பெரிய வெங்காயம் ஜுன் – ஆகஸ்டு
  பீட்ருட் செப்டம்பர் – நவம்பர்
  தக்காளி டிசம்பர் – மார்ச்
  வெங்காயம் ஏப்ரல் – மே
  06. கொத்தவரை ஜுன் – செப்டம்பர்
  கத்தரி மற்றும் பீட்ருட் அக்டோபர் – ஜனவரி
  07. பெரிய வெங்காயம் ஜுலை – ஆகஸ்டு
  கேரட் செப்டம்பர் – டிசம்பர்
  பூசணி ஜனவரி – மார்ச்
  08. மொச்சை, அவரை ஜுன் – ஆகஸ்டு
  வெங்காயம் ஜனவரி – ஆகஸ்டு
  வெண்டைக்காய் செப்டம்பர் – டிசம்பர்
  கொத்தமல்லி ஏப்ரல் – மே
  இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற காய்கறியின் பெயர் மற்றும் பருவம்
  • Posted by vijayakumar.A on October 9, 2010 at 4:00pm
  • View Blog

  இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு மாதிரி
  வீட்டுக் காய்கறி

  தோட்டத்திற்கான பயிரிடும்
  திட்டமுறை (மலை பகுதி தவிர)

  பாத்தி எண் காய்கறியின் பெயர் பருவம்
  1 முள்ளங்கி அக்டோபர் – நவம்பர்
  2 பீன்ஸ் அக்டோபர் – நவம்பர்
  3 கத்தரி மற்றும் பீட்ருட் அக்டோபர் – ஜனவரி
  4 வெங்காயம் ஏப்ரல் – மே
  5 கொத்தமல்லி ஏப்ரல் – மே
  6 கேரட் செப்டம்பர் – டிசம்பர்
  7 வெண்டைக்காய் செப்டம்பர் – டிசம்பர்
  8 பீட்ருட் செப்டம்பர் – நவம்பர்
  9 முட்டைக்கோஸ் செப்டம்பர் – டிசம்பர்
  10 பீன்ஸ் டிசம்பர் – பிப்ரவரி
  11 தட்டவரை / காராமணி டிசம்பர் – பிப்ரவரி
  12 தக்காளி டிசம்பர் – மார்ச்
  13 வெண்டைக்காய் மார்ச் – மே
  14 பெல்லாரி வெங்காயம் மார்ச் – மே
  15 தண்டுகீரை, சிறுகீரை மே
  16 வெங்காயம் ஜனவரி – ஆகஸ்டு
  17 கொத்தவரை ஜனவரி – மார்ச்
  18 பூசணி ஜனவரி – மார்ச்
  19 பெரிய வெங்காயம் ஜுலை – ஆகஸ்டு
  20 தக்காளி மற்றும் வெங்காயம் ஜுன் – செப்டம்பர்
  21 கத்தரி ஜுன் – செப்டம்பர்
  22 தக்காளி ஜுன் – செப்டம்பர்
  23 மிளகாய் மற்றும் முள்ளங்கி ஜுன் – செப்டம்பர்
  24 கொத்தவரை ஜுன் – செப்டம்பர்
  25 வெண்டைக்காய் மற்றும் முள்ளங்கி ஜுன் – ஆகஸ்டு
  26 பெரிய வெங்காயம் ஜுன் – ஆகஸ்டு
  27 மொச்சை, அவரை ஜுன் – ஆகஸ்டு

  மேற்கண்ட திட்டமுறையில் வருடம் முழுவதிற்கும் ஒவ்வொரு பாத்தியிலும் சில பயிர்களை இடைவிடாது இடம் பெறச்செய்யப்பட்டுள்ளன. முடிந்த அளவு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு நெடுங்கால பயிரும், குறுகிய கால பயிரும் இணைக்கப்பட்டுள்ளன.

  காய்கறி தோட்டத்தின் பயன்கள்
  முதலில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகளை பூர்த்தி செய்து கொண்டு, பின்னர் அளவுக்கு அதிகமாக உள்ளவற்றை விற்கவும் அல்லது பண்டம் மாற்றி கொள்ளவும் செய்யலாம். சில சமயங்களில், வருமானம் ஈட்டுவதே காய்கறி தோட்டத்தின் முதன்மையான நோக்கம் ஆகிவிடுகிறது. எந்த சமயத்திலும் ஒரு நல்ல ஊட்டச்சத்தின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் ஊட்டச்சத்தும், வருவாய் ஈட்டுவதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையனவாகும்.

  வீட்டு காய்கறி தோட்டத்தின் பொருளாதார ஆதாயங்களும் பயன்களும்
  காய்கறி மற்றும் வருமானம் ஆகிய இரண்டு ஆதாயங்களும் வீட்டு காய்கறி தோட்டத்தில் கிடைக்கிறது.

  வீட்டில் பராமரிக்கப்படும் கால்நடைக்கு தேவையான தீவனமும் மற்றும் ஏனைய வீட்டு உபயோகத்திற்கு தேவைப்படும் விறகு போன்ற மூலப்பொருட்களும் கிடைக்கின்றன.

  வீட்டுக்காய்கறி தோட்டத்துடன் கூடவே கால்நடை வளர்ப்பு, பெண்கள் சுயவருமானம் பெறுவதற்கு மூலாதாரமாக அமைகின்றது

  இப்படிக்கு உங்கள் :
  ஹரி கிருஷ்ணன்

 4. hari says:

 5. hari says:

  முள்ளங்கி சாகுபடி
  காய்கறிப் பயிர்களில் மிகக் குறைந்த காலத்தில் அதாவது 45 நாட்களில் அறுவடைக்கு வருவது முள்ளங்கி மட்டுமே. சில ஆண்டுகளுக்கு முன்பாக குளிரான மலைப்பிரதேசங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்த முள்ளங்கி இன்று அனைத்து சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக 40 வயதை கடந்தவர்கள் தங்களது உணவில் மண்ணுக்கு அடியில் விளைகின்ற கிழங்கு வகைகளை உண்ணக்கூடாது என மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால் முள்ளங்கியை சிறியவர்கள்,பெரியவர்கள் என அனைவரும் உண்ணலாம். முள்ளங்கியில் சுமார் 90 சதவீதத்துக்கும் மேலாக தாது உப்புகள் நிறைந்த நீர்தான் உள்ளது.
  முள்ளங்கி சாகுபடியின் சிறப்பம்சங்கள்:
  1.குறைந்த காலத்தில் நிறைந்த லாபம் தரும் காய்கறிப் பயிர்.
  2.மற்ற காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்வதை விட முள்ளங்கி சாகுபடி செய்தால் செலவு மிகக் குறைவு.
  3.கால நிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகள் மிகக் குறைவு.
  4.முள்ளங்கியின் கிழங்கு மற்றும் இலைகள் மருத்துவக்குணமுள்ள உணவுப் பொருளாகும்.
  5.விற்பனை செய்வது எளிது
  6.குறைந்த அளவு உள்ள விவசாயிகளுக்கு சிறந்த பயிர்.
  7.ஊடுபயிர் சாகுபடிக்கு உன்னதமான பயிர்
  8.சாகுபடி செய்வதற்கும், அறுவடை செய்வதற்கும் எளிதாக இருப்பதால் வீட்டில் உள்ள ஆட்களே போதுமானது.
  9.தினசரி உணவிற்கு பயன்படும், சாம்பார், புளிக்குழம்பு,வத்தல் குழம்பு போன்றவற்றில் இதனை பயன்படுத்தலாம்.
  10.வீட்டுத் தோtaத்தில் சாகுபடி செய்வதற்கு உகந்த பயிர்.
  மண்வளம்:
  நல்ல வடிகால் வசதியுள்ள மணற்பங்கான செம்மண், வண்டல்மண் மற்றும் தண்ணீர் தேங்காத கரிசல் மண் ஏற்றது.மண் பொபொலவென்று இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கக்கூடாது. எல்லாப் பருவங்களிலும் விரைந்து வளரும் தன்மை இருந்தாலும் நல்ல தரமான கூடுதல் மகசூல் பெருவதற்கு வெப்பநிலை 10-15 செ. இருக்க வேண்டும். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை சமவெளிப் பகுதிகளில் சாகுபடி செய்யலாம்.
  விதையளவு மற்றும் ரகங்கள்:
  ஒரு ஏக்கர் நடவு செய்ய 4 கிலோ விதை தேவைப்படும். வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ள முள்ளங்கியில் பல ரகங்கள் இருந்தாலும் அதிக மகசூல் தரவல்ல வீரிய ஒட்டு ரகங்கள் மற்றும் உயர் விளைச்சல் ரகங்களான கோ1,பூசாரஸ்மி,பூசாசெட்கி,பூசாதேஸி மற்றும் தனியார் விதை உற்பத்தி நிறுவனத்தின் வீரிய ஒட்டு ரக விதைகளையும் பயன்படுத்தலாம்.
  நிலம் பண்படுத்துதல் மற்றும் அடியுரமிடல்:
  ஏக்கருக்கு 5 டன் முதல் தொழு உரத்தை இட்டு அதன் பின் புழுதிபட நான்கு உழவுகள் செய்து நிலத்தை பண்படுத்த வேண்டும். மண்ணின் பொபொலப்பைப் பொருத்து முள்ளங்கியின் மகசூல் இருக்கும். மேலும் கடைசி உழவிற்கு முன்பாக ஏக்கருக்கு 100 கிலோ ஸ்பிக் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் அல்லது ஸ்பிக் டிஏபி 50 கிலோ,ஸ்பிக் யூரியா 25 கிலோ மற்றும் பொட்டாக்ஷ் 50 கிலோ இவற்றை அடியுரமாக இட்டு கடைசி உழவு செய்ய வேண்டும். இதன்பிறகு நிலத்தை சமன்படுத்தி பாத்திகள் அமைத்து, அந்த பாத்திகளில் வரிசையாக 15*10 செ.மீ இடைவெளியில் விதைகளை ஒரு செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும்.
  நீர்ப் பாசனம் மற்றும் பின்செய் நேர்த்தி:
  நீர்ப் பாசனத்தில் கவனம் செலுத்துவது முள்ளங்கி விளைச்சலுக்கு மிக மிக முக்கியமானது. விதை ஊன்றியவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப மண்ணின் ஈரம் உலராதவாறு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். முள்ளங்கியில் மண் ஈரம் உலராது அடிக்கடி நீர் பாய்ச்சினால் அதிக மகசூல் பெறலாம். மணற்பாங்கான நிலங்களில் முள்ளங்கி சாகுபடி செய்கின்ற விவசாயிகள் தெளிப்பு நீர்ப் பாசனம் செய்வது சாலச்சிறந்தது.இதனால் தண்ணீர் தேவையும் குறைகின்றது. விதை ஊன்றி சுமார் 10 தினங்களுக்குள் நெருக்கமாக உள்ள செடிகளை களைந்து விட வேண்டும். அவ்வாறு களைந்த செடிகளைக் கொண்டு விதை முளைக்காத இடங்களில் ஊன்றி விட வேண்டும். இதனால் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம்.
  கலை நிர்வாகம் மற்றும் மேலுரமிடல்:
  முள்ளங்கிக்கு ஆட்களைக் கொண்டு ஒருமுறை, களை எடுத்தால் போதுமானது. இதன் வளர்ச்சி வேகமாக இருப்பதால் விரைவாக நிலத்தை மூடி விடும். இதன் பிறகு களைகள் முளைக்க வாய்ப்பில்லை. முள்ளங்கிக்கு களை எடுக்கும்போது சிறிய வகை, களைகளை கொத்திப் பயன்படுத்த வேண்டும். களை எடுக்கும்போதே, மண் அணைத்து விட வேண்டும். நடவு செய்த 20 நாளில் ஏக்கருக்கு 30 முதல் 40 கிலோ ஸ்பிக் யூரியா உரத்தை இட வேண்டும்.
  பயிர்ப் பாதுகாப்பு:
  மற்ற காய்கறிப் பயிர்களைக் காட்டிலும் முள்ளங்கியில் பூச்சி, நோய்த் தாக்குதல் குறைவுதான். பூச்சிகளைப் பொருத்தமட்டில் அசுவிணி, வண்டுகள் தான். இவற்றைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைச்சாறு அல்லது வேப்பெண்ணைக் கரைசலைக் கொண்டு தெளிக்கலாம். வேர் அழுகல்,இலை கருகல் போன்ற பூஞ்சான் நோய்களை வரவிடாமல் தடுக்க விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் மருந்து கலந்து 24 மணி நேரம் சென்ற பின்பு விதைகளை ஊன்ற வேண்டும்.
  ஊடுபயிருக்கு உகந்தது முள்ளங்கி:
  பல பயிர்களில் முள்ளங்கியை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். அதிலும் குறிப்பாக காய்கறிப் பயிர்களான தக்காளி, கத்தரி போன்ற பயிர்களில் சிறந்த முறையில் ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். காய்கறிப் பயிர்களில் இரண்டு வரிசைக்கு இடையில் முள்ளங்கியை பயிர் செய்யலாம். இதனால் காய்கறி பயிர்களில் களை முளைப்பது குறைகிறது. உபரி வருமானமும் கிடைக்கிறது. மேலும் கிழங்கை பிடுங்கி அறுவடை செய்வதால் காற்றோட்டம் உண்டாகி மண் பொலபொலவென்றாகின்றது. இதனால் பிரதான பயிர்களின் மகசூல் கூடுகின்றது.
  அறுவடை மற்றும் விற்பனை செய்தல்:
  நடவு செய்த 45 ஆவது நாள் முதல் அறுவடையைத் தொடங்கிவிடலாம். 60 நாட்களுக்குள் அறுவடை முடிந்து விடும். அறுவடைக்கு தயார் நிலை வந்தவுடன் முள்ளங்கி கிழங்கின் கழுத்துப் பாகம், சுமார் ஒரு அங்குலம் வரை மேலாக வந்துவிடும். அதைப்பார்த்து அறுவடைப் பருவத்தை தெரிந்து கொள்ளலாம். அறுவடைக்கு முதல் நாள் நன்றாக நீர்ப் பாய்ச்சி அதன் பின் அறுவடை செய்தால் முள்ளங்கியின் கிழங்குகள் ஒடிந்துவிடாமல் எளிதாக அறுவடை செய்யலாம். முள்ளங்கியின் இலையை கீரையாக பயன்படுத்தலாம் அல்லது ஆடு மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தலாம். அறுவடை செய்த முள்ளங்கியை தண்ணீரில் சுத்தமாக கழுவி அதன் பிறகு விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
  மகசூல் மற்றும் வருமானம்:
  இரண்டு மாதத்தில் ஏக்கருக்கு 10-12 டன் மகசூல் மூலம் ரூபாய் 40000/- முதல் 48000/- வரை வருமானத்தை கொடுக்கக்கூடிய மிகச் சிறந்த பயிர் முள்ளங்கி என்பதால் குறைந்த காலத்தில் நிறைந்த வருவாய் பெறக்கூடிய பயிர்களின் வரிசையில் முள்ளங்கி முதல் இடத்தில் உள்ளது.

  • lakshman says:

   சூப்பர் சார் . அருமை அருமை . எனக்கும் விவசாயம் பார்க்கணும் என்று ஒரு ஆசை.இருக்கு

 6. R.MURUGESAN says:

  உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் .

 7. Cauveri selvan says:

  அருமையான முயற்சி அறுதல் அளிக்கிறது வாழ்த்துக்கள்.

 8. நன்றி தங்கள் அறிவ்ரைக்கு பழனி சிவஷண்முகராஜன் வாழ்த்துக்கள்

 9. sakthivel says:

  உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் எனக்கும் இயற்கை விவசாயம் மிது அர்வம். தங்களுடன் இனைந்து கொள்ளாம.

 10. வெள்ளிங்கிரி says:

  வணக்கம் சார் உங்களை படித்தவர்கள் எல்லாம் விவசாயம் செய்யுவதது எனக்கு மிகவும் மகிழ்ச்சி மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள் உங்களுடை அனுபவங்களை மற்றவருகளுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்குங்கள் உங்களை போல் படித்தவர்களும் விவசாயம் தூண்டு கோளாக இருங்கள் வாழ்க வளமுடன்

 11. vijayakumar.s says:

  வாழ்த்துக்கள் நண்பரே ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *