நனது முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா

பழங்குடி இனப்பெண்களை மான பங்கப்படுத்திய காவலரை காப்பாற்றும் அரசை நினைத்து உங்களுக்கு அருவருப்பு வரவில்லை. தனக்கு எதிராக தீர்ப்பு சொன்ன நீதிபதி மருமகன் மீதே கஞ்சா வழக்கு போட்டவர் மீது உங்களுக்கு அருவருப்பும் ஆத்திரமும் வரவில்லை. வளர்ப்பு மகன் கல்யாணத்தில் சாம்பார் வாளி தூக்கி தனது உயர் பதவிக்கே தீராத களங்கம் ஏற்படுத்தியவருக ்கு அரசு வீடு வழங்கிய போது உங்கள் ரத்தம் கொதிக்கவில்லை. ஆனால் கலைஞரை பற்றி பேசும் போது மட்டும் உங்களுக்கு அளவிடமுடியாத குரோதம்.. உங்கள் நியாயம் புல்லரிக்கிறது. நீதிமன்றத்திலேய ே, தனது கையெழுத்து தனதில்லை என்று அபாண்டமாக பொய் சொன்னவர் முதல்வராக வேண்டும் என்று தவம் இருந்த உங்களுக்கு நீதி நியாயம் தர்மம் பற்றி பேச தகுதி இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மனைவி, துணைவி பற்றி பேசும் நீங்கள், இன்னொரு பெண்ணின் கணவர் இறந்த போது உடன் கட்டை ஏறப்போகிறேன் என்று கபட நாடகம் ஆடியவர் பற்றி என்ன சொல்வீர்கள்?

source : http://savukku.net/home1/1530-2012-04-14-08-51-18.html