வினவும், சவுகுக்கும், நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்ன?

வினவும், சவுகுக்கும் உண்மையுலேயே இந்த சமுகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறதா?

இந்த கேள்வி வரக் காரணம்,  அவர்களின் பதிவுகளும், செயல் திட்டங்களும் தான் நண்பர்களே,

அவர்களின் சமிபத்திய பதிவுகள்

இந்தியக் கடற்படையே, தமிழகத்தை விட்டு வெளியேறு

ஜெயக்குமார்: இந்திய ஆசியோடு சிங்களக் கடற்படையின் நரபலி!

 1. நமக்கு தான் எத்தனை வாய்ப்புகள் ஒன்று பட்டு செயல்பட, ஆனால்
 2. நாம் தான் எக்காரணம் கொண்டும் ஒன்றுபட்டு நிற்பது இல்லை என்று சத்தியம் செய்துவிட்டு வாழ்ந்து வருகிறோம்.
 3. எந்த நல்லவனையும் ஆதரிப்பது இல்லை, ஆதரித்தாலும் அவன் என்ன என்னைவிட பெரியவனா என்ற எண்ணம். நாம் முன்னேற விட்டாலும் பரவயில்லை அவன் முன்னேறிவிட கூடாது என்கின்ற பொறமை

இது தான் இன்றைய இந்திய சமுதாய நிலைமை. இதற்க்கு எந்த ஒரு மனிதனும் விதி விளக்கு அல்ல, நான் உற்பட.

இது மாற வேண்டும் என்றால்,

பொது வாழ்வில் இருக்கின்ற ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய இரண்டு,

1 . தொண்டு
2 . துறவு

இந்த இரண்டும் விவேகானந்தர் இந்த மண்ணின் சிறப்புகளாக சொல்லியவை. என்னை பொறுத்த வரை இது வேதம். இவை இரண்டும் உள்ள மனிதர்கள் தான் இந்த நாட்டை ஆள வேண்டும். 

இல்லையேல் இப்படி பட்ட அவலங்கள் தான் தினந்தோறும் நடக்கும். ஆனால் இன்றைய நிலையில் இப்படிப்பட்ட மனிதர்கள் அரசியலில் இல்லையா என்றால், இல்லை அவர்களை அவர்களை கட்சிகளும், நாமும் சரியாக இனம்கண்டு ஒதுக்கி வைத்துளோம்.

இது இன்று நேற்றல்ல, காலம் தொட்டு நாம் பின்பற்றி வரும் மரபு, உதாரணம் வேண்டுமா,

1 . மகாகவி பாரதி
2 . கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி
3 . தோழர் ஜீவா

என்னுடைய விருப்பம் எல்லாம் , அப்படிப்பட்ட ஒரு மனிதனின் பின்னால் நாம் ஏன் இந்த தேர்தலில் நிற்ககூடாது. அப்படிப்பட்ட ஒரு மனிதனின் வெற்றி நமது வெற்றி அல்லவா? இது நமது குழந்தைகளுக்கு செய்கின்ற ஒரு கடமை, இல்லையேல் நாம் நமது சந்ததியருக்கு துரோகம் செய்தவர்கள் ஆவோம்.

பொது வாழ்வில் தூய்மையை எதிர்பார்க்கும் நாம் ஒவ்வோருவருக்கும் இன்றைய தேவை,
1 . துறவு
2 . தியாகம்
3 . நம்பிக்கை

ஆம், நண்பர்களே, நான்தான் என்கின்ற அகங்காரத்தை துறந்து, எனது குடும்பம், எனது சந்தோசம் மட்டும் என்கின்ற சுகத்தை தியாகம் செய்து, முடியும் என்கின்ற நம்பிக்கையோடு வாருங்கள்.

வருகின்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் நாம் நமது மாற்றத்தை தொடங்குவோம்.

மிண்டும் தலைப்புக்கு வருகிறேன், வினவும், சவுகுக்கும் உண்மையிலேயே இந்த சமுதாயம் மாறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் என்றால், வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் ஒரு நல்லவரை வெற்றி பெற செய்து இந்த சமுகத்திக்கு ஒரு செய்தியை சொல்ல முடியுமா? ஒரு அரசியல் மாற்றத்திற்கு ஆரம்பமாக இருக்க முடியுமா?, அதற்கு உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் நண்பர்களை இணைத்து செயல்படுத்த முடியுமா?

இல்லை என்றால், தமிழகத்திலே அடிமைபட்டு கிடக்கும் எனது சொந்தங்களை குறை சொல்ல எந்த ஒரு தகுதியும் இல்லை என்பது தான் எதார்த்தம் மற்றும் உண்மை.

அதை செய்யாமல் போகின்ற நாம் தான் உண்மையான குற்றவாளிகள், கருணாவோ, ஜெயவோ, வை கோ வோ, ராமதாசோ, எனது அடிமை பட்டு கிடக்கின்ற எனது தமிழ் சொந்தங்களோ அல்ல.

நண்பர்களே, மீண்டும் முடிவாக ஒரு உண்மை சொல்கின்றேன். ஒரு மாற்றம், புரட்சி என்பது, நடுத்தர வர்க்கத்தினரால் தான் சாத்தியம், இன்றைய நிலை,

1 . அடிமை பட்ட தமிழ் நடுத்தர வர்க்க இளைநர்கள் புரட்சியை எதிர்பார்த்து கொடம்பாக்கத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, விஜய் என்று சிதறி கிடக்கிறார்கள்.
2 . நாங்கள் அடிமைகள் அல்ல, அறிவாளிகள் என்று நினைக்கின்ற நடுத்தர வர்க்க இளைநர்கள், நாடு கடந்து பணம் என்ற அரக்கனின் பிடியுள் சிக்குண்டு. எனது குடும்பம், எனது சந்தோசம் என்று சிக்குண்டு கிடக்கிறார்கள்.

இப்படிபட்ட சூழ்நிலையுள், மாற்றம் என்பது கடினமான ஒன்று தான். ஆனால் முடியாதது இல்லை.

This entry was posted in அரசியல் மாற்றம், சுவாமி விவேகானந்தர், வேண்டுகோள்.
Press Ctrl+g to toggle between English and Tamil

3 Responses to வினவும், சவுகுக்கும், நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்ன?

 1. Santhini says:

  இப்போதுதான் அறிந்தேன்…..வாழ்த்துக்கள் …முயற்சிகள் வெற்றியடைய !

 2. வேலு.சாந்தமூர்த்தி says:

  நன்றி அக்கா, தங்கள் வருகைக்கும் , வாழ்த்துகளுக்கும்.

 3. // நண்பர்களே, மீண்டும் முடிவாக ஒரு உண்மை சொல்கின்றேன். ஒரு மாற்றம், புரட்சி என்பது, நடுத்தர வர்க்கத்தினரால் தான் சாத்தியம் //

  நிதர்சனமான வார்ததைகள் ……….ஆனால் பொருளியல் நோக்கிலான நம் சமூக factori-கள் இந்த நடுநிலை குடும்பங்களை ஒரு மாய வலைக்குள் வைத்துக் கொண்டுள்ளது.

  1. திரைப்படம்/பொழுதுபோக்கும்
  2. அரசியல்/அதிகார நிலை
  3. சமுதாயம் மீதான ஒரு பயம்

  இந்த மூன்றோடு புதிதாக கலாச்சார வியாபாரிகள் ………………

  ஆகவே இப்படியான மாயவலைக்குள் சிக்கி தன்னிலை மாறி நிற்கும் நடுவர்க்கம் விழித்தெழும் போது துனிசியாவில் நடந்த மாற்றம் நம் நாட்டிலும் ஏற்படலாம்?

  ஆனால் பெற்ரோல் விலை, காய்கறி விலை ஏறும் போதும், கோடிக்கணக்கான பணங்கள் ஊழல் நடைபெறும் போதும் மக்கள் பொத்திக் கொண்டு இருக்கும் மனநிலையின் உண்மையான காரணம் என்பதைத் தேட வேண்டும்? இது ஒரு வித மனநோயின் அறிகுறி. ஒட்டு மொத்த சமுதாயமும் இந்த மனநோயினால் தாக்குண்டு இருப்பதன் காரணியை ஆய்வுக்கு உட்படுத்த பேரவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *