தமிழா, இவனல்லவா மனிதன், தமிழன், தன்னலம் துறந்தவன், தலைவன்!!!

தமிழா, பார், இவனல்லவா மனிதன், தமிழன். நீயும் நானும் எந்த தலைவனுக்காக காத்துகொண்டு இருக்கிறோம், அவனுடைய சிந்தனையை பார்!. நான் மீண்டும் சொல்கிறேன், நாம் விரும்புகிற மாற்றம் இந்த மனிதனில் தான்,  தமிழருவி மணியன் மூலம் தான் தொடங்க வேண்டும்.  ஆம் அப்பொழுதுதான் அந்த மாற்றம் உண்மையானதாக, நிலையானதாகவும் இருக்கும். வாருங்கள் நண்பர்களே இவரின் பின்னால் அல்ல, இவருடன் இணைந்து மாற்றத்தை நோக்கி நடப்போம்.

தமிழருவி மணியன் பற்றி ஒரு நண்பர் இங்கு சொல்லியுருப்பது இதுதான்.

அரசியலில் நல்லவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று தமிழகத்தில் யாரிடமாவது கேட்டால், சமகாலத்தில் உள்ளவர்களின் பெயரை அவர்களின் பதிலில் எதிர்பார்க்க முடியாது. இரண்டு வருடம் கட்சியில் இருந்தால் போதும் ராக்கெட் வட்டியில் கடன் வாங்கி, காசு கொடுத்து எம்.பி சீட் வாங்கி விடலாம் என்று இருப்பவர்கள் மத்தியில், அங்காங்கு அரசியல் அப்பாவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிபட்டவர்களில் ஒருவர் தான் தமிழருவி மணியன்.

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் 9th Jan 2011 மாலை நடைபெற்றது. நிகழ்வில் எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ , பழ.நெடுமாறன், தியாகு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழருவி மணியன் அவர்களின் உரை உங்களின் பார்வைக்காக

This entry was posted in அரசியல், அரசியல் மாற்றம், வேண்டுகோள்.
Press Ctrl+g to toggle between English and Tamil

7 Responses to தமிழா, இவனல்லவா மனிதன், தமிழன், தன்னலம் துறந்தவன், தலைவன்!!!

 1. KR says:

  நண்பரே
  அருமையான பதிவில் தேவையான சொற்பொழிவை தந்ததற்கு நன்றி.
  அன்பன்

 2. வேலு.சாந்தமூர்த்தி says:

  நன்றி நண்பரே, தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

 3. anbu says:

  கொழப்பம் மட்டுமே மிச்சம்

 4. வேலு.சாந்தமூர்த்தி says:

  அன்பு, தங்கள் வருகைக்கு நன்றி.
  என்ன குழப்பம் உங்களுக்கு?, செயல் இல்லாத பொழுது, பேச்சு மட்டும் தான், அனைத்தும் குழப்பம் தான். களத்தில் இறந்க்கி விட்டால் தேளிவு தானாக பிறக்கும், எல்லாம் சுபமாக முடியும்.

  நல்லவர்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு நல்ல செயல்களுக்காக ஒன்றுபட்டு போராடினால் அனைத்தும் வெற்றியே!!

 5. durai says:

  நல்வர்கள் வந்தால் மாற்றம் உறுதிதான்..!! படித்த நாம் ஒன்றுபட்டால மாற்றம் உறுதி..!!ஒன்றுபடுவோம் வெல்வோம் ..!!

 6. ramasamy says:

  தொடரும் பட்டியலில்…நெல்லை கண்ணன், பழ.நெடுமாறன், காங்கிரஸ் கட்சியினரே ஸ்ரீபெரும்புதூர் மனிதவெடிகுண்டு வெடிப்பின் போடு துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தலை தெறிக்க ஓடியபோது மொழிபெயர்க்கச் சென்ற தா.பாண்டியன், மணல் கொள்ளையைத் தடுத்திட நீதிமன்றப் படிகளை மிதித்துக் கொண்டிருக்கும், னெல்லை அண்ணாச்சி ஆர். நல்லகண்ணு , மற்றும் கிடைத்துவிட்ட வாரியத்தலைவர் பதவியோடு பனைமரத்துக்கு வக்கலாத்து வாங்கிக்கொண்டு திருப்தி அடைந்துவிட்ட குமரி அனந்தன் …. என தமிழர் பட்டியல் ஏராளம் உண்டு நண்பரே!

 7. வேலு.சாந்தமூர்த்தி says:

  ஆமாம், ராமசாமி அவர்களே, உங்கள் கருத்து சரிதான். இந்த நல்லவர்களுக்கு எந்த கட்சியும் எம்.எல்.ஏ அல்லது எம்.பி பதவியை தர போவது இல்லை. நாம் ஏன் ஒரு சில நல்ல மனிதர்களை எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆக்கி, அவர்களின் பின்னால் நல்லவர்கள் அரசியலுக்கு வர துணை நிற்க கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *