விவேகானந்தரின் கருத்துக்கள் உங்கள் சிந்தனைக்கு

இன்று விவேகானந்தரின் பிறந்த நாள்….தேசிய இளைஞர் எழுச்சி நாள்…நல் வாழ்த்துக்கள் நண்பர்களே!!! அவரின் கருத்துக்கள் உங்கள் சிந்தனைக்கு….

“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!”

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

இதைவிட எளிதாக சொல்லமுடியாது நண்பர்களே!!

சிந்தியுங்கள், நாம் நம்பிக்கைவைத்தால், செயல்பட்டால் எதுவும் சாத்தியமே. இதே மனிதர் தான் சொன்னார்,  “நம்பிக்கையே வாழ்க்கை, நம்பிக்கை இன்மையே மரணம்

அதற்க்கு நமக்கு தேவை நாம் அனைவரும் இந்த மனிதர் சொன்ன தொண்டு மற்றும் துறவு கொள்ள வேண்டும்…. நீங்கள் தயாரா, நான் தயார் நண்பர்களே!!!!

அன்புடன்,
வேலு.சாந்தமூர்த்தி