இந்திய, தமிழக அரசியல் மாற்றம் உங்கள் கைகளில்…..

நண்பர்களே வணக்கம்,

ஆம் நண்பர்களே, வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், நாம் நினைத்தால் நாம் கனவு காண்கின்ற ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடுயும். முழு மாற்றம் இல்லை என்றாலும், மக்கள் நல்லவர்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள். நல்லவர்களை கட்சிகள் தான் ஆதரிப்பது இல்லை என்கின்ற ஒரு செய்தி உறுதி செய்யப்படும்.

ஆனால் நம்மில் எந்தனை பேர் உழைக்க, செயல்படுவதற்கு ,தியாகத்திற்கு தயாராக இருக்கிறோம். நாமுண்டு, நம்குடும்பம் உண்டு என்றல்லவா இருக்கிறோம். இதில் வைகோவையும், ராமதாசையும், திருமாவளவனையும், விஜயகாந்தையும் குறை சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது. கலைஞரையும், ஜெயலலிதா அவர்களையும் குறை சொல்லலாம், ஏனென்றல் அவர்கள் முழு அதிகாரத்தில் இருந்து நல்லவர்களாக இருக்கவில்லை. தவறு செய்திருக்கிறார்கள்.

நண்பர்களே, எந்த ஒரு மாற்றமும் ஒரு இரவில் வந்துவிடாது, அதேபோல் எந்த ஒரு மாற்றமும் தியாகமும் உழைப்பும் இல்லாமல் இல்லை.

நாம் அனைவரும் காமராஜும் , கக்கனும் போன்ற தலைவர்கள் தேவை என்று நினைக்கிறோம் ஆனால் அதற்காக நாம் என்ன செய்தோம். காந்திய யுகத்தில் காமராஜும் , கக்கனும் உருவாக முடிந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில், காமராஜும் , கக்கனும் சாத்தியமா?

நண்பர்களே, நாம் தூய்மையானவர்களை ஏமாளிகள் என்றல்லவே ஒதுக்கி வைத்துள்ளோம்.

சிந்தியுங்கள் நண்பர்களே!, நாம் ஏன், நான்கு ஐந்து நல்லவர்களை, அரசியலில், பொது சேவையில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் வெற்றி பெற பாடுபடகூடாது? இந்த வெற்றி மேலும் நல்ல மனிதர்களை அரசியலை நோக்கி வர துணிவை தருமே!!

நண்பர்களே, இது சாத்தியம் இல்லை என்றால், வைகோவும், ராமதாசும், விஜயகாந்தும், சீமானும் மட்டும் தனியொரு மனிதர்களாக என்ன செய்து விட முடியும். ஜெயலலிதா மற்றும் கலைஞரை அவர்களுடைய கட்சியில் உள்ள அடிமைகள் போல் இல்லாமல் எதிர்த்து தானே அரசியல் செய்து இருக்கிறார்கள்.

என்ன செய்வது, அவர்கள் தனித்து நின்றால் நாம் அவர்களின் குறைகளை பூதகண்ணாடி கொண்டல்லவா பார்க்கிறோம், அல்லது இவர்கள் ஜெய்க்க மாட்டார்கள் எனவே வாக்களிக்க தேவை இல்லை என்றல்லவா இருந்து விடுகிறோம்.

நண்பர்களே, சிந்தியுங்கள், நம்புங்கள். மாற்றத்தை ஆரம்பிக்க, ஒரு சிறு கருத்துவேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவோம் செயல்படுவோம்.

முடிவாக சொல்கிறேன், நான்கு ஐந்து நல்லவர்களை வேண்டாம், ஒரே ஒரு நல்லவரை ஜெய்க்க வைப்போம், நமது இந்திய, தமிழக அரசியல் மாற்றம் என்ற ஒரு புரட்சியை ஆரம்பிப்போம்.

அன்புடன்,
வேலு. சாந்தமூர்த்தி.